02-25-2005, 11:41 PM
அவர்கள் வாதத்திற்கும் ஒரு முகாந்திரம் உள்ளது. எப்படியெனில் நாம் ஊரில் சிகரெட் பிடிப்பதோ மது அருந்துவதோ காதலிப்பதோ பெற்றோர்களுக்கு தெரியாமல் செய்வதற்கு அதிக றிஸ்க் எடுக்க வேண்டும். ஏnனினல் அந்த சுற்று வட்டாரம் முழுவதிலும் உறவினர்கள் அப்பாவின் நண்பர்கள் மாமாவின் நண்பர்கள் என அனைத்து தெரிந்த முகம். சந்தியில் நிற்பதை கண்டாலே வீட்ட போ! கொப்பரிட்ட வாரறன் என வெருட்டும் பெரியவர்கள். இதற்காக அங்கே உள்ளவர்கள் மது சிகரெட் அறியாதவர்கள் என்றோ சொல்ல வரவில்லை. ஒப்பீட்டளவில் புறச்சு10ழ்நிலை அதற்கான சாத்தியத்தை தரவில்லை என்பதே என் கருத்து. ஆனால் இங்கே வீட்டை விட்டு வெளியேறினால் பிள்ளைகளுக்கு ஒரு மனக்கிளர்ச்சியை தரக்கூடிய சுதந்திரம். இதை இங்குள்ள நாகரீகம் அனுமதிக்கின்றது தனமனித சுதந்திரம் எனும் பெயரால். இதைத்தான் எம்மவர்கள் ஐரோப்பிய நாகரீகம் மீது வசை பாடுகின்றார்கள். ஆனால் என் கருத்து இது நாகரீகத்தின் தவறல்ல. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான தொடர்பாடலில் உள்ள பிழையே-
.
.!!
.!!

