02-26-2005, 11:21 PM
kirubans Wrote:<b>மதுரன், முதலில் ஏன் மொழிபெயர்ப்பும், கலைச்சொல்லாக்கலும் தேவையென்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
நாங்கள் பாவிக்கும் பொருட்களுக்கும், எங்கள் கல்வித்தேவைக்குமே பெயர் தேடுகின்றோம். பாவிக்காவிட்டால் எங்களுக்கு அதைப் பற்றி எதுவுமே தேவையில்லை (பெயர் கூடத் தேவையில்லை).
கொக்காரை
பண்ணாடை
காவோலை
பனம் வட்டு
பனம் மட்டை
பிணாட்டு
பனங்காஇ பணியாரம்
இவற்றை ஆங்கிலமயப்படுத்த தேவையில்லை, காரணம், ஆங்கிலேயனுக்கு இவை தேவையில்லை.
அதே நேரத்தில், கட்டுமரம், வெற்றிலை, கறி, காசு, சுருட்டு, கூலி போன்ற சொற்களை ஆங்கிலத்தில் அப்படியே பாவிக்கின்றார்கள்.
கட்டுமரம் - catamaran
வெற்றிலை - betal
கறி - curry
காசு - cash
சுருட்டு - cherrot
கூலி - coolie
அதாவது ஒரு மொழி வளரும்போது, வேற்றுமொழிகளில் இருந்து சொற்களைக் கடன்வாந்கியே வளர்கின்றது.
இன்று நாங்கள் பேசும் தமிழும், பண்டைய தமிழும் ஒன்றா? தமிழ் தூய மொழி என்று கூறமுடியுமா? வடமொழிக் கலப்பில்லாமல் தமிழ் செழுமை பெற்றிருக்கமுடியுமா?
தமிழ் எழுத்துக்களைச் செம்மை செய்தவரே ஒரு அந்நியர்தான். வீரமா முனிவர் என்பவர்தான் தமிழ் எழுத்துவடிவங்களை ஒழுங்கமைத்தவர்.
தனித்தமிழ் என்று வெளிக்கிட்டால் நாங்கள் இன்னமும் பின்னோகியே போவோம். தமிழ் இலக்கண விதிகளுக்கு உட்படக்கூடிய சொற்களை அப்படியே எடுப்பதுதான் நல்லது.
மேலும், நவீன தொழில்னுட்பங்கள் வளரும் வேகத்திற்கு எமது தமிழாக்கம் ஈடு கொடுக்க முடியாததால்தான், இன்றும் பலவற்றுக்கு தமிழ்பதங்கள் இல்லை. இப்படியேபோனால் நாங்கள் மொழிபெயர்ர்பில்தான் காலத்தை ஓட்ட வேண்டி வரும்.</b>
நீங்கள் உங்கள் கல்விக்காகத்தான் தமிழை பேசுவதாக சொல்கின்றீர்கள். ஒவ்வொரு புதிய சொற்களுக்கும் கலைச்சொற்கள் கண்டுபிடிக்க படுகின்றன. கொம்பியூட்டர்= கணணி இப்படி புதிய சொற்கள் பிறக்கின்றன. அவற்றை யாரும் பயன்படுத்தாது விட்டால் அவை வெளியில் வராது. எந்த மொழி பயன்பாட்டில் உள்ளதோ அந்த மொழியே வழரும் என்பது பொது விதி. நீங்கள் கல்வி கற்பது தமிழ் அல்லாத வேற்று மொழியில். நான் வாழ்கின்ற நாட்டில் ஆங்கில சொல்லான டிஜிற்றல் என்னும் சொல்லை டிகித்தால் என்பார்கள். ஏன் அவர்கள் அப்படியே டிஜிற்றல் என்று சொல்லலாம் தானே. அவர்கள் அப்படி சொல்ல மாட்டார்கள். அப்படி சொன்னால் அவர்களின் மொழி காலப்போக்கில் ஆங்கிலமாக மாறி விடும் என்னும் அச்சமே அதற்கான காரணம். சில வேளைகளில் நீங்கள் இப்படியும் ஒரு கேள்வியை என்னிடம் கேட்கலாம். ஐரோப்பியர்கள் மொழிபெயர்ப்பதனை போன்று தமிழர்களும் இரண்டு மூன்று எளுத்துக்கள் மருபிய மாதிரி கலைச்சொற்களை உருவாக்கலாமே என. அவர்களின் மொழி இந்து ஐரோப்பிய மொழியின் வட்டத்துள் வருகின்றது. தமிழ்மொழி திராவிட மொழி வட்டத்திற்குள். எனவே கலைச்சொற்களை அப்படியே உருவாக்கினால், தமிழ் மொழியின் வரலாறே மாறி விடும்.
அடுத்த விடயம். வீரமா முனிவர், ஒரு இத்தாலியரானாலும். அவர் தமிழ் என்னும் வட்டத்துக்குள் வந்து தனது பெயரைக்கூட மாற்றி வீரமா முனிவர் என்ற பின்னர்தான் அதனைச் செய்தார். அவர் செய்த விடயமானது வழம்படுத்தலுக்கான முயற்ச்சியே. ஒரு மொழி அந்தந்த காலங்களுக்கான வளர்ச்சியினை அடய வேண்டும் என்கின்ற விதிகளுக்கு உட்பட்டு அவரின் தமிழுக்கான சேவை உள்வாங்கப்பட்டது. அவரால் தமிழ் சொற்கள் எந்தவொரு பொருள் சிதவினையும் சந்திக்கவில்லை. அவரை வரவேற்ற தமிழர்கள் ஏன் கமலை புறக்கணிக்கின்றார்கள் என்று கொஞ்சமாவது சிந்தியுங்கள்.
பிறமொழிகளின் உதவி இன்றி தமிழ் வளர்ந்திருக்க முடியாதா?
தமிழால் பிறமொழிகளின் உதவி இன்றி தனித்து இயங்கக் கூடிய பண்பு அதற்கு உண்டு என்பதனால்த்தான் அதற்கு செம்மொழி என்னும் கௌரவம் கிடத்தது. சமஸ்க்கிருதம் தான்வாழ வழி தெரியாமல் ஒடிவந்து, தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கே தமிழினுள் புகுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தமிழரிடையே புகமுயன்று . கடைசியில் முளுமையாக புக முயன்று தோற்றதற்கான சான்றுதான். சமஸ்கிருத மந்திரங்கள். அது போன்ற நிலை ஆங்கிலத்தினாலும் ஏற்பட்டு விட கூடாது என்பதே தமிழனின் இன்றய அச்சத்திற்கான காரணம். முதலில் நல்லது செய்வது போல வருவார்கள். பின்னர் அப்படியே தங்கி, தானே ஆட்சி செய்வார்கள். உங்களுக்கும்நான் சொல்வது விளங்குமென நினைக்கின்றேன். இது சிந்துவெளி நாகரீகம் என்னும் நூலில் புலப்பட்டுள்ளது.
எனவே தமிழில் உள்ள கலைச்சொற்களை முடிந்த வரை பயன் படுத்துவோம். கமல் என்னும் ஒரு வேற்று மனிதனுக்காக தமிழை வெறுக்கலாம.

