02-28-2005, 03:28 PM
பாதுகாப்பு உடன்படிக்கை: இந்திய நிலைப்பாடு என்ன?
இலங்கையின் இன நெருக்கடியை இங்தியா எவ்வாறு அணுகுகின்றது என்பது தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுப்பப்பட்டிருக்கின்றன. வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் இந்தியாவுக்கான உத்தியோக பூர்வமான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் புதுடில்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இலங்கைப் பிரச்சினையில் திட்டவட்டமான ஒரு நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புவதாகவே உள்ளது.
கதிர்காமரின் இப்போதைய விஜயத்துக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் இதில் மறைமுக நோக்கம் ஒன்றிருப்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. கடல்கோள் அனர்த்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா பாகிஸ்தான் உட்பட பல நாடுகளினதும் உதவியை இலங்கை நாடியிருந்தது. பிராந்திய வல்லரசான தனக்குத் தெரியப்படுத்தாமல் அமெரிக்காவின் படை உதவியை இலங்கை பெற்றுக்கொண்டது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது இரகசியமான ஒரு விடயமல்ல. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் அதிகரித்த இராணுவக் கூட்டுறவை வைத்துக்கொள்வதற்கான முயற்சிகளிலும் இலங்கை அரசாங்கம் இறங்கியிருந்தது. ஐனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அண்மையில் பாகிஸ்தானுக்கு மேற்கொண்டிருந்த விஜயமும் இந்தப் பின்னணியிலேயே நோக்கப்பட்டது.
இலங்கை அரசின் இவ்விதமான நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள இந்தியாவைத் திருப்திப்படுத்தும் ஒரு முயற்சியாகவே கதிர்காமரின் தற்போதைய இந்திய விஜயம் அமைந்திருக்கின்றது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் மேற்கொள்ளவுள்ள இலங்கை விஜயத்துக்கான முன்னோடியாகவும். கதிர்காமரின் இந்தியச் சுற்றுப் பயணம் அமைந்திருக்கலாம்.
கதிர்காமர் புதுடில்லியில் தெரிவித்த இரண்டு விடயங்கள் கவனத்துக்குரியவை. முதலாவதாக விடுதலைப்புலிகளுடன் பேச்சுவாத்தைகளை மீள ஆரம்பிப்பதற்குரிய தருணம் இதுவல்ல என கதிர்காமர் சுட்டிக் காட்டியிருக்கிறார். அதாவது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை என்பதை இது உறுதிப்படுத்துகின்றது. பேச்சுவார்த்தை ஒன்றுக்கான சூழ்நிலையை உருவாக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பதையும் இது உறுதிப்படுத்துகின்றது.
இரண்டாவதாக பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடும் அளவுக்கு இலங்கையும் இந்தியாவும் நெருங்கி வந்துள்ளன என்ற தகவலையும் அவர் தெரிவித்திருக்கின்றார்.புதுடில்லியில் கதிர்காமர் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் போது இது தொடர்பாக மேலும் ஆராயப்பட்டுஇந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது இதற்கு இறுதிவடிவம் கொடுக்கப்படலாம் என்ற ஊகத்தையும் இது ஏற்படுத்தியிருக்கின்றது.
விடுதலைப் புலிகளுடன் இப்போதைக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகள் இல்லை என்பதைத் தெளிவாகக் கூறியுள்ள கதிர்காமர் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதில் அவசரம் காட்டுவது ஏன் என்பது புரிந்து கொள்ள முடியாததல்ல.ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலேயே இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் அக்கறை காட்டியே வந்திருக்கின்றது.
பாதுகாப்பு உடன்படிக்கையானது தம்மைப் பிரச்சினைக்குள் வலிந்து இழுப்பதற்கான ஒரு முயற்சி என்ற சந்தேகத்தின் காரணமாகவே இந்தியா அதில் அவசரம் காட்டவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில் அது ஒரு சூடுகண்ட பூனை எனக் குறிப்பிடுவதில் தவறில்லை!
போர் நிறுத்தம் நடைமுறையிலுள்ள நிலையில் எந்தவொரு நாட்டுடனும் செய்துகொள்ளக் கூடிய பாதுகாப்பு உடன்படிக்கைகள் இராணுவச் சமநிலையைப் பாதிப்பதாக அமையும் என்பது உண்மை. இதனைத் தெளிவாகப் புரிந்துக்கொண்டும் அதற்காக அரசாங்கம் முற்படுவது பேச்சுவார்த்தை முயற்சிகளின் போது விடுதலைப் புலிகள் மீது அதிகளவு அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும் என்பதனால்தான்! அதாவது இது ஒரு வகையில் போர் நிறுத்த மீறல்தான்.
ஈழப் பிரச்சினை தொடர்பாக தம்முடைய நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாகக் கூறக் கூடிய நிலைமையில் இந்தியா இல்லாமையால் தான் பல்வேறு உபாயங்களையும் கையாள்வதற்கு இலங்கை முற்படுகின்றது. தன்னை ஒரு பிராந்திய வல்லரசாகப் பிரகடனம் செய்து கொண்டுள்ள இந்தியா ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருந்த நிலையில்தான் அமெரிக்கப் படைகள் இலங்கைக்கு வந்து இறங்கின.
வெளிநாட்டுப் படைகள் தொடர்புகள் இலங்கையில் இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய - இலங்கை உடன்படிக்கையை 1987 இல் ஏற்படுத்திக் கொண்ட புதுடில்லியைப் பொறுத்த வரையில் அதன் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த ஒரு தோல்வியாகவே வெளிநாட்டுப் படைகளின் இலங்கை வருகையை கருதலாம். ஈழத்தமிழர் பிரச்சினையை வெறுமனே புலிகளின் பிரச்சினையாக மட்டும் கருதி தமது கொள்கைகளை வகுத்துக்கொண்டதாலேயே இவ்வாறான ஒரு தோல்வியை இந்தியா சந்திக்க வேண்டியிருந்தது.
இலங்கை அரசாங்கமும் புலிகளை மையப்படுத்தியே தமது வெளிநாட்டுக் கொள்கையை வகுத்துக் கொள்வதற்கு அண்மைக் காலமாக முற்பட்டு வருவதைக் காணக் கூடியதாவுள்ளது. அதாவது புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதனால்தான் இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளை வைத்துக் கொள்ள இலங்கை அரசாங்கமும் முற்படுகின்றது.
இந்த நிலையில் தம்முடைய நிலைப்பாடு என்ன என்பதில் இந்தியா தெளிவாக இருக்கவேண்டும். ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஈழப் பிரச்சினை தொடர்பாக டில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நான்கு அம்சத் தீர்மானம் இவ்விடயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒன்று - ஈழப் பிரச்சினையில் இந்தியத் தலையீடு கூடாது. இரண்டு - இலங்கையின் இறையான்மைக்கும் ஒற்றுமைக்கும் மரியாதை மூன்றாவது - இலங்கையில் சிறுபான்மையினருக்கு குறிப்பாக தமிழர்களுக்கு முழுப் பாதுகாப்பு நான்காவது இலங்கையின் அரசியலமைப்புக்குட்பட்ட வகையில் தமிழர் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு !
ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தின் அடிப்படையிலேயே தன்னுடைய அணுகுமுறையை இந்தியா வகுத்துக்கொள்ள வேண்டும். இலங்கையின் அழுத்தங்களால் இராணுவப் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றுக்கு செல்வதென்பது மறைமுகமான இராணுவத் தலையீடாகவே அமையும். அது மேற்சொன்ன நான்கு அம்சத் திட்டத்துக்கு முரணானது என்பதுடன் போர் நிறுத்தத்தையும் பாரதூரமான முறையில் பாதிக்கக் கூடியது.
சமாதானப் பேச்சுக்கள் இப்போதைக்கு இல்லை என்பதை அரசாங்கத் தரப்பினரே கூறியுள்ள நிலையில் இராணுவத்தைப் பலப்படுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா நிதானமாகச் செயற்படுவது அவசியம்!
நன்றி: தினக்குரல்
---------------------------------------- --------------------------
இந்ந நாடகத்தில் ஆப்பிளுத்த குரங்காக இந்தியாதான் மாட்டுப்பட்டுள்ளது ஈழமும் சிறிலங்காவும் அல்ல... இந்திய நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்கும் கூர்ந்துகவனித்தால்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :|