Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுனாமி குழந்தை பேபி 81
#10
9 பெற்றோர் உரிமை கொண்டாடிய சுனாமி குழந்தை அபிலாஷ்அமெரிக்க டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்பு

வாஷிங்டன்,மார்ச்.4- 9 பெற்றேhர் உரிமை கொண்டாடிய சுனாமி குழந்தை அபிலாஷ், அமெரிக்க டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்கிறhன்.

இலங்கையில் சுனாமி அலை தாக்கியதில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஈழத்தமிழர்கள். தமிழ்க்குடும்பத்தை சேர்ந்த பெண்ணின் கையில் இருந்த 4 மாத கைக்குழந்தை சுனாமிஅலையால் அடித்து செல்லப்பட்டது. பிறகு அந்த குழந்தை இடிபாடுகளுக்கு இடையே கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு - பேபி-81†† என்ற பெயரில் பராமரிக்கப்பட்டது.

அது பற்றி கேள்விப்பட்ட முருகப்பிள்ளை ஜெயராஜh தம்பதியினர் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்க மருத்துவமனைநிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.ஏனெனில் அந்த குழந்தைக்கு அவர்களையும் சேர்த்து 9 பெற்றேhர் உரிமை கொண்டாடினர். பிறகு கோர்ட்டு உத்தரவுபடி அந்த குழந்தைக்கு உரிமை கொண்டாடிய பெற்றேhருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குழந்தை அபிலாஷ் முருகப்பிள்ளை தம்பதிக்கு பிறந்தது என்று நிரூபணம் ஆனது. அதனால் அவர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அதன் மூலம் அந்த குழந்தை உலக புகழ் பெற்றது.

சுனாமி அலை நிவாரண நிதி திரட்ட அந்த குழந்தை நேற்று அமெரிக்க டி.வி.(ஏ.பி.சி.)யில் தோன்றியது. - குட்மார்னிங் அமெரிக்கா†† என்ற நிகழ்ச்சியில் நேற்று அது தோன்றியது.

தகப்பனார் அருகில் நிற்க தாயை அணைத்தபடிகுழந்தை டி.வி.யில் தோன்றியது. - எங்கள் கிராமத்தில் அனைவரும் சுனாமி அலையால் அடித்து சென்றுவிட்டனர். அதனால் நான் என்குழந்தை மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியைகூட கொண்டாடவில்லை†† என்று முருகப்பிள்ளை கூறினார். அவர் அந்த கிராமத்தில் சவரத்தொழிலாளியாக இருக்கிறhர்.

ஏ..பி.சி. , டி.வி. நிறுவனம் செலவில் முருகப்பிள்ளை குடும்பத்தினர் அமெரிக்கா சென்றனர். - நியுயார்க் நகரில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.இங்குதான் பனிக்கட்டிகளை கண்டேன் என்று முருகப்பிள்ளை மனைவி ஜெனிதா கூறினார.; அந்த டி.வி நிகழ்ச்சியில் கிடைக்கும் வருமானம் அனைத்தும் சுனாமி நிவாரண நிதிக்கு வழங்கப்படும். அந்தக்குழந்தையை அமெரிக்க நடிகை உமாதுர்மன் மடியில் வைத்துக் கொண்டு- போஸ் கொடுத்த காட்சியும் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது.

தினகரன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 01-15-2005, 12:48 PM
[No subject] - by KULAKADDAN - 02-14-2005, 06:42 PM
[No subject] - by vasisutha - 02-14-2005, 07:50 PM
[No subject] - by tamilini - 02-14-2005, 09:17 PM
[No subject] - by Malalai - 02-24-2005, 05:57 AM
[No subject] - by Mathan - 03-04-2005, 03:41 AM
[No subject] - by vasisutha - 10-23-2005, 05:55 PM
[No subject] - by Mathan - 10-23-2005, 07:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)