08-26-2003, 02:22 PM
நல்ல மொழி நடையுடன் அலங்கார வார்த்தைகளுடனும் முதல் மதவிடாய் என்பதை எவ்வளவு அலங்கார வார்த்தை கொண்டு கூற முடியுமோ அந்தளவுக்கு கூறி இருக்கிறீர்கள். அனைத்து கருத்தாடல் காறருக்கும் வாழ்த்துக்கள்.
உண்மையில் அந்த சடங்கு ஒரு தேவை அற்றது என்பது எனது கணிப்பு. ஆனாலும் இன்று அமோகமாக கொண்டாடி வருகிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூக அக்கறை உடைய ஒவ்வொருவரினதும் கடமையாகிறது. சடங்கை செய்வதும் செய்யாமல் விடுவதும் கேளிக்கைஆக்குவதும் அவரவர் குடும்ப விடயம்.
தனி ஒருவருடைய சில குணங்களையே மாற்ற முடியாத போது எப்படி ஒரு சமூகத்தில் காலம் காலமாக பின்பற்றி வரும் சடங்கை மாற்றி அமைத்து விட முடியுமா என்ன..! காலம் செல்லலாம் அறவே நீங்க. அனாலும் சிலர் அத்தகைய சடங்கை செய்யாமலே விட்டு விடுகிறார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.
ஆனாலும் மாதவிடாய் சக்கரத்துள் ஒரு பெண் ஆளாகிறாள் எனும் போது அவளிற்கான அன்பு அரவணைப்பு என்பது அதிகமாக தேவைப்படுகிறது. அதே போல் தான் ஆண் குழந்தைகளிற்கும் அன்பு ம் அரவணைப்பும் வேண்டும் என்கிறது உளவியல் மருத்துவம்.
நளாயினி தாமரைச்செல்வன்.

[b]Nalayiny Thamaraichselvan