Yarl Forum
பேச்சு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: பேச்சு (/showthread.php?tid=8205)

Pages: 1 2 3 4


பேச்சு - Chandravathanaa - 08-21-2003

[b]அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது.
எப்படித்தான் பார்த்தாலும் எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா ஒத்துழைக்க மறுத்து, ஒத்திகைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லாது எத்தனையோ பேருடன் வாய்குளறி......... தடுமாறியிருக்கிறேன். அப்படியான சமயங்களில் எழுத்தின் ஆங்காரம், பேச்சில் ஓங்கவில்லையே எனப் பலர் என்னிடம் ஆச்சரியப் பட்டுள்ளார்கள். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒத்திகை பார்ப்பு என்பது எனக்குள்ளே அரங்கேறி அசை மீட்கும்.

அவர் மீது எனக்கு நல்ல மதிப்பு. அதனால்தான் இன்று இத்தனை தரமாய் ஒத்திகை பார்ப்பு. மேடைகளிலும், வானொலிகளிலும் வாய் திறந்தாலே அருவியாகக் கொட்டும் அவர் தமிழில் நான் மெய் மறந்து போயிருக்கிறேன். வார்த்தைகளில் அழகு மட்டுமா? வயதான அவரிடமிருந்து வெளிப்படும் முற்போக்குச் சிந்தனையுடனான, புதுமை நிறைந்த, சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் என்ன ஒரு தெளிவு. அடித்து வைத்துச் சொல்லும் கருத்துக்களிலுள்ள நியாயம். உண்மையிலேயே நான் வியந்து போவேன்.

கடந்த வாரமும் ஐரோப்பிய வானொலி ஒன்றில் கிட்டத்தட்ட 40 நிமிட நேரங்கள் அவரது வீச்சான உரை ஒலிபரப்பானது. எடுத்துக் கொண்ட விடயம் என்றதாக இருந்தது. இன்றைய எமது கணினி உலகப் பெண்களே சாமத்தியச்சடங்கு அவசியந்தான் என்று எண்ணி தமது பெண் குழந்தைகளைக் காட்சிப் பொருளாக்கிக் கொண்டிருக்கும் அவல நிலையில் அவர் அது அவசியமே இல்லை.. என்று வாதிட்டு, வானொலி அறிவிப்பாளருக்கு இடையிடையே எழுந்த அது சம்பந்தமான சந்தேகங்களுக்கும். தங்கு தடையின்றிப் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஐம்பதைத் தொட்ட ஒருவர் இப்படி
ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்ததில் எனக்கு மெய்சிலிர்த்தது. அவரைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.

அந்த எனது நினைப்பை இன்று எப்படியாவது செயலாக்க வேண்டும் என்ற முனைப்பில், மீண்டும் ஒரு முறை மனசுக்குள் எப்படி அவருடன் பேசுவது என ஒத்திகை பார்த்து விட்டு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன்.

வழமைக்கு மாறாக எனக்கும் இன்று தங்கு தடையின்றிப் பேச வந்தது. பாராட்டினேன். அவரை நியமாகவே மனசாரப் பாராட்டினேன். அவரின் தமிழ்ப்புலமையை, பேசுந்திறனை, பொருள் கொண்ட கருத்துக்களை, அதைச் சயையோர்க்குத் தரும் விதத்தை ... என்று பாராட்டினேன். பேச்சு அலுக்கவில்லை. இருந்தாலும் பின்பொருமுறை பேசுகிறேன் என்று சொல்லி தொடர்பைத் துண்டிக்க முனைந்தேன்.

அவர் பல தடவைகள் நன்றி

ஏன் நாட்டுக்குப் போறிங்களோ..?
இன்றைய இப்போதைய நிலையில் புலத்தில் இதுதானே சகயம் என்பதால் உடனேயே

இல்லையில்லை............
மகள் பெரியபிள்ளையாகி ஒரு மாசமாச்சு. வாற சனிக்குத்தான் ஹோல் கிடைச்சுது. அதுதான் அந்த வேலையளோடை ஓடித் திரியிறன். எல்லாருக்கும் கார்ட் குடுத்திட்டன்..................அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.

நான் தொலைபேசியை வைத்து விட்டேன்.[/color]

சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி
21.8.2003


- nalayiny - 08-21-2003

ஐயோடா....!!!!!


- kuruvikal - 08-21-2003

அவர் நல்லா ' பெண்ணியவாதிகளின்' பேச்சுக் கேட்கிறவர் போல.....! அந்தச் சாயலில விட்டுருக்கிறார்....! எல்லாம் copy and paste தான்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- இளைஞன் - 08-21-2003

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆரம்பித்தில் கதையை வாசிக்கத் தொடங்கிய பொழுதே நினைத்தேன், முடிவில உதுதான் வரப்போகுது என்று. நம்பிக்கை வீண்போகவில்லை.

மகிழ்ச்சி


- sethu - 08-21-2003

அப்ப வேதாளம் மீண்டும் முருக்க மரத்ததைத்தானே நாடுது.


- Paranee - 08-21-2003

இதற்குத்தான் ஒரு பழமொழி சொல்வார்கள்

ஞாபகம் வரவில்லை


- Chandravathanaa - 08-21-2003

ஊருக்குத்தான் உபதேசம்
உனக்கில்லை


- Chandravathanaa - 08-21-2003

[quote=Chandravathanaa]ஊருக்குத்தான் உபதேசம்
உனக்கில்லை

[b]ஊருக்குத்தானடி உபதேசம்
உனக்கில்லையடி பெண்ணே!


- kuruvikal - 08-21-2003

ஊருக்குள் தானடி பெண்ணே
நீயும் அடக்கம்...!
பெண்ணே நீ விட்ட பாணமே
உன்னை மீள அடையும் போது
அதன் வலி தெரிகிறதா....?!
தெரிந்தால் நீ மனிதன்
அன்றில் பிசாசு...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Chandravathanaa - 08-21-2003

[size=18][b]ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு


- Paranee - 08-21-2003

நன்றி சந்திரவதனா அக்கா

[quote=Chandravathanaa]ஊருக்குத்தான் உபதேசம்
உனக்கில்லை


- Kanani - 08-21-2003

அவருடைய வீட்டிலயும் பெண்ணியம் இருக்கோ ஆருக்குத் தெரியும்!


- Kanani - 08-21-2003

அது சரி சாமத்தியச் சடங்கு ஏன் செய்யிறவை? தெரிஞ்சா சொல்லுங்கோ....


- kuruvikal - 08-22-2003

வேற என்னத்துக்கு பப்பிளிசிற்றி...தான்..!
:twisted: :?: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sOliyAn - 08-22-2003

பப்ளிசிற்றி இல்லை கூட்டாளி... ஒரு காலத்தில் வீட்டுக்குள் முடக்கப்பட்ட பெண் பிள்ளைகள் திருமணத்துக்கு தயாராகிவிட்டதை அறிவிக்க இபபடியான ஏற்பாடு.. ஆனால் தற்போது..??!!


- kuruvikal - 08-22-2003

நோ நோ...அப்ப இப்படி ஒரு சடங்கு ஏன் உலகில் அமெரிக்கா கண்டத்தில் இல்லை ஐரோப்பா கண்டத்தில் இல்லை...ஆசியாவில் வடக்கில் இல்லை கிழக்கில் இல்லை..அவுஸ்திரேலியாவில் இல்லை...ஏன் அங்கெல்லாம் பெண்கள் வயதுக்கு வருவதில்லையோ....அவர்கள் வீட்டுக்குள் தாங்களா காலத்தின் தேவைக்காக அடங்கிக் கிடக்கவில்லையோ....?!
உது பப்பிளிசிற்றிக்குத்தான்....!
அங்கு இரண்டு பப்பிளிசிற்றி...ஒன்று குடும்ப நிலைகள்...இரண்டாவது...குமர் ஒன்றுக்கு பகிரங்க ஆறை கூவல் விடுவது....என்ன பைத்தியகாரத்தனம்...இதற்குள் எவ்வளவு பெண் மூடநம்பிக்கை சிதறிக் கிடக்குது...அது தெரியாது போல....! உதில பெண்கள்தான் முன்னிலையில நிண்டு காஜ்சிபுரம் கட்டி அட்டியல் தாலிக்கொடி சங்கிலி போட்டு....ஆள் காட்டி....?! இதுவும் இல்லையென்டா அதுகள எப்ப காட்டுறது....????!!!!


- sOliyAn - 08-23-2003

அமெரிக்க ஐரோப்பா கண்டங்களிலைதான் காஞ்சிபுரம் காட்டீனம்.. போதாததுக்கு வாறவைக்கு சந்தன கும்பா.. பன்னீர்குடம்.. வெள்ளித் தட்டென்று அன்பளிப்பு வேறை..


- Mathivathanan - 08-23-2003

sOliyAn Wrote:அமெரிக்க ஐரோப்பா கண்டங்களிலைதான் காஞ்சிபுரம் காட்டீனம்.. போதாததுக்கு வாறவைக்கு சந்தன கும்பா.. பன்னீர்குடம்.. வெள்ளித் தட்டென்று அன்பளிப்பு வேறை..
அட அங்கைதான் காஞ்சிபுரம் கட்டிக்கொண்டு சந்தன கும்பா.. பன்னீர்குடம்.. வெள்ளித் தட்டுகுடுக்கவிடுறாங்களில்லையெண்டு இஞ்சை வந்தா.. இஞ்சையும் வந்து கழுத்தறுக்கிறாங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Paranee - 08-23-2003

கொச்சை ஏன்
விளக்கம் தரலாமே ஏன் கொண்டாடுகின்றார்கள் என்று ?
அதன் மூலம் அதற்கு ஒரு தீர்வும் எடுக்கலாம் இல்லையா ?
உண்மையான காரணம் பணவருவாய் பெறுதல் மற்றும் பெண்ணிற்கான பாதுகாப்பு ஏற்பாடாகவும் இருக்கலாம் இது எனது கணிப்பு.


- Mathivathanan - 08-23-2003

அட பக்கத்துவீட்டிலை இருக்கிறவன் எந்த நாட்டவன்.. யாரெண்டு தெரியாதெண்டு உண்மைக்கதை எழுதிறான்.. ஆனால் ஏதொ ஒருநாட்டிலை யாரோ பெயர்தெரியாத தமிழன்.. ஏதொ விழா கொண்டாடுறானாம்.. காஞ்சிபுரம் கட்டிக்கொண்டு வெளிக்கிட்டக்கொண்டு அவன் தன்னுடைய ஆக்களை வரவழைத்து ஏதோ குடுக்கிறானாம்.. வாங்கிறானாம் எண்டது மாத்திரம் தெரியுது. தமிழன் அவங்களுக்கிள்ளை கொண்டாடுறது மாத்திரம். பிடிக்கேல்லையாம்.. உது எப்பிடியிருக்கு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->