![]() |
|
இது சரிதானா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: இது சரிதானா? (/showthread.php?tid=5008) |
இது சரிதானா? - Mathan - 02-25-2005 இது சரிதானா? ஐரோப்பியக் கலாச்சாரம் ஒரு தீண்டத்தகாத விடயம் எனக் கருதும் ஐரோப்பியத் தமிழர்கள், ஐரோப்பியாவில் தமது பிள்ளைகள் சிகரெட் புகைத்தாலோ அல்லது மது அருந்தினாலோ அல்லது காதலித்தாலோ.... ஐரோப்பியாவுக்கு வந்ததால்தான், தமது பிள்ளைகள் இப்படியான பழக்கங்களைப் பழகிக் கெட்டலைகிறார்கள். என்று சொல்லித் தலையிலடித்துக் கொள்கிறார்கள். ஆனால் இப்படித் தலையிலடித்துக் கொள்ளும் பெற்றோராகிய இவர்கள், முக்கியமாகத் தந்தையர் ஊரிலேயே தமது பருவ வயதில் சிகரெட் புகைக்கத் தொடங்கி, மது அருந்தத் தொடங்கி இன்னும் அதை இங்கு ஐரோப்பியாவிலும் தொடர்கிறார்கள். அத்தோடு ஐரோப்பியாவில் வாழ்வதால்தான் தமது பிள்ளைகள் காதல் என்னும் மாயவலையில் சிக்கி மாய்கிறார்கள் என்று சொல்லி ஐரோப்பியக் கலாச்சாரத்தைத் திட்டும் இவர்களில் அனேகமானோர் ஊரில் காதல் செய்யாமல் இருக்கவில்லை. சிகரெட், மது, காதல் இவைகள் மூன்றுமே ஊரிலும் இளைஞர்களை விட்டு வைக்காத போது ( இதை அநுபவரீதியாக உணர்ந்திருந்தும், தெரிந்திருந்தும்) எம்மவர்கள் அர்த்தமற்ற முறையில் ஐரோப்பியக் கலாச்சாரத்தைச் சாடுகிறார்களே! இது சரிதானா? நன்றி - சந்திரவதனா - Thaya Jibbrahn - 02-25-2005 அவர்கள் வாதத்திற்கும் ஒரு முகாந்திரம் உள்ளது. எப்படியெனில் நாம் ஊரில் சிகரெட் பிடிப்பதோ மது அருந்துவதோ காதலிப்பதோ பெற்றோர்களுக்கு தெரியாமல் செய்வதற்கு அதிக றிஸ்க் எடுக்க வேண்டும். ஏnனினல் அந்த சுற்று வட்டாரம் முழுவதிலும் உறவினர்கள் அப்பாவின் நண்பர்கள் மாமாவின் நண்பர்கள் என அனைத்து தெரிந்த முகம். சந்தியில் நிற்பதை கண்டாலே வீட்ட போ! கொப்பரிட்ட வாரறன் என வெருட்டும் பெரியவர்கள். இதற்காக அங்கே உள்ளவர்கள் மது சிகரெட் அறியாதவர்கள் என்றோ சொல்ல வரவில்லை. ஒப்பீட்டளவில் புறச்சு10ழ்நிலை அதற்கான சாத்தியத்தை தரவில்லை என்பதே என் கருத்து. ஆனால் இங்கே வீட்டை விட்டு வெளியேறினால் பிள்ளைகளுக்கு ஒரு மனக்கிளர்ச்சியை தரக்கூடிய சுதந்திரம். இதை இங்குள்ள நாகரீகம் அனுமதிக்கின்றது தனமனித சுதந்திரம் எனும் பெயரால். இதைத்தான் எம்மவர்கள் ஐரோப்பிய நாகரீகம் மீது வசை பாடுகின்றார்கள். ஆனால் என் கருத்து இது நாகரீகத்தின் தவறல்ல. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான தொடர்பாடலில் உள்ள பிழையே- - sinnappu - 02-26-2005 தம்பி மதன் சரியில்லை தான் என்ன செய்ய அப்பு கனக்க கதைச்சால் பிள்ளையள் ஓடிடுங்கள் பிறகு வீட்டில இருந்து ஒப்பாரி வைக்க ஏலாது தம்பி தயா சொல்வதைப்போல எங்களுக்கை தொடர்பு இல்லை ம் இருந்தும் ஒண்டும் பெரிசா கிளிக்கப்போறேல்லை அதுவள் தாங்கள் விரும்பினதை செய்தே தீருங்கள் அதில மாற்றம் இல்லை - sinnappu - 02-26-2005 Quote:Thaya Jibbrahn உதெல்லாம் முந்தி இப்ப என்னைக்கண்டா அப்பு 2 பெக் அடிச்சுட்டு போங்கோ எண்டுறாங்கள் என்னை நல்லா மதிக்கிறாங்கள் பிறகு ஏன் நான் அவங்களை எதிர்கப்போறன் 2 க்கு 3 ஆ அடிச்சிட்டு வந்திடுவன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-26-2005 ம் இது உண்மை தான்.. அங்க அவடத்து மதவு எல்லாம் இருந்து பீடி சுருட்டு.. பனங்கள்ளு.. என்று ஊதித்தள்ளினவை.. இப்ப வந்து கதைவிடுவினம். எத்தனையோ தகப்பன் மார் சாராயத்தில் இருந்து சிகரெட்.. காதல் வரை பண்ணித்தான் கலியாணம் செய்திருப்பினம். பிள்ளைகள் செய்தால் துள்ளிக்குதிப்பினம். அடுத்தவையைப்பாத்து பிள்ளைகள் பழகத்தேவையில்லை.. பெற்றோரைப்பாத்து அவர்களின் கதையைக்கேட்டு கு}ட பழகுங்கள். இதெல்லாம் செய்யாமல் இருக்கிற பெற்றோர்கள் அரிது. அப்படிப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள். இப்படி செய்தல் குறைவு.
- sinnappu - 02-26-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்ன பிள்ளை ரென்சன் ஆகிறது போல இருக்கு :wink: :wink: :wink: பனங்க...ளு ஆகாாாாாாாாாா தமிழுக்கும் உது தெரியும் :wink: :wink: :wink: :wink: - tamilini - 02-26-2005 Quote:பனங்க...ளு ஆகாாாாாாாாாா தமிழுக்கும் உது தெரியும்என்ன தாத்தா.. நாங்க என்ன குதிச்சே வந்தனாங்க.. வானத்தில் இருந்து.. எல்லாம் கேள்வி ஞானம் தான்.. :wink: - Magaathma - 02-27-2005 ¿£í¸ ±øÄ¡Õï ¦º¡øÖÈÐ ÓüÈ¢Öõ ºÃ¢. þÅ ¦Àò¾¨ÅÔõ ´Øí¸¡ þÕó¾¡ À¢û¨ÇÂÙõ ´Øí¸¡ þÕìÌí¸û, þôÀ¢Ê þÅÂ¢Ä Ì¨È ¦º¡øÄ¢ ¾í¸¼ ÌüÈò¾ Á¨Èì¸ô À¡ì¸¢Éõ. -------------------------------------------- ¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷. - Mathan - 02-27-2005 <b>இது குறித்து வேறு சிலரின் கருத்துக்கள் .......</b> என் அனுபவத்தில் இது சரியல்ல என்றே நினைக்கிறேன். புகைபிடித்தல், மதுப் பழக்கம் இரண்டும் தனி மனித விருப்பம். இதில் கலாசாரத்துக்குப் பங்கு இருப்பதாக தெரியவில்லை. # posted by muthalvan : 6:00 PM சந்திரவதனா நான் நினைக்கிறேன் நாம் முதலில் எமது பிள்ளைகளில் நம்பிக்கை வைக்கவேண்டும். குடி சிகரெட் காதல் போன்றவற்றை பெரிதாக்கி பூடகமாக நடக்கும் போது தான் அவர்களுக்கம் அது ஏதோ பெரிய விடையமாகத் தோன்றும். முடிந்தவரை அவர்களுடன் கதைத்து அவர்கள் பழகுபவர்கள் செய்பவை போன்றவற்றை நாம் தெரிந்து கொண்டால் பிரச்சனை இருக்காது. எனது அனுபவம் ஒன்றை இங்கே கூற விரும்புகின்றேன். எனது மகன் ஒருநாள் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து விட்டான். நடக்கமுடியாமல் ஒரே சத்தி. அவனது நண்பன் எனது வீட்டிற்குத் தொலைபேசியில் அழைத்துத் தாம் கூட்டி வருவதாகவும் எனது மகன் நடக்க முடியாமல் இருக்கின்றார் வாசலில் நின்று உள்ளே கூட்டிச்செல்லும் படியும். நான் அப்படியே வாசலில் நின்று அவனை உள்ளே அழைத்துச் சென்றேன். ஒரே சத்தி. நான் அவற்றைத் துடைத்து அவனது உடுப்பை மாற்றிப் படுக்க விட்டேன். அவனது வாயிலிருந்து வந்தது ஒன்றே ஒன்றுதான். mom I am sorry I won't do it again நான் அடுத்த நாள் கதைக்கும் போது சொன்னேன் குடிப்பது தவறில்லை ஆனால் உனது அளவு உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். உனது நடத்தை மற்றவர்களின் fun ஐக் கெடுக்கக் கூடாது என்று. அவன் சிரித்தபடி சொன்னான் வேண்டாம் இது இனி என்று. குடித்தாலும் அளவாகக் குடிப்பான் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. # posted by கறுப்பி : 7:41 PM சாடுவோருக்கு சாடுவதற்கு என்று ஏதாவது வேண்டும், அதற்குக் கிடைத்தது கலாச்சாரம்! எந்தக் கலாச்சாரத்தில்தான் இவையெல்லாம் நடக்காமல் உள்ளது? # posted by Radhakrishnan : 11:03 PM இது விடயத்தில் அம்மாக்களை விட அப்பாக்கள்தான் பிள்ளைகளுடன் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதை அனேகமான குடும்பங்களில் காண முடிகிறது. # posted by Chandravathanaa : 10:26 PM |