Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியாவும் இலங்கையும்
#1
இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் எந்நேரமும் கைச்சாத்தாகலாம்
<img src='http://www.sundaytimes.lk/050227/images/ftont.jpg' border='0' alt='user posted image'>
- புதுடில்லியில் கதிர்காமர்

அவ்வாறு நடந்தால் அது தமிழ் மக்களுக்கு எதிரான இந்தியாவின் ஒரு பகைமை நடவடிக்கை
27 02 2005
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமர் புதுடில்லியில் வெள்ளிக்கிழமை இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் பிரனாப் முக்கர்ஜியை சந்தித்து பேசினார். சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். சுனாமி தாக்கிய பின்னர் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் சிறீலங்கா ஜனாதிபதியின் கடிதம் ஒன்றையும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் வழங்கினார்.

இதன் பின்னர் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த கதிர்காமர் இருநாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள இணக்கம் ஏற்பட்டிருக்கின்றது என்றும் இப்போது எந்த நேரத்திலும் அந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகலாம் என்றும் சொன்னார்.

இவ்வாறு ஒப்பந்தம் செய்துகொள்வது தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு பகைமை நடவடிக்கையாக இருக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்த்து வருவது தெரிந்ததே. கடந்த வருட இறுதியில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட ஏற்பாடாகி இருந்த போதிலும் தமிழ் மக்களின் எதிர்ப்புக்களை அடுத்தும் குறிப்பாக மதிமுக செயலர் வைகோ புதுடில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியதை தொடர்ந்தும் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது. தமிழ் மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை இந்தியா எடுக்க மாட்டாது என்று அப்போது வைகோவிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்திருந்தார்.

இப்போது இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டும் என்று கதிர்காமர் புதுடில்லியில் வலியுறுத்தி உள்ளார். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை புனரமைப்பது சிறீலங்கா பாதுகாப்பு படைகளுடன் புலனாய்வு தகவல்களை பரிமாறிக் கொள்வது பயிற்சிகளை வழங்குவது உள்ளிட்ட மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு விடயங்களுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் சமபலத்துடன் இருப்பதே சிறீலங்கா அரசு போர்நிறுத்தம் செய்ய முன்வரவும் மூன்று வருடங்களாக அது நீடிக்கவும் காரணமாக இருந்தது. இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்பட்டால் அது சிறீலங்காவின் சிங்கள மேலாதிக்கவாதிகள் தாம் கூடுதல் பலத்துடன் இருப்பதாக எண்ணத் தூண்டுவதாகும். அது அவர்களை மீண்டும் யுத்தம் செய்ய தூண்டுவதாகவும் ஏற்கனவே இழுபறியில் இருக்கும் சமாதான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிவகுப்பதாகவும் அமையும். இதனாலேயே இத்தகைய ஒப்பந்தம் தமக்கு எதிரான ஒரு பகைமை நடவடிக்கை என்று தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

செய்திகோவை
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ...... - by Vaanampaadi - 02-27-2005, 09:17 AM
[No subject] - by shanmuhi - 02-27-2005, 11:31 PM
[No subject] - by Mathan - 03-03-2005, 12:43 PM
[No subject] - by Mathan - 03-04-2005, 10:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)