Yarl Forum
குழப்பம்இலங்கை அரசியல் குழப்பம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: குழப்பம்இலங்கை அரசியல் குழப்பம் (/showthread.php?tid=5040)

Pages: 1 2


குழப்பம்இலங்கை அரசியல் குழப்பம் - ratha - 02-24-2005

அரசிலிருந்து இதொக திடீர் வெளியேற்றம் இதனால் அரசியலில் மாற்றங்கள் நிகழலாம்


இ தொ க வாவது வெளியேறுவதாவது - eelapirean - 02-24-2005

இ தொ க வாவது வெளியேறுவதாவது.JVP மாதிரி இதுவும் வெருட்டு தான். பொறுத்திருந்து பாருங்கள்.


- ratha - 02-24-2005

இன்றைய தமிழோசை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா கடிதம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவரும் தமது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாய் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.

சிறுபான்மை அரசை அமைத்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கி அதனை பெரும்பான்மை அரசாக்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைச்சர்களான அமைச்சர் முத்து சிவலிங்கமும், பிரதியமைச்சர் செல்லச்சாமியும் தற்போது ராஜினாமா கடிதங்களை கொடுத்திருக்கிறார்கள்.

இவர்களின் கடிதங்களுடன் பிரதமர் ராஜபக்ஷ ஜனாதிபதி குமாரதுங்கவை சந்திக்கச் சென்றிருப்பதாக அறியக்கிடைக்கிறது.

அரசில் தமது கட்சி ஓரங்கப்படப்படுவதாலும், அரசின் முடிவுககளை எடுக்கும்போது தாங்கள் கலந்து ஆலோசிக்கப்படுவதில்லை என்பதாலும் தமது கட்சி அமைச்சர்கள் பதவிவிலகல் முடிவினை எடுத்துள்ளதாக தொழிலாளர் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.

மேல்கொத்தளை நீர்-மின் திட்டம், அதிகரித்துவரும் போலீஸ் கெடுபிடிகள் ஆகியவையும் அமைச்சர்களின் முடிவுக்கு காரணம் என அவர் கூறினார்.

அமைச்சர்கள் ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளபோதிலும், தமது கட்சி அரசுக்கு வழங்கும் ஆதரவை இன்னும் விலக்கிக்கொள்ளவில்லை என்றும், அது தொடர்பில் விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் யோகராஜன் கூறினார்.


- tamilini - 02-24-2005

தகவலை முடிந்தால் தாருங்கள் என்ன தான் நடக்கிறது நாட்டில..??

:roll: :roll:


- ratha - 02-24-2005

இச் செய்தியினை பிபிசி செய்தியறிக்கையில் பார்க்கலாம்


- tamilini - 02-24-2005

நனறழ றாதா..


- வியாசன் - 02-24-2005

அமைச்சர்களின் தொகை விரைவிலை கூடப்போகுதெண்டு சொல்லுங்கோ


- Mathuran - 02-24-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-24-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அமைச்சர்களின் தொகை விரைவிலை கூடப்போகுதெண்டு சொல்லுங்கோ
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எப்படி தமிழ் எம்பீக்கள் சேரப்போயினமோ..?? இல்ல ரணில் :roll: :roll: என்ன விரிவாய் சொல்லுறது.. :evil:


- ratha - 02-24-2005

இந்த நகர்வில் சந்தேகம்தான் ஏற்படுகிறது.அடுத்த மாற்றம் என்னவாக இருக்கப்போகிறது என பார்க்கவேண்டும் இல்லையா?


- வியாசன் - 02-24-2005

தமிழ்ஸ் இ.தொ.கா. வெருட்ட அரசாங்கம் என்ன செய்யும் இன்னும் இரண்டு மூன்று அமைச்சர் பதவிகளை கொடுத்து அவையளை சரிக்கட்டிவிடுவினம்.
அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறம் ஆனால் அரசுக்கு ஆதரவு கொடுப்பம் என்றால் வேறு என்ன தமிழ்ஸ்
உந்த விளையாட்டை சௌமியமூர்த்தி தொண்டமான் ஆரம்பித்து வைக்க ஆறுமுகம் தொண்டமான் தேவைப்படும்போதெல்லாம் கையிலெடுக்கிறார். சிறுபான்மை அரசாங்கம் மிண்டு கொடுக்கிற சிறுகட்சிகள் இழுக்கிற இழுப்புக்கெல்லாம் ஆடவேண்டும். இல்லாவிட்டால்............... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தொண்டமான் என்ன எங்கடை பகுதிமக்களுக்கு சரியான நிவாரணம் கொடுக்கவில்லை என்றா இப்படி செய்கினம்.?
சிங்கம் படுத்தால் சிறுநரிக் கொண்டாட்டம்


- Mathuran - 02-24-2005

ஆறுமுகனின் சந்திரிக்காவுடனான வர்த்தகம் முடிஞ்சுது போலும், அதுதான் உறவை முறிச்சு கொண்டு வந்திட்டார் போலும்.


- tamilini - 02-24-2005

ஓ அப்படியா.. ஏதோ நடக்கட்டும் நடக்கட்டும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathuran - 02-24-2005

JVP யால் வெருட்டதான் முடியும். இலங்கை தொழிலாளர் காங்கிரசினால் சொல்லியத செய்து காட்டவும் தெருயும் என நிருபித்திருக்கின்றார்கள் போலும். JVP யோடு ஒப்பிடும் போது இலங்கை தொழிலாளர் காங்கிரசை பாராட்டலாம்.

:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-24-2005

இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ஒன்றை ஏற்படுத்தி அதன்பின்னர் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண அரசாங்கம் முற்பட்டால் உடனடியாக அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.
சபாநாயகரிடம் விசேட அனுமதியைப்பெற்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பிரசாரச்செயலாளர் விமல் வீரவங்ச நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றினார்.

அந்த உரையின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மூன்று வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையின் மூலம் அரசாங்கத்தின் புதிய நிலைப்பாடு தெளிவாகப்புலனாகின்றது என்று அவர் கூறினார்.

இவ் விடயம் எவராலும் மேடைப்பேச்சில் தெரிவிக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்தல் ஒன்றின் மூலமே இதனைத் தெரிவித்துள்ளதால் அதன்மூலம் தெரிவிக்கப்படும் நிலைப்பாடு பாரிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகின்றது.

விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்பான பொதுவான நிலைப்பாடு இந்த அறிவித்தல் மூலம் மாற்றப்பட்டுள்ளது தெளிவாகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சுட்டிக்காட்டியுள்ளது.

விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை அரசாங்கம் நெருங்கி வருவதை இதன்மூலம் புலனாகின்றது. இவ்வாறான அறிவித்தல் ஒன்றை விடுப்பதற்கு முன்னர் அரசாங்கம் அதன் தோழமைக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டிற்கு வரவேண்டியதன் அவசியத்தையும் விமல் வீரவங்ச அவரது உரையின்போது வலியுறுத்தினார்.

தேசியப்பிரச்சனை தொடர்பாக தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எந்தவித உரிமையும் இல்லை என்று விமல் வீரவங்ச மேலும் குறிப்பிட்டார்.

புதினம்


- UZI - 02-24-2005

தனித்து விடப்பட்ட சந்திரிக்கா சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டை காரன் காலில் விழுவது எவ்வளவோ மேல்..........


- UZI - 02-26-2005

புலிகளின் காலம் இனி புல்லுருவிகளே ஒதுங்குங்கள்

இல்லை ஒரங்கட்டப்படுவீர்கள்.???????????//.....!!!!!!!!!!!!!!!!


- Thusi - 02-27-2005

இ.தொ.கா. அமைச்சர் பதவிகளை இரஜினாமாச் செய்கிறோம். அரசைவிட்டு வெளியேறப் போறம் எண்டு சொல்லுறதிலை நிறைய உள்சமாச்சாரங்கள் இருக்கும். சந்திரிகா அம்மையாரும், ஆறுமுகம் தொண்டாமானும் கதைச்சுப்போட்டுத்தான் உப்பிடிச் செய்தினமோ தெரியேல்லை.

தற்போதைய நிலையில ஒரு தேர்தல் சந்திரிகா அம்மையாருக்குத் தேவைப்படுகிறது. இந்த நிலையில பாராளுமன்றத் தேர்தல் நடந்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. அம்மையாரிட்டைத்தான் சுனாமிக்கு எண்டு வந்த காசு கனக்கக் கிடக்கு. எல்லாத்தையும் கொட்டி ஒரு தேர்தல் வச்சு தனக்கு பெரும்பான்மை எடுத்தால் தன்ரை ஜனாதிபதிப் பதவியையும் பாதுகாக்கலாம் எண்டு ஏதும் நரித்திட்டம் போட்டிருப்பா. அப்ப பாராளுமன்றத்தைக் கலைக்க வேணுமெண்டால் உப்பிடி ஏதாவது நாடகம் ஆடவேண்டும். ஜே.வி.பி.யையும் நம்பேலாது. இ.தொ.கா. தானே பதவியெண்டா எல்லாத்தையும் விட்டிட்டு மாறிமாறி தாவிக்கொண்டு திரியிறவை. அதுதான் அம்மையார் ஏதும் திட்டம் போட்டுத்தான் உவைய வெளியேறச் சொன்னாவோ தெரியேல்லை.

நடக்கிறதை பொறுத்திருந்துதான் பார்க்கோணும்.


- ratha - 02-27-2005

ஈழநாதம் நாளேட்டில் 27.02.05 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்
இ.தொ.கா.வெளியேற்றம்?


இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கும் ஜக்கிய மக்கள் சதந்திர முன்னணி அரசாங்கத்திற்குமிடையிலான உறவு நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. ஐ.ம.சு முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியதுடன் இவ்உறவு முடிவிற்கு வந்துள்ளது.

இவ்உறவில் நெருக்கடி ஏற்பட்டு இ.தொ.கா வெளியேறியதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் சிறுபான்மை அரசாகியுள்ளது. அதாவது அறுதிப் பெரும்பான்மை (113 ஆசனங்கள்) அற்ற சிறுபான்மை அரசாங்கமாக (111 ஆசனங்கள்) ஐ.ம.சு.மு. அரசாங்கம் மாறியுள்ளது. இந்நிலையானது அரசாங்கம் கவிழும் அளவிற்கு நிலைமையைக் கொண்டு செல்லப் போவதில்லை என்று துணிந்து கூறமுடியும். ஆனால் சிற்சில தடங்கல்களை மாத்திரமே சில வேளைகளில் மட்டும் விளைவித்தல் கூடும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் குறிப்பாக சனாதிபதி சந்திரிகாவுடனான உறவில் நெருக்கடியேற் பட்டு இ.தொ.கா வெளியேறியதொன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில்ää இவ் இருதரப்பினருக்கும் இடையில் ஏதோ பாரம்பரிய உறவோ அன்றி கொள்கைப்பற்றோ என்று ஒன்றும் இருந்ததில்லை.

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் இ.தொ.காவும்- ஐ.ம.சு முன்னணி என்ற ரீதியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சிää ஜே.வி.பி. மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போட்டியிட்டே பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்டன. இதன் பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து கொள்வதை எவ்வாறு கொள்கை அடிப்படையிலானது. என்று கூறி விடமுடியும்?

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இருதரப்பிற்குமான தேவையின் நிமித்தம் இரு கட்சிகளும் பேச்சுக்களை நடத்தின. அதாவது அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்காக ஐ.ம.சு.முன்னணியும் ஆட்சி அதிகாரத்தில் இடம் பிடித்துக் கொள்வதற்காக இ.தொ.காங்கிரசும் இரகசியப் பேச்சுக்களை நடத்தின. இருதரப்பு இலாபம் கருதியதானதாகவே இது இருந்தது.

பேரங்களின் முடிவில் இ.தொ.கா. உறுப்பினர்களில் ஒருவர் அமைச்சராகவும் மற்றையவர் பிரதி அமைச்சராகவும் பதவி ஏற்க இ.தொ.கா. அரசாங்கத்தில் இடம் பிடித்துக் கொண்டது. ஆயினும் இதுவரை இ.தொ.கா எந்த அரசாங்கத்தில் பங்கேற்பினும் முதலில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கும் ஆறுமுகம் தொண்டமான் இம்முறை பதவி ஏற்கவில்லை.

இதற்காக ஆறுமுகம் தொண்டமான் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதற்கு விரும்பவில்லை என்பதல்ல இதன் அர்த்தம். ஆறுமுகம் தொண்டமான் கோரிய அமைச்சுப் பதவியை சனாதிபதி சந்திரிகா உடனடியாக வழங்கத்தயாராக இல்லாமல் இருந்ததே காரணமாகும். ஆனால் காலக்கிரமத்தில் கோரிய அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்க்கையுடன் ஆறுமுகம் தொண்டமான் இருந்தபோதும்ää அது சாத்தியமாகவில்லை. இந்நிலையிலேயே அரசாங்கத்தை விட்டு வெளியேற இ.தொ.கா தலைமை தீர்;மானித்துள்ளதெனலாம்.

ஆனால் ஒன்று சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் அமைச்சுப் பதவி ஒன்றை அதாவது இ.தொ. காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு வழங்குதல் என்பது அவரின் கொள்கைக்கு மாறானதொன்றல்ல. ஏனெனில் ஐ.ம..சு. முன்னணி அரசாங்கத்திலுள்ள சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரைத்தவிர ஏனைய அனைவருமே அமைச்சுப் பதவிகளை வகித்தே வருகின்றார்.

இந்நிலையில் ஆறுமுகம் தொண்டமான் புறக்கணிக்கப்பட்டமைக்கு ஜே.வி.பி. காரணமாக இருக்கலாம் என்பதற்கான வாய்ப்புக்களே அதிகமுண்டு. ஏற்கனவே 35 இற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஜே.வி.பி. தனது பலமான ஆட்சேபத்தைத் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் மீண்டும் ஒரு அமைச்சர் பதவி அதுவும் தமிழர் ஒருவருக்கு வழங்கப்படுவதை அது ஒரு போதும் ஏற்றுக் கொள்ளும் என்பதற்கில்லைää

இந்நிலையில்ää ஆறுமுகம் தொண்டமானுக்கான அமைச்சுப்பதவி ஒன்றை சனாதிபதி சந்திரிகா ஒதுக்கீடு செய்வதென்பது சிரமம் மிக்கதொன்றே.

இதனை உணர்ந்தே இ.தொ.கா. அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாகத் தீர்மானித்துள்ளது. இ.தொ.கா. அரசாங்கத்திலிருந்து வெளியேறியதினால் மலையகத் தமிழ்மக்களுக்கு பெரும் இழப்பு ஏதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இ.தொ.கா. தலைவர்களுக்குச் சிலவேளைகளில் சில இழப்புக்கள் ஏற்படலாம்.

ஆனால் இ.தொ.கா. அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமளவிற்குச் சென்றுள்ளமையும்ää சனாதிபதி சந்திரிகா இ.தொ.காவை அணைத்துச்செல்லமுடியாமல் போனமையும் அண்மைய அரசியலில் முரண்பாடானதொன்றேää இதற்கு ஐ.ம.சு.முன்னணி அரசாங்கத்தில் இனவாத சக்திகளின்; ஆதிக்கம் வளர்ச்சிகண்டு விட்டமை காரணமாக இருக்கலாம். இது ஒரு வகையில் சனாதிபதி சந்திரிகாவின் கைக்கு மீறியதொன்றாகக் கூட இருக்கலாம்.

நன்றி: ஈழநாதம்

தங்களுடைய கருத்துக்கள் வெளியிடுவதற்கு அனுமதியளித்த ஈழநாதம் நாளேட்டு நிறுவனத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும்





--------------------------------------------------------------------------------thanks to thamilnatham


- Mathan - 02-27-2005

தொண்டா - சந்திரிகா நாளை முக்கிய சந்திப்பு

அரசிலிருந்து விலகுவதாக அச்சுறுத்தி அரசியலி;ல் ஆழிப்பேரலையாகக்கிளம்பியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சரவை அந்தஸ்துள்ள மிக முக்கியமான பதவி ஒன்றை கோருவதாகவும் அதை வழங்க அரசு இணங்கினால் அரசுடன் தொடர்ந்து அங்கம் வகிக்க முடிவு செய்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இ.தொ.க. கோருவது எந்த அமைச்சு என்பது பற்றி கருத்துக்கூற மறுத்த அவ்வட்டாரங்கள் இந்த இணக்கப்பாடு குறித்து பேசுவதற்கு இ.தொ.க. செயலாளர் நாயகம் ஆறுமுகம் தொண்டமான் நாளை (28.02.05) சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகாவை சந்திக்கிறார் என்று தெரிவித்தன. இதனால் நாளை ஜே.வி.பியனருடன் மேற்கொள்ளவிருந்த சந்திப்பை ஜனாதிபதி இரத்து செய்துள்ளார்.

தாம் பிரேரித்த 500 பேருக்கு ஆசிரியர் நியமனம்ää மேல் கொத்மலை திட்டம் மேற்கொள்ளப்படக்கூடாது ஆகிய இ.தொ.காவின் தொடர்ச்சியான கோரிக்கைகளாக தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வியாழக்கிழமை இ.தொ.கா. அமைச்சர்கள் இருவரும் தமது இராஜினாமாக்கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தனர். இதுகுறித்து இ.தொ.க வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கையில்ää தமது முடிவு குறித்து அறிவிக்க ஜனாதிபதி பல தடவவ தொடர்புகொண்டும் பலன் கிட்டாதததை அடுத்தே கடிதம் அவருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவை ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா இல்லையா என்பது குறித்து தெரியாது என்றும் தெரிவித்தன.

Puthinam