08-28-2003, 03:14 PM
[size=18]<b>குளம்பொலி கேட்குமுன்னே..........</b>
இன்னும்
எனது இதயத்தில்
உன் நினைவு தங்கியிருக்கிறது
மழை நின்ற பிறகும்
காய்ந்து போகாத நிலம் போல ..............
இன்றும் எனது எழுத்துக்களில்
உனது நினைவுகளைத்தான்
கனவுத் தூரிகையில்
காயவைக்கிறேன்...............
நினைவிருக்கிறதா?
அன்றொரு நாள்
நீ வழுக்கி விழப் போன போது
ஆதரவிற்கு நான்
கைகளை நீட்டினேன்...................
நீயோ
தங்கப்பட்டைக் கடிகாரம்
எனது கரங்களில்
கட்டியிருக்கிறேனா என்று
சோதனை செய்தாய்..................
நான் பைத்தியகாரன்
சம்யுக்தயைக் கவர வந்த
பிருதிவிராஜன் போல
உன்னைக் கவர வந்தேன்............
பின்னர்தான் தெரிந்தது
என் குதிரையின்
குளம்பொலி கேட்குமுன்னே
என்னை விவாகரத்து செய்தது.........
இந்த பைத்திய மனசு
பாடிப் பறந்த பைங்கிளிக்காக
ராகம் ராகம் இசைக்கிறது...........
என் ஏக்கப் பெருமூச்சுகளில்
நான் கருகிக் கொண்டிருக்கிறேன்
நீண்ட சாலையில்
தனிமைப் பயணம்..........
அமுத சுரபியில்
அட்சய பாத்திரம..........
ஊமை விழிகளில்
உருவக உவமை............
காலம் கழிகிறது
கனவு சிதைகிறது
பாதை தெரிகிறது
பயணம் தொடர்கிறது
இதயம் அழுகிறது
தனிமை சுடுகிறது
நெட்ட நெடுஞ்சாலையில்
நான் மட்டும் தனியாக...........
குளம்பொலி கேட்குமுன்னே
நீ போய் விட்டாய் எனை மறந்து.........
அஜீவன்
இன்னும்
எனது இதயத்தில்
உன் நினைவு தங்கியிருக்கிறது
மழை நின்ற பிறகும்
காய்ந்து போகாத நிலம் போல ..............
இன்றும் எனது எழுத்துக்களில்
உனது நினைவுகளைத்தான்
கனவுத் தூரிகையில்
காயவைக்கிறேன்...............
நினைவிருக்கிறதா?
அன்றொரு நாள்
நீ வழுக்கி விழப் போன போது
ஆதரவிற்கு நான்
கைகளை நீட்டினேன்...................
நீயோ
தங்கப்பட்டைக் கடிகாரம்
எனது கரங்களில்
கட்டியிருக்கிறேனா என்று
சோதனை செய்தாய்..................
நான் பைத்தியகாரன்
சம்யுக்தயைக் கவர வந்த
பிருதிவிராஜன் போல
உன்னைக் கவர வந்தேன்............
பின்னர்தான் தெரிந்தது
என் குதிரையின்
குளம்பொலி கேட்குமுன்னே
என்னை விவாகரத்து செய்தது.........
இந்த பைத்திய மனசு
பாடிப் பறந்த பைங்கிளிக்காக
ராகம் ராகம் இசைக்கிறது...........
என் ஏக்கப் பெருமூச்சுகளில்
நான் கருகிக் கொண்டிருக்கிறேன்
நீண்ட சாலையில்
தனிமைப் பயணம்..........
அமுத சுரபியில்
அட்சய பாத்திரம..........
ஊமை விழிகளில்
உருவக உவமை............
காலம் கழிகிறது
கனவு சிதைகிறது
பாதை தெரிகிறது
பயணம் தொடர்கிறது
இதயம் அழுகிறது
தனிமை சுடுகிறது
நெட்ட நெடுஞ்சாலையில்
நான் மட்டும் தனியாக...........
குளம்பொலி கேட்குமுன்னே
நீ போய் விட்டாய் எனை மறந்து.........
அஜீவன்

