02-26-2005, 02:48 PM
எந்த ஒரு பெரிய புரட்சியும் தனியொரு மனிதனின் சிந்தனையிலிருந்து உதிப்பது தான். அந்த தனிமனிதனின் சிந்தனையென்பது ஒரு நாவல் வாசிக்கும் போதோ திரைப்படம் பார்க்கும் போதோ இவ்வாறான கருத்தாடல்களின் போதோ உருவாகலாம். ஆக செய்பவன் சொல்வதில்லை என்பது சில வேளைகளில் உண்மையாக இருந்தாலும் சொல்பவன் எல்லாம் செய்வதில்லை என்ற எடுகோளை எப்படி எழுந்தமானமாக கூநிவிட முடியும். சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் .... இந்த களத்தை பொறுத்தவரை எல்லோருமே சொல்பவர்கள் தானே. சரி.... நீங்கள் செயல்வீரன் என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும்.... நீங்கள் இந்த களத்திற்கு வர காரணம் என்ன??? உங்கள் கருத்துக்களை சொல்லத்தானே???? கருத்துக்கள் சொல்வது அவரவர் தன்னை தானே புரட்சிவாதியாய் காண்பிப்பதற்கு என நீங்கள் எண்ணினால் கருத்துகளத்தை தவிர்த்துவிட்டு செயற்களத்திற்கு முதல் ஆளாய் நீங்கள் வரவேண்டும். பிறகு திரும்பி பாருங்கள்... உங்கள் பின்னால் மற்றவர்கள் உள்ளார்களா?? இல்லையா என்று???
இலக்கியம் சமூகம் என எந்தக்கூறை எடுத்து நோக்கினாலும் அங்கே கலகக்காரர்கள் என ஒரு பிரிவினர் இருப்பார்கள். அவர்களுக்கு சொந்தமாக எந்த எடுகோள்களோ கொள்கையோ இருப்பதில்லை. ஒருவர் முன்மொழிவதை எதிர்த்து கலகம் செய்வதே அவர்கள் பணி.
கீரைக்கடைக்கும் எதிர்க்கடை தேவை. ஆனால் சில ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கு கூட்டு முயற்சி தேவை.

.
.!!
.!!