08-27-2003, 11:32 AM
அதுசரி ஆண்கள் கொடுமைப்படுத்துவதாக ஒரு கணக்கெடுப்பு செய்துள்ளீர்கள்...பெண்கள் கொடுமைபடுத்தும் ஆண்கள் பற்றி எப்போ கணக்கெடுப்பு எடுக்கப் போகிறீர்கள்...ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன எவர் மீதும் தேவைக்கு அப்பாற்பட்ட வன்முறைகள் திணிபுக்கள் கட்டாயம் தடுக்கப்பட வேண்டும் அதுவே ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அபிவிருத்திக்கும் நன்மை பயக்கும்....அதற்கான மாற்றங்கள் மனதளவில் அன்பின் பால் ஒழுக்கத்தின் பால் சமூக விழுமியங்களின் பால் கட்டி எழுப்பப்படவேண்டுமே தவிர ஆண் உனக்கு எதிரி அல்லது பெண் உனக்கு எதிரி என்பது போன்ற விதண்டாவாதங்களால் அல்ல.....! விவாகரத்தும் கருக்கலைப்பும் தீக்குளிப்பும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் அல்ல...மன அமைதி மனக்கட்டுப்பாடு சமூகப் பண்பாடுகளை உறுதியுடன் கடைப்பிடித்தல் சமூக ஒழுக்கங்களில் நம்பிக்கையும் ஸ்திரமான கடைப்பிடித்தல் ஒழுங்கை காண்பிக்கும் விருப்பை வளர்த்துக் கொள்ளல்...இப்படி பல ஆரோக்கியமான மாற்றங்களே இன்று அவசியமே தவிர வெறும் கணக்கெடுப்பு அறிக்கைகள் அல்ல.....வெறும் ஆண் எதிர்ப்புவாத பரப்புரைகள் அல்ல.....! சில ஆண்களைப் போல பல பெண் கொடுமை வாதிகளும் சமூகத்தில் உளர் என்பதும் உண்மையே.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

