08-28-2003, 01:12 AM
கணணியில் ROM....
இது பல இடங்களில் இருக்கிறது. முக்கியமாக தாய்ப்பலகையில் இருக்கும் BIOS ஏனும் சிலிக்கன் சில்லு இவ்வகை நினைவகமாகும் (Basic Input Output system) இதில் கணணியை தொடக்கத் தேவையான ஆரம்ப கட்ட மென்பொருன் பதிந்து வைக்கப்பட்டிருக்கும்.
செத்ததுபோல் அணைக்கப்பட்டு இருக்கும் கணணி எவ்வாறு உயிர் (மின்சாரம்) கொடுத்தவுடன் தரவுகளை நினைவகத்தில் ஏற்றி இயங்கத்தொடங்குகிறது? உங்கள் இயங்குதளமான வின்டடோஸ் அல்லது லினக்ஸ் வன்வட்டிலேயே பதிந்து வைக்கப்பட்டிருக்கும். இயங்குதளங்கள் முதன்னம நினைவகத்திலேயோ அல்லது நிரந்தர நினைவகங்களிலேயோ சேமித்து வைக்க முடியாதளவு பெரிய மென்பொருட்கள்.
கணணிக்கு உயிர் கொடுத்தவுடன் முதலில் துாண்டப்படுபவர் நுண்செயலி. நுண்செயலியானது BIOS எனப்படும் ஒருங்கினை சுற்றை இயக்கி அதிலுள்ள தகவல்கள் மூலமே உங்கள் கணணியின் பாகங்களை இனங்காண்கிறது. அதாவது நுண்செயலி தனது முதலாவது அறிவுறுத்தலை BIOS இல் தேடும்.
BIOS ஆனது CMOS எனும் 64 KB அளவிலுள்ள சிறிய முதன்மை நினைவக வகை சிலிக்கன் சில்லினுள் உங்கள் தனிப்பட்ட கணணிப் பாகங்கள் பற்றிய தகவல்களை வாசிக்கும். பின்னர் நுண்செயலிக்கு "இந்தக்கணணியில் யானை மார்க் வன்வட்டும் பூனை மார்க் நெகிழ்வட்டும் இருக்கிறது எல்லாப் பாகங்களும் சரியாக இணைக்கப்பட்டு வேலைசெய்கிறதா பார்" எனும் அறிவுறுத்தலை வழங்கும். இதை POWER ON SELF TEST என்று சொல்வோம்.
பின்னர் நுண்செயலிக்கு முதன்மை நினைவகத்தை பரிசோதித்து அது இயங்கக்கூடிய நிலையிலுள்ளதா எனச் சரிபார்க்கச்சொல்லும். பின்னர் நுண்செயலிக்கு மற்றய பாகங்களில் இருக்கும் BIOS களைத் தொடக்கி (ஒலி அட்டை, ஒளி அட்டை போன்றன) அவற்றில் நிரந்தரமாக சேமிக்கப்பட்டிருக்கும் ஆரம்பநிலை அறிவுறுத்தலை இயக்கி அவற்றை தயார் நிலையில் வைத்திருக்கும்படி அறிவுறுத்தலை வழங்கும்.
பின்னர் சிறுபாகங்களை இணைக்கும் பாட்டையை (PCI Bus)கண்டுபிடித்து அது சரியாக இயங்குகிறதா எனப்பார்க்கும்படி சொல்லும். இப்படியே எல்லாவற்றையும் சரிபார்த்து உங்கள் கணணியில் பொருத்தப்பட்டுள்ள பாகங்களுக்கு பொருத்தமான இயங்குதள மென்பொருட்களை (Interrupt handlers -குறுக்கீடு கட்டுப்படுத்தி and device drivers - சாதன இயக்கி)முதன்மை நினைவகத்தில் ஏற்றும்படி கட்டளையிடும் (அதாவது விசைப்பலகை, எலி, திரை, இணைநிலை மற்றும் தொடர்நிலைத் துறைகள் - parallel and serial ports). ...இதன்பொழுது ஏதாவது சிக்கல் ஏற்படின் சிறிய "பீப்" எனும் ஒலியை கணணி ஒலிபெருக்கியில் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
பின்னர் இயங்குதளத்தின் தொடக்கப் பகுதி பற்றிய தகவலை வாசித்து ன்தட்டிலிருந்து இயங்குதளம் இயக்கப்படும்.
இப்பொழுது திரையில் பில்கேட்ஸ் "Welcome to Windows" என வரவேற்பார். :wink: