Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோர்ட் சுட் அணியா ஜென்ரில்மன்ஸ் வாழும் தேசம் - தயா ஜிப்ரான்
#1
வாருங்கள் இளவரசே!
வாருங்கள்!!

இன்னமும் உயிரோடுதான்
இருக்கிறோம்.

சோல்பரியும் கோல்புறூக்கும்
செய்யாததை
சுனாமி செய்திருக்கும்
என்பது உங்கள் எண்ணம்

ஆனாலும்
இன்னமும் உயிரோடுதான்
இருக்கிறோம்

How is possiblie
என ஏங்கி விடாதீர்கள்

ஆழவேரோடிய ஆலமரமாய்
விழுதுகளிழந்தும்
நிமிர்ந்து நிற்கின்றோம்.

நாளைவரும் நாளைவரும்
விடியலென
விழிகளெல்லாம் நம்பிக்கை தேக்கி
காத்திருக்கின்றோம்.

பேயைகலைத்து
பிசாசைக் கட்டிக்கொண்டதாய்
ஆகிவிட்டது
உங்களிடம் பெற்ற
சுதந்திரம்.

நீங்கள் விரும்பியதும்
இதைத் தானே

காகம்திட்டி மாடுசாவதில்லை
இளவரசே!!

நீங்களென்ன -இனிவரும்
உங்கள் சந்ததிகளையும்
அனுப்புங்கள்.

அப்போதும் எங்கள் சந்ததி
இப்படித்தான்
மிடுக்குடன் வாழும்.
இது
அடிபணியா தமிழ்ச் சாதி!

கோர்ட் சுட் அணியா
ஜென்ரில்மன்ஸ் வாழும் தேசம்-


- தயா ஜிப்ரான் -
.
.!!
Reply


Messages In This Thread
கோர்ட் சுட் அணியா ஜென்ரில்மன்ஸ் வாழும் தேசம் - தயா ஜிப்ரான் - by Thaya Jibbrahn - 02-28-2005, 12:03 AM
[No subject] - by KULAKADDAN - 02-28-2005, 12:06 AM
[No subject] - by வியாசன் - 02-28-2005, 12:09 AM
[No subject] - by Thaya Jibbrahn - 02-28-2005, 12:13 AM
[No subject] - by tamilini - 02-28-2005, 12:18 AM
[No subject] - by வியாசன் - 02-28-2005, 12:37 AM
[No subject] - by tamilini - 02-28-2005, 12:40 AM
[No subject] - by வியாசன் - 02-28-2005, 12:43 AM
[No subject] - by tamilini - 02-28-2005, 12:45 AM
[No subject] - by Mathan - 02-28-2005, 12:56 AM
[No subject] - by ragavaa - 02-28-2005, 01:04 AM
[No subject] - by வியாசன் - 02-28-2005, 01:08 AM
[No subject] - by tamilini - 02-28-2005, 02:04 AM
[No subject] - by Malalai - 02-28-2005, 02:19 AM
[No subject] - by sOliyAn - 02-28-2005, 02:36 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)