Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேண்டுகோள்
#8
<span style='font-size:25pt;line-height:100%'>மட்டு படுகொலைகளில் மறைந்திருக்கும் மர்மங்கள்.</span>மட்டக்களப்பு நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்த ரதீஸ் என்பவரின் சடலம் பட்ட பாட்டினைப் பற்றியே மக்கள் கடந்த சில தினங்களாகப் பரவலாகப் பேசினர்.

உயிர் பிரிந்த பின் சடலத்தைச் சகல மதங்களும் தெய்வமாகவே போற்றி அதற்குரிய மரியாதையுடன் அடக்கம் செய்கின்றனர். இது சகல மதங்களிலும் உண்டு.

வீட்டில் புனிதப்படுத்தப்படுகின்ற சடலம் நல்லடக்கத்துக்கு முன்பாக தேவாலயம் அடுத்தது மயானத்தில் வைத்தே திறந்து மற்றவர்களுக்குக் காட்டப்படும். அப்போது மக்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.

கண்டகண்ட இடங்கெல்லாம் வைத்து சடலத்தைத் திறந்து காட்டும் பாணி இந்து மதத்தில் இல்லை. இவ்வாறு செய்தால் உறவினர்களுக்குள் யாராவது மரணிப்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அத்துடன் சடலத்தை எப்போதும் தெய்வமாகவே போற்றுவார்கள். அநாதரவாக சடலத்தை விட்டுச் செல்லும் வழக்கம் எந்த மதத்திலோ, எந்த மக்களிடமோ இல்லை.

ஆனால் கடந்த வியாழக்கிழமை (14.08.2003) அன்று சுட்டுக்கொல்லப்பட்ட அ. ரதீஸ்கரனின் சடலத்தை வீட்டிலிருந்து ஈ.பி.டி.பி., வரதர் அணி, புளொட், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோர் ஒன்றிணைந்து து}க்கி வந்து அநாதரவாக மூன்று மணித்தியாலங்கள் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப் புக்குழு அலுவலகத்துக்கு முன்பாக இட்டுச் சென்ற சம்பவம் அநாகரிகமற்ற செயல் என்றே பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.

அடுத்ததாக நாம் யார் இந்த ரதீஸ்கரன் (ரதீஸ்). இவர் ஏன் சுடப்பட்டார், யார் இவரைத் துப்பாக்கியால் சுட்டார்கள் என்பது பற்றி அலசி ஆராய வேண்டும்.

ரதீஸ் என்பவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பல வருடங்களா கக் கடமையாற்றி வந்தவர். இவர் மூலம் இராணுவப் புலனாய்வுக்குப் பெறுமதியான பல தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றவராக இருந்தவர். இதன் மூலம் இராணுவப்புலனாய்வு சம்பந்தமான நிறையத் தகவல்களை இவர் அறிந்தவராகவும், மட்டக்களப்பில் உள்ள இராணுவத்தினர் தகவல்களைப் பெறுகின்ற முறைகளையும் இவர் அறிந்திருந்ததுடன் பல்வேறு இரகசியங்களையும் அறிந்தவராகவே காணப்பட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் பல வருடங்கள் இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தராகக் கடமையாற்றிய இவர் திடீரென சென்ற மாதம் ஈ.பி.டி.பியுடன் இணைந்து கொண்டார்.

இச்செயல் இராணுவத்தினருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியதுடன் இவர் மூலம் தங்கள் இராணுவ ரகசியங்கள் வெளியே சென்று விடும் என்ற அச்சமும் இராணுவத்தினருக்கு இருந்து வந்ததை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே சில இடங்களில் கூறியுமுள்ளனர்.

இந்நபர் ஈ.பி.டி.பியுடன் இணைந்த பின்பே அங்கு சில சிக்கல்களை ஏற்படுத்த முனைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் ஈ.பி.டி.பியும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் சேர்ந்து இவரைத் தீர்த்துக் கட்டத்திட்டம் தீட்டி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இதனையே இவரது கொலை நடந்த இடம், நேரம் அன்றைய சூழல் என்பன எடுத்துக்காட்டுகின்றது.

சம்பவம் நடைபெற்ற தினம் நோர்வேயின் சிறப்புத் து}துவர் எரிக்சொல்ஹெய்ம் மட்டக்களப்பில் தங்கி இருந்தார். அன்றய தினத்தில் தானா இக்கொலை இது திடீரென திட்டமிட்டுச் செய்து முடித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஈ.பி.டி.பியினர் தமது அலுவலக வளவினுள் காலைக்கடன் முடிப்பதற் குச் செல்லும் போதும் பொலிஸ் பாதுகாப்புடனேயே செல்கின்றனர் தினமுரசு பத்திரிகை விற்பனை செய்யும் போதும் பொலிஸ் பாதுகாப்பு, வெளியில் நடமாடும் போதும் பொலிஸ் பாதுகாப்பு.

அன்று ரதீஸ்கரன் இரண்டு தடவைகள் குறிப்பிட்ட மோட்டார் சைக்கிளில் பொலிஸ் பாதுகாப்புடன் மட்டக்களப்பு நகருக்குள் வந்து சென்றுள்ளார். மூன்றாவது தடவை பொலிஸ் பாதுகாப்பு இல்லாமல் சக உறுப்பினருடன் திட்டமிட்டு வெளியில் அனுப்பும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இவர் சுடப்பட்ட இடம் தொடர்ச்சியாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சிவில் உடையில் நின்று படுவான்கரையிலிருந்து வருகின்ற மக்களை விசாரிக்கும் இடம். சற்று தொலைவில் அப்பால் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படை யினர் காவல்புரிகின்ற இடம்.

அந்த இடத்தில் பட்டப்பகலில் புலிகள் சுட்டுவிட்டுத் தப்பிச் செல்வதற்கு நியாயமே இல்லை. அது மட்டுமல்லாமல் ரதீஸ் என்பவரைச் சுடும் போது இராணுவ வாகனம் ஒன்று சம்பவத்தைப் பார்த்துச் சென்றுள்ளது. இதனை சம்பவத்தை நேரில் கண்டவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். அது மாத்திரமல்லாமல் இவரைச்சுடும் போது படையினர் பார்த்து நின்றதாகச் சிங்கள நாளிதழ் ஒன்றே செய்தி வெளியிட்டுள்ளது.

இவை அனைத்தையும் நோக்கும் போது குடிமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரச படையினரும் ஈ.பி.டி.பியும் இணைந்தே புலிகளின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் எரிக்சொல்ஹெய்ம் மட்டக்களப்பிற்கு வருகை தந்த தினத்தில் திட்டமிட்டு இக்கொலையைச் செய்துள்ளனர் எனப் புலனாகின்றது.

அடுத்து அண்மையில் புது}ரில் சுட்டுக்கொல்லப்பட்ட புளொட் உறுப்பினர் வ. மேகநாதனின் கொலை சம்பந்தமாகவும் இங்கு எடுத்துரைப்பது பொருத்தமானது என நினைக்கின்றேன்.

மேகநாதன் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் புளொட் இயக்கத்துடன் சேர்ந்து 1993 காலப் பகுதியில் இயங்கியவர். பின்பு புளொட் இயக்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முன்னாள் வவுணதீவுப் பிரதேச சபைத் தலைவர் க. வேலாயு தம் (ரங்கன்) சகிதம் புளொட் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டார்.

அதன் பின்பு இவரையும் வேலாயுதத்தையும் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும், புளொட் இயக்கமும் கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தியது.

இதனையடுத்து மேகநாதன் பயத்தின் காரணமாகச் சில காலம் தலைமறைவாகி இருந்தார். அதன் பின்பு புளொட் இயக்கத்துடன் உறவினை ஏற்படுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்காலகட்;டத்தில் தான் ரங்கன் மீண்டும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மட்டக்களப்பில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டார்.

ரங்கன் கடத்திச் செல்லப்பட்டு ஒரு மாதத்தின் பின்பே மேகநாதனின் கொலை நடைபெற்றது. மேகநாதனின் கொலையைப் புலிகள் தான் செய்தார்கள் என்று கூறினாலும் இக் கொலைக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் இக்கொலையைச் செய்தவர்கள் மட்டக்களப்பில் இயங்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே எனத் தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு புளொட் இயக்கத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களைத் தீர்த்துக் கட்டும் நோக்கம் புளொட் இயக்கத்துக்கும், இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கும் ஏற்பட்டது.

அந்தவகையில் பலரை இவர்கள் குறிவைத்துள்ளனர். அதில் மேகநாதன் பலியாகி விட்டார். அடுத்த குறி வவுணதீவு முன்னாள் உதவி பிரதேச சபைத் தலைவர் இ.நாகலிங்கத்தின் மீதே (சின்னப்பொடியன்) இவர்களின் கொலைத்திட்டம் அம்பலமாக சின்னப்பொடியன் படுவான்கரைப் பகுதிக்குக் குடும்பத்துடன் தப்பிச் சென்று விட்டார்.

இதுதான் இன்றைய மட்டக்களப்பு நிலவரம். ஏட்டிக்குப் போட்டியான கொலைகளும், திட்டமிட்ட கொலைகளுமே நடைபெறுகின்றன. கொலைகள் யார் செய்தாலும் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் இக்கொலைகள் பற்றி இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினரும் தகுந்த விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை தயாரிக்க வேண்டியதும் கட்டாயமாகும்.

வேலுப்பிள்ளை - பரணிதரனின் கொலையை புளொட் இயக்கம் செய்ததும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக அரச படையினரே கொலைகளைப்புரிந்து விட்டு ஆர்ப்பாட்டத்திற்குத் து}ண்டுவது பொருத்தமற்ற செயல். ஏனெனில் கடந்த வெள்ளிக்கிழமை (15.08.2003) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊர்வலத்துக்கு அரச படையினரே பின்னணியில் இருந்தார்கள் என்பது அன்றைய சம்பவங்கள் அனைத்தும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

இச்செயல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மௌனம் சாதிக்காமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச படைகளின் நடவடிக்கைகள், அட்டூழியங்கள், மிரட்டல்களை உடனுக்குடன் அரசின் மேல்மட்டத்துக் குத் தெரியப்படுத்துவதுடன் இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அல்லாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச படைகளுக்கு எதிராக மக்கள் திரண்டெழும் நாள் வெகு தொலைவில் இல்லையென்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் அறிய வேண்டும்.[/color]


-நன்றி-

தமிழ் அலை
Reply


Messages In This Thread
வேண்டுகோள் - by sethu - 08-21-2003, 04:19 PM
[No subject] - by sethu - 08-21-2003, 04:30 PM
[No subject] - by sethu - 08-21-2003, 04:32 PM
[No subject] - by sethu - 08-21-2003, 06:49 PM
[No subject] - by sethu - 08-22-2003, 04:46 PM
[No subject] - by sOliyAn - 08-23-2003, 12:50 AM
[No subject] - by sethu - 08-23-2003, 08:33 AM
[No subject] - by sethu - 08-26-2003, 07:48 PM
[No subject] - by sethu - 09-03-2003, 09:03 AM
[No subject] - by Mathivathanan - 09-03-2003, 10:54 PM
[No subject] - by sethu - 09-09-2003, 06:57 PM
[No subject] - by sethu - 09-09-2003, 06:57 PM
[No subject] - by yarlmohan - 09-09-2003, 07:10 PM
[No subject] - by sethu - 09-09-2003, 07:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)