02-27-2005, 06:27 PM
தொண்டா - சந்திரிகா நாளை முக்கிய சந்திப்பு
அரசிலிருந்து விலகுவதாக அச்சுறுத்தி அரசியலி;ல் ஆழிப்பேரலையாகக்கிளம்பியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சரவை அந்தஸ்துள்ள மிக முக்கியமான பதவி ஒன்றை கோருவதாகவும் அதை வழங்க அரசு இணங்கினால் அரசுடன் தொடர்ந்து அங்கம் வகிக்க முடிவு செய்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இ.தொ.க. கோருவது எந்த அமைச்சு என்பது பற்றி கருத்துக்கூற மறுத்த அவ்வட்டாரங்கள் இந்த இணக்கப்பாடு குறித்து பேசுவதற்கு இ.தொ.க. செயலாளர் நாயகம் ஆறுமுகம் தொண்டமான் நாளை (28.02.05) சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகாவை சந்திக்கிறார் என்று தெரிவித்தன. இதனால் நாளை ஜே.வி.பியனருடன் மேற்கொள்ளவிருந்த சந்திப்பை ஜனாதிபதி இரத்து செய்துள்ளார்.
தாம் பிரேரித்த 500 பேருக்கு ஆசிரியர் நியமனம்ää மேல் கொத்மலை திட்டம் மேற்கொள்ளப்படக்கூடாது ஆகிய இ.தொ.காவின் தொடர்ச்சியான கோரிக்கைகளாக தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை இ.தொ.கா. அமைச்சர்கள் இருவரும் தமது இராஜினாமாக்கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தனர். இதுகுறித்து இ.தொ.க வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கையில்ää தமது முடிவு குறித்து அறிவிக்க ஜனாதிபதி பல தடவவ தொடர்புகொண்டும் பலன் கிட்டாதததை அடுத்தே கடிதம் அவருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவை ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா இல்லையா என்பது குறித்து தெரியாது என்றும் தெரிவித்தன.
Puthinam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>