08-28-2003, 07:51 PM
மேலே நான் கூறியவற்றை உற்று நோக்கினால் உங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம்.
அதாவது முதன்மை நினைவகம்(RAM) மின்சாரம் கொடுக்கப்படாதவிடத்து தனது தரவுகளைத் தொலைத்துவிடும் அதே நேரம் படிப்பு நினைவகம்(ROM) மின்சாரம் இல்லாதவிடத்தும் தரவுகளை வைத்திருக்கும். இதனால்தான் கணணியைத் தொடக்கத்தேவையான தரவுகளை படிப்பு நினைவகத்தில் வைத்திருப்பார்கள் என்றும் ஆனால் அளவில் சிறிய படிப்பு நினைவகமோ, CMOS (சிமொஸ் என்று அழைக்கப்படும்) எனும் சிறிய 64 KB முதன்மை நினைவக வகை ஒருங்கினணச்சுற்றில் வன்வட்டு நெகிழ்வட்டு போன்றன பற்றிய தகவல்களைத்தேடும் என்றும் குறிப்பிட்டேன்.
அப்படியானால் இந்த CMOS எனப்படும் சிறிய நினைவகம் எவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டபோதும் தரவுகளை அழியாமல் வைத்திருக்கிறது?
விடை...
கணணியில் மின்கலம்....
நீங்கள் கணணியை எத்தனை மாதமும் இயக்காமல் மூடி வைத்திருந்தாலும், மீண்டும் இயக்கும்போது அது சரியான நேரத்தைக் காட்டும் கவனித்தீர்களா?
பொதுவாகவே இவ்வாறு நேரத்தைப் பயன்படுத்தும் இலத்திரனியல் சாதனங்களுக்கு பிரதான மின்சாரம் வழங்கப்படா நேரத்திலும் அதன் மணிக்கூட்டின் நேரத்தை தவறவிடாதிருக்கக மிகச்சிறிய மின்கலம் ஒன்று பொருத்தப்பட்டு அதன்மூலம் இத்தகைய நேரங்காட்டி மற்றும் சிறிய நினைவகங்கள் போன்றன சிதைவுறாமல் பாதுகாக்கப்படும்.
இதேதான் கணணியிலும். கணணியின் தாய்ப்பலகையிலுள்ளு சிறிய மின்கலம் மூலம் மேலே குறிப்பிட்ட 64 KB CMOS வகை நினைவகத் தரவுகள் அழியாமல் பாதுகாக்கப்படும்.
நீங்கள் மீண்டும் கணணியை நீண்டகால்த்தின் பின் இயக்கினால் கணணி பிரச்சனையின்றி இயங்கும். இந்த மின்கலத்தை பொதுவாக 5-6 வருடங்களுக்கு மாற்றவேண்டிய அவசியமில்லை. 5-6 வருடப் பழைய கணணிகள் சிலவேளை திடீரென்று தொடங்க மறுத்து தனக்கு வன்வட்டு நெகிழ்வட்டு போன்றவை பற்றி ஒன்றுமே தெரியாது என கூறினால் இந்த மின்கலம் இறந்தமை காரணமாகலாம். பழைய மின்கலத்தை மாற்றி, CMOS இல் உங்கள் கணணியின் வன்வட்டு, நெகிழ்வட்டு, நேரம் பற்றிய தகவலைக்கொடுத்தால் கணணி மீண்டும் பழையபடி இயங்கும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->