02-27-2005, 12:59 AM
kirubans Wrote:நான் தமிழ் பாவிப்பதனை விரும்பாவிட்டால் இக்களத்திற்கே வந்திருக்கவே மாட்டேன்.
எனினும் அருவி என்ற சொல் உள்ளபோது நீர்வீழ்ச்சி என்று waterfall ஐ நேரடித் தமிழ்படுத்துவதனையும் ஏற்கமுடியாது. http://www.tamilvu.org/ இல் உள்ள கலைச்சொற்கள் பல இப்படியான நேரடி மொழிபெயர்ப்பில்தான் உருவாக்கப்பட்டுள்ளன, எனவே அவை எவ்வளவு தூரம் ஏற்றுகொள்ளப்படுமெனத் தெரியவில்லை.
அருவி என்பதன் சரியான விளக்கம் தெரியவில்லை. சிலவேளை இப்படி இருக்கலாம். அரவம் அருவுதல்= நகர்தல்= அருவி
அருவி= உயரம் குறைந்த பகுதுகளிலிருந்து செறிவாக குறைந்த வேகத்துடன் கூடிய நீரின் வீழ்ச்சியாக இருக்கலாம்
நீர்வீழ்சி= உயர்ந்த பகுதியில் இருந்து வேகத்துடன் கூடிய அடர்த்தியான நீரின் வீழ்ச்சியினை குறிக்கலாம்.
இது எனது கருத்தே. என்னிடம் தமிழ் அகராதி இல்லை. தமிழ் அகராதியினை பார்த்தால் இவற்றிற்கு சரியான பொருள் கொடுக்கப் பட்டு இருக்கும். தமிழில் இருக்கின்ற எந்த ஒரு சொல்லும் சரியான முறயிலேயே உருவாக்கப் பட்டு இருக்கும்.

