02-26-2005, 02:29 AM
stalin Wrote:திருமாவளவன் ராமாதாஸ் போன்றவர்கள் ஈழத்தை ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக நல்ல ஒரு கலைஞனை தூற்ற கூடாது. ஜெயலிலதா பின்னால் என்பது அப்பட்டமான வதந்ததி ; சாதியை வைத்து அரசியல் நடத்துபவர்களிலும் பாhக்க கமல் மிகவும் தமிழ் பற்றுள்ளுவர்
தமிழ் பற்று உள்ளவர் தான் ஆங்கிலத்தில் தனது திரைப்படத்துக்கு பெயர் வத்தாரா? யாருக்கு காது குத்த பார்க்கின்றார். நான் என் மனதை திறந்து சொல்கின்றேன். கமலின் திரைப்படங்களை பார்த்து அவரின் அவரின் ரசிகனாகவே இருந்தேன். அதுவும் எங்கள் அப்பா அவரின் திரைப்படம் என்றால் விரும்பி பார்ப்பார். அவற்றை பார்த்து பார்த்து நானும் அவரின் ரசிகனானேன். நான் அவரின் நடவடிக்கைகளை சண்டியர் திரப்படத்தில் இருந்து அவதானித்து வருகின்றேன். வேண்டும் என்றே வம்பு செய்கின்றார். தமிழின் மீது பற்றுள்ளவர் எனில் திரைப்படத்தின் பெயரினை மாற்றட்டும். அதை விடுத்து விதண்டாவாதம் செய்தால், அவர் செய்யட்டும். நாமும் அவரின் திரைப்படத்தை பார்ப்பதை தவிர்ப்போம்.

