Yarl Forum
சுனாமி குழந்தை பேபி 81 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சுனாமி குழந்தை பேபி 81 (/showthread.php?tid=5779)



9 தாய்மார் உரிமை கொண்டாடும் குழந்தையின் படம் - Vaanampaadi - 01-15-2005

<img src='http://www.qctimes.com/data/photos/stories/120/1043596/1043596_1105767384.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.qctimes.com/data/photos/stories/350/1043596/1043596_1105767384.jpg' border='0' alt='user posted image'>

இந்த குழந்தையின் உண்மையான பெயர் தெரியாததால் அக்குழந்தைக்கு
தற்சமையம் "Baby 81" என பெயரிடப்பட்டு கல்முனை வைத்தியசாலையில் உள்ளது. இக்குழந்தைக்கு 9 தாய்மார் உரிமை கொண்டாடுகிறார்களாம். ஒரு சில தாய்மார் "இக்குழந்தை தமக்கு கிடைக்காவிடில் தாம் தற்கொலை செய்யப்போவதாக சொல்கிறார்களாம்"

என்ன கொடுமையான விடயம்


- Vaanampaadi - 01-15-2005

இலங்கையில் சுனாமியில் தப்பிய குழந்தைக்கு உரிமை கோரும் 9 பெண்கள்

கொழும்பு, ஜன. 15-

கடந்த மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலைகள் கோர தாண்டவத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர் கள் பலியாகி விட்டனர். இன்னும் பல லட்சம் பேர் காயம் அடைந்தும், உடமைகளை இழந்தும் முகாம்களில் தங்கி உள்ளனர்.

இலங்கையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அங்குள்ள ஒரு கிராமத்தில் சுனாமியில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஒரு குழந்தையை மீட்பு படையினர் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஒரு வயதுக்கும் குறைவான அந்த குழந்தை சிகிச்சைக்குப் பின் பிழைத்துக் கொண்டது.

அந்த குழந்தை பிழைத்துக் கொண்டாலும் இப்போது புதிய பிரச்சினை முளைத்து இருக்கிறது. அந்த குழந்தையின் பெற்றோர் என்ன ஆனார்கள். அவர்கள் சுனாமியில் சிக்கி இறந்தார்களா அல்லது உயிர் பிழைத்தார்களா என்று அதிகாரிகளுக்கு புரியாத நிலையில் அந்த குழந்தைக்கு உரிமை கொண்டாடி ஒரு பெற்றோர் வந்துள்ளனர்.

அவர்கள் வந்த நேரத்தில் இன்னொரு பெண் அந்த குழந்தைக்கு நான் தாய் என்று உரிமை கொண்டாடினார். இப்போது 9 பெண்கள் அந்த குழந்தையின் தாய் நான்தான் என்று கூறி குழந்தையை கேட்கிறார்கள். அதிகாரிகள் இதற்கு தீர்வு காண முடியாமல் திகைத்துப்போய் இருக்கி றார்கள்.

மரபணு சோதனை நடத்தி அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பதை கண்டுபிடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

நன்றி: மாலைமலர்


சர்ச்சைக்குரிய குழந்தை விவகாரம் தீர்ந்தது - Vaanampaadi - 02-14-2005

டி.என்.ஏ சோதனை முடிவு கிடைத்தது
சர்ச்சைக்குரிய குழந்தை விவகாரம் தீர்ந்தது
கொழும்பு நிருபர் திங்கட்கிழமை 14 பெப்ரவரி 2005 15:52 ஈழம்
இரண்டு பெற்றோர்கள்; உரிமை கோரிவந்த சர்ச்சைக்குரிய குழந்தை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ. சோதனை மூலம் பிரஸ்தாப குழந்தை உரிமை கோரிய பெற்றோர்களில் ஜெயராஜா தம்பதிகளுடையது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலையை அடுத்த கடற்கரையிலிருந்து மீட்கப்பட்ட நான்கு மாதக்குழந்தை தம்முடையதே என்று இரண்டு பெற்றோர்கள் உரிமை கோரியதை அடுத்து விடயம் நீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்றிலும் இவ்விவகாரம் சிக்கலானதை அடுத்து உரிமை கோரும் பெற்றோரையும் பிரஸ்தாப குழந்தையையும் டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார். கொழும்பில் கடந்த வாரம் டி.என்.ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனை முடிவு இன்று கல்முனை நீதிமன்றுக்கு அனுப்பப்பட்டது. முடிவு பற்றி கல்முனை நீதிமன்றப் பதிவாளர் எம்.எஸ்நஸீர் தெரிவிக்கையில்ää

குழந்தையின் பெற்றோருக்கு முடிவு குறித்து விரைவில் தெரியப்படுத்தப்படும் என்றும் எதிர்வரும் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நீதிமன்றால் உத்தியோபூர்வமாக குழந்தை பெற்றோரிடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முடிவு பற்றி அறிந்த கல்முனை ஆதார வைத்தியசாலை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் கோபால் முகுந்தன் கூறுகையில் - டி.என்.ஏ சோதனை முடிவை தாம் நீதிமன்றப் பதிவாளரூடாக அறிந்து கொண்டதாகவும் முடிவு குறித்து மகிழ்ச்சி என்றும் கூறினார்.

குழந்தையின் பெயர் குறித்து இதுவரை சரியான தகவல் கிடைக்காதபோதும் அபிலாஷ் என்பதே தமது குழந்தையின் பெயர் என்றும் 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி குழந்தை பிறந்தது என்றும் பெற்றோர் கூறியிருந்தனர்.

Puthinam


- KULAKADDAN - 02-14-2005

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- vasisutha - 02-14-2005

ஒரு மாதிரி பிரச்சினை தீர்ந்தது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- tamilini - 02-14-2005

குழந்தை உரிய இடத்தில சேர்ந்ததில மகிழ்ச்சி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


&quot;பேபி 81&quot; என்று அழைக்கப்பட்ட &quot;அபிலாஷ்&quot; அமெரிக்கா பயணம் - Vaanampaadi - 02-23-2005

அமெரிக்காவில் உள்ள "ABC TV" நிறுவனம் விடுத்த அழைப்பின் பேரில் 4 மாத குழந்தை "அபிலாஷ்" தனது பெற்றோர்களுடன் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை நியு யோர்க் பயணமாகி அங்கு இரண்டு வார காலம் தங்கியிருப்பான், அத்துடன் அவர்கள் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தால் நடாத்தப்படும் "Good Morning America" எனும் நிகழ்ச்சியிலும் பங்குபற்றுகிறார்கள் .......
"நான் ஒருபோதும் என் வாழ்க்கையில் கனவில் கூட காணாத விஷயம் இது" என அந்த பையனின் தந்தை முருகுப்பிள்ளை ஜெயராஜ் கூறினார்......


Just a week after reuniting, 'Baby 81' and parents prepare for trip to U.S.

Krishan Francis
Canadian Press


February 23, 2005
<img src='http://a123.g.akamai.net/f/123/12465/1d/media.canada.com/cp/world/20050223/w022326a.jpg' border='0' alt='user posted image'>

KALMUNAI, Sri Lanka (AP) - A week after 4-month-old tsunami survivor Abilass Jeyarajah was reunited with his parents after a wrenching custody battle, the family of the boy known worldwide as "Baby 81" set off Wednesday on a trip to New York.

Sporting black spots on his forehead and cheek to ward off evil, Abilass and his parents left for the capital, Colombo, from this eastern coastal town, waved on their way by relatives and neighbors. They were to fly to the United States on Sunday.

A week ago, hospital officials finally handed Abilass back to his mother and father after a court ruled that DNA tests had confirmed they were his parents. The couple had been unable to hold on to Abilass as the deadly waves of the Dec. 26 tsunami smashed through their hometown.

Initially, eight other couples tried to claim him, sparking a 52-day drama that touched hearts around the world, and the baby boy became a symbol of the tragedy that killed nearly 31,000 people on the island.

The hospital named the boy "Baby 81" because he was the 81st admission to the facility that day.

Following the huge media interest in his story, ABC TV invited Abilass and his parents to spend two weeks in New York, and to appear on the network's "Good Morning, America" show.

"This is something I never dreamed of in my life," said the boy's father, Murugupillai Jeyarajah. "I will go and see the country first. Maybe one day I will get a chance to send my child there for education."

Since Abilass returned to his parents Feb. 16, hoards of friends, relatives and curious well-wishers have descended on the family home to see him. Relatives gave the infant a gold chain, bracelets and rings to welcome him back, and he was awarded a birth certificate officially declaring his identity.

Abilass suffered from a minor cold last week but is otherwise healthy, his father said, adding that he had resumed taking mother's milk and the occasional biscuit.

Among several gifts Abilass received was a "Beanie Baby," from 11-year-old Natascha Yogendra from New York, who visited the child a few hours before he left for Colombo.

"I don't use it anymore so I brought it for the baby," Natascha said as she placed her gift next to Abilass and kissed his forehead.

Yogendra's parents, Sri Lankan-born father Nat and American mother Debbie, run "Project Book Angels," donating children's books to developing nations.

Jeyarajah said that despite his happiness at the return of his son, he felt sad whenever people referred to Abilass as "Baby 81," or the "tsunami child."

"This is why I want to send the child away for education, because this name is going to stick and could have a big psychological affect on my son," he said.

He also said he had lodged a police complaint over inaccurate rumors that millions of rupees (thousands of U.S. dollars or euros) had been donated for Abilass.

"Elders in the family fear that something might happen to the child because of people seeking to get the money they think we have," Jeyarajah said. "I have no money and have not been to work since the tsunami. Neither have I received government help, so where do I get the money from?"

"But, I have faith in God who has saved the life of my child and given him back to me," he said.

© The Canadian Press 2005


- Malalai - 02-24-2005

சோகத்திலும் ஒரு சுகம்.....


அமெரிக்காவில் குழந்தை அபிலாஷ் - vasisutha - 03-02-2005

<b>அமெரிக்காவில் குழந்தை அபிலாஷ்</b>

<img src='http://img129.exs.cx/img129/3135/baby7kt.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img129.exs.cx/img129/9843/baby20mh.jpg' border='0' alt='user posted image'>


- Mathan - 03-04-2005

9 பெற்றோர் உரிமை கொண்டாடிய சுனாமி குழந்தை அபிலாஷ்அமெரிக்க டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்பு

வாஷிங்டன்,மார்ச்.4- 9 பெற்றேhர் உரிமை கொண்டாடிய சுனாமி குழந்தை அபிலாஷ், அமெரிக்க டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்கிறhன்.

இலங்கையில் சுனாமி அலை தாக்கியதில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஈழத்தமிழர்கள். தமிழ்க்குடும்பத்தை சேர்ந்த பெண்ணின் கையில் இருந்த 4 மாத கைக்குழந்தை சுனாமிஅலையால் அடித்து செல்லப்பட்டது. பிறகு அந்த குழந்தை இடிபாடுகளுக்கு இடையே கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு - பேபி-81†† என்ற பெயரில் பராமரிக்கப்பட்டது.

அது பற்றி கேள்விப்பட்ட முருகப்பிள்ளை ஜெயராஜh தம்பதியினர் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்க மருத்துவமனைநிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.ஏனெனில் அந்த குழந்தைக்கு அவர்களையும் சேர்த்து 9 பெற்றேhர் உரிமை கொண்டாடினர். பிறகு கோர்ட்டு உத்தரவுபடி அந்த குழந்தைக்கு உரிமை கொண்டாடிய பெற்றேhருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குழந்தை அபிலாஷ் முருகப்பிள்ளை தம்பதிக்கு பிறந்தது என்று நிரூபணம் ஆனது. அதனால் அவர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அதன் மூலம் அந்த குழந்தை உலக புகழ் பெற்றது.

சுனாமி அலை நிவாரண நிதி திரட்ட அந்த குழந்தை நேற்று அமெரிக்க டி.வி.(ஏ.பி.சி.)யில் தோன்றியது. - குட்மார்னிங் அமெரிக்கா†† என்ற நிகழ்ச்சியில் நேற்று அது தோன்றியது.

தகப்பனார் அருகில் நிற்க தாயை அணைத்தபடிகுழந்தை டி.வி.யில் தோன்றியது. - எங்கள் கிராமத்தில் அனைவரும் சுனாமி அலையால் அடித்து சென்றுவிட்டனர். அதனால் நான் என்குழந்தை மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியைகூட கொண்டாடவில்லை†† என்று முருகப்பிள்ளை கூறினார். அவர் அந்த கிராமத்தில் சவரத்தொழிலாளியாக இருக்கிறhர்.

ஏ..பி.சி. , டி.வி. நிறுவனம் செலவில் முருகப்பிள்ளை குடும்பத்தினர் அமெரிக்கா சென்றனர். - நியுயார்க் நகரில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.இங்குதான் பனிக்கட்டிகளை கண்டேன் என்று முருகப்பிள்ளை மனைவி ஜெனிதா கூறினார.; அந்த டி.வி நிகழ்ச்சியில் கிடைக்கும் வருமானம் அனைத்தும் சுனாமி நிவாரண நிதிக்கு வழங்கப்படும். அந்தக்குழந்தையை அமெரிக்க நடிகை உமாதுர்மன் மடியில் வைத்துக் கொண்டு- போஸ் கொடுத்த காட்சியும் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது.

தினகரன்


சுனாமி குழந்தை பேபி 81 - adsharan - 10-23-2005

குப்பைக்குள் கிடந்த குண்டுமணி

கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடல்கோளின் பின்னர் கல்முனையில் இரண்டு நாட்களின் பின் தெய்வாதீனமாக உயிர்தப்பி நம் நாட்டில் மட்டுமல்ல உலக நாடுகளில் கூட இக் குழந்தையின் பெற்றோர்கள் யார் எனப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சைக்குள்ளான "பேபி 81" என அனைவராலும் அழைக்கப்பட்ட கல்முனையைச் சேர்ந்த ஜெயராஜ் ஜினித்தா தம்பதியின் மகன் "அபிலாஷ்" தான் இக் குழந்தை. என்ன இப்போது ஞாபகம் வந்து விட்டதா? அப்பாடா.....

கடல்கோளின் போது மூன்று மாத கைக்குழந்தையான அபிலாஷ் காணாமல் போனதும் இரண்டு நாட்களின் பின் ஆசிரியர் ஒருவரினால் குப்பைக்குள் கிடந்து கண்டெடுக்கப்பட்டதும் பின்னர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதும் இக் குழந்தைக்கு உரிமை கோரி பல பெற்றோர்கள் வைத்தியசாலைக்குச் சென்றதும். வைத்தியசாலை நிர்வாகம் இப் பிரச்சினையை பொலிஸாருக்குத் தெரியப் படுத்தியதும், பொலிஸார் இதனை நீதிமன்றம் வரை கொண்டு சென்றதும் கடைசியில் நீதிமன்றம் மரபணுப் பரிசோதனை மூலம் உண்மைப் பெற்றோரைக் கண்டறிய உத்தரவு பிறப்பித்ததும் இறுதியில் ஜெயராஜ் ஜினித்தா தம்பதிகளே குழந்தையின் உண்மைப் பெற்றோர் என நீதிமன்றம் தீர்ப்புக் கூறி அவர்களிடம் அபிலாஷை ஒப்படைத்ததும் உலகத்திற்கே தெரிந்த விடயம்.

தனது மகன் அபிலாஷ் கைக்குக் கிடைத்துவிட வேண்டும் என்ற ஏக்கத்துடனும் பரபரப்புடனும் இருந்த ஜெயராஜ் ஜினித்தாவிற்கு, அபிலாஷைப் பயன்படுத்தி சிலர் பணம் சம்பாதித்த செய்தி தெரிந்திருக்க வாய்ப்பில்லை....

அபிலாஷின் பெற்றோர்களை அவர்களது இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அபிலாஷ் இப்போது தத்தித்தவழ்ந்து எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டான். அம்...மா... அப்...பா... என இப்பொழுதுதான் மழலை மொழி பேச ஆரம்பித்திருக்கிறான்.

அபிலாஷின் தந்தை ஜெயராஜ் சிறிய சலூன் கடை ஒன்றின் மூலமே தமது குடும்ப சீவியத்தை நடத்தி வருகின்றார். கடல்கோளினால் இவர்களது வீடும் முற்றாக சேதமடைந்து விட்டது. குழந்தை காணாமல் போனது முதல் அது கைக்குக் கிடைக்கும் வரை இருவரும் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்கள்.

அபிலாஷ் வைத்தியசாலையில் இருந்த அந்த 52 நாட்கள் தொடக்கம் நீதிமன்றம் ஊடாக தமது கைக்குக் கிடைக்கும் வரை அவனைக் காண்பித்துப் பணம் சம்பாதித்தவர்களே அதிகம் என ஜெயராஜ் மன வேதனையோடு கூறினார்.

ஏன்? இப்படிக் கூறுகின்றார் எனக் கேட்ட போது தமது மன ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்தினார்...

இன்று நானொரு பெரும் பான்மை இனத்தவனாக அல்லது முஸ்லிமாக இருந்திருந்தால் எங்களது நிலைமை வேறாக இருந்திருக்கும். நானொரு தமிழனாகவும் அதிகம் தாழ்த்தப்பட்ட ஒரு இனத்திலும் பிறந்து விட்டேன்.

மகன் அபிலாஷ் எங்களை விட்டுப் பிரிந்திருந்த அந்த 52 நாட்களும் வேதனை மிகுந்த நாட்களாகவே இருந்தன. எங்கள் மன வேதனையைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக எவருமேயிருக்கவில்லை.

மகன் எனது கைக்குக் கிடைத்துவிட வேண்டுமென்பதற்காக நிறையப் பணம் செலவழித்து இருக்கின்றேன். அந்த நேரத்தில் நிறையப் பேருக்கு பார்த்தும் பாராமலும் உதவி செய்திருக்கின்றேன். இன்று அவர்கள் எல்லோரும் நன்றி மறந்து விட்டார்கள்.

என் மகன் அபிலாஷைக் காட்டிப் படம் பிடித்து, மகனின் பேரில் வங்கியில் கணக்குத் திறந்து உழைத்தவர்கள்தான் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அவை எல்லாம் இப்பொழுதுதான் தெரியவருகின்றது.

என் மகன் அபிலாஷின் எதிர்காலத்திற் கென்றோ, எங்களுக்கென்றோ எவரும் பெரிதாக உதவி செய்ய முன்வரவில்லை. மகன் கிடைக்கு முன்னர் 2 இலட்சம் ரூபா கடன் பட்டுத்தான் செலவு செய்தேன். இன்றுகூட அந்தப் பணத்திற்கு 10 ஆயிரம் ரூபா வட்டி கட்டிக் கொண்டு வருகிறேன்.

அன்று எங்களைத் தேடி எங்கேயோ எல்லாம் இருந்து வருவார்கள். இன்று எங்களைத் தேடி எவரும் வருவதுமில்லை. எங்களது குடும்ப நிலைமைபற்றி விசாரிப்பதும் இல்லை. அந்தளவிற்கு வறுமையில் இருக்கின்றேன்.

மகன் அபிலாஷுக்கு இதயப் படபடப்புத் தன்மை அதிகமாக இருப்பதாக வைத்தியர் வேறு சொல்லியிருக்கின்றார்.

நான், மனைவி, மகன் மூவரும் அமெரிக்கா போய் வந்ததையே ஊரில் உள்ளவர்களும் நண்பர்களும் எல்லோரும் பெருமையாய்க் கதைக்கின்றார்கள். இந்தப் பெருமையைத் தவிர வேறு ஒன்றும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

எங்களை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்ற அ.ஆ.இ நிறுவனம் கூட மகனின் எதிர்காலத்திற்கென்று ஒரு உதவியும் செய்யவில்லை.

எங்களுக்குதவி என்று கிடைத்தது அமெரிக்காவிலுள்ள தமிழர்கள் எங்களைச் சந்தித்த போது உதவிய (240 டொலர்) இலங்கை நாணயப் பெறுமதிப் படி 48 ஆயிரம் ரூபாவைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை.

என்னைச் சந்திப்பவர்கள், கதைப்பவர்கள் பலர் என்னிடம் அமெரிக்கா சென்று வந்திருக்கின்றாய் உனக்கென்ன இலட்சக்கணக்கில் உழைத்திருப்பாய் என்று சொல்கின்றார்கள். இவற்றைக் கேட்கும் போதெல்லாம் மன வேதனையாக இருக்கின்றது எனக்கு எனது மகன் கிடைத்ததே பெரிய விடயம்.

சில நேரம் நான், மனைவி, மகன் மூவரும் சொந்தக்காரர்களின் வீட்டிற்கு அல்லது வெளியில் எங்காவது சென்றால் சிலர் எங்களைப் பார்த்து "கடல்கோள்" போகுது என்று சத்தம் போட்டு கத்துகின்றனர். மகனைப் பார்ப்பவர்கள் கூட "சுனாமி பேபி 81" என்றே அழைக்கின்றனர். இதனால் மனைவியும் அழுது விடுகிறாள். இவற்றை எல்லாம் பார்க்கும் போது எனது மகனின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்திலுள்ளேன்.

இப்போதெல்லாம் அபிலாஷைப் பற்றியும், அவனது எதிர்காலம் பற்றியுமே பயப்படுகின்றேன். எங்களுக்கு இந்தச் சமுதாயம் "சுனாமி" என்ற பட்டப்பெயரைக் கொடுத்துவிட்டால் அதைப் போலொரு அவமானத்தை எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. எங்களது மனவேதனையை யார் புரிந்து கொள்வார்கள்?

இப்போது நான் இந்தச் சமுதாயத்திற்குள் வைத்து எனது மகனை வளர்க்க விரும்பவில்லை. ஏனெனில், அவனை எல்லோரும் "கடல்கோள் பேபி 81" என அழைக்கத் தொடங்கினால் அவனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என நினைக்கின்றேன்.

எனது மகனின் எதிர்காலம் கருதி வெளிநாடு ஒன்றில் வளர்ப்பதற்கே விரும்புகின்றேன். எனது குடும்பத்தின் சங்கடமான இந் நிலையைக் கருத்தில் கொண்டு மனித நேயமுள்ளவர்கள் வெளிநாட்டில் புகலிடம் தந்தால் பெரும் புண்ணியமாய் இருக்கும். எது எப்படி இருந்தாலும் என் மகன் அபிலாஷை தெய்வக் குழந்தையாகவே கருதுகின்றேன் என்றார்.

உண்மையில் ஜெயராஜ் ஜினித்தா தம்பதி மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகிருப்பது அவர்களைச் சந்தித்த பிற்பாடுதான் விளங்கியது. அவர்கள் இப்போது துன்பப்படும் போதுதான் உதவி செய்ய வேண்டும். இதற்கு மனித நேயமுள்ள மனிதர்கள் முன்வர வேண்டும்
நன்றி dinakkural


- vasisutha - 10-23-2005

ஏன் இதை நகைச்சுவைப் பகுதியில் போட்டிருக்கிறீர்கள்.
இது பற்றி யாழில் உள்ள தலைப்புகள்..


<b>9 தாய்மார் உரிமை கொண்டாடும் குழந்தையின் படம்</b>
Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=3021

<b>சர்ச்சைக்குரிய குழந்தை விவகாரம் தீர்ந்தது</b>
Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=3644

<b>பேபி 81" என்று அழைக்கப்பட்ட "அபிலாஷ்" அமெரிக்கா பயணம்</b>
Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=3896


- Mathan - 10-23-2005

பழைய தலைப்புக்களின் இணைப்புகளை தந்தமைக்கு நன்றி வசி. அனைத்தையும் ஒன்றாக இணைத்துள்ளேன்.