02-25-2005, 11:27 PM
விலங்குடைக்க புறப்பட்டவர்கள் விலங்குத்தனமாய் நடப்பதாய் எந்தக்கருத்தும் முன்வைக்கப்படவில்லையே. எமது பண்பாடு நாகரீகம் பற்றி தெளிவான அறிவின்றி இளம் சந்ததியிடம் அது கொண்டு செல்லப்படும் போதுää அவர்கள் பண்பாட்டின் தொன்மையை அதில் உள்ள நல்ல விடயங்களையும் வெறுக்க நேரிடலாம். அதைத்தான் பெண்களின் பிரச்சனையை மையப்படுத்தி... விலங்குடைக்கும் வேகத்தில் துகில்களையல்லவா உரிந்துவிடப் போகிறார்கள் என பூடகமாய் சொல்லப்பட்டுள்ளது. அதனை நேரடியாக பெண்கள் நிர்வாணமாய் வீதியில் போவது என எழுதியிருப்பதாய் அர்த்தம்கொள்ளலாகாது. ஆக்கம் சொல்ல முனைவது என்னவென்றால் பெண்கள் செல்ல வேண்டிய செல்நெறி அவர்களுக்கு தெளிவாக அறிவுறுத்தப்பட வேண்டும். மாறாக நாம் இன்னமும் பழைய பஞ்சாங்க கதைகளை பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் இங்கே மேற்கத்தேள மண்ணிலே உள்ள அரைகுறை வாழ்க்கை தான் தங்கள் விடுதலை என எண்ணி பிழையான பாதையில் செல்லலாம். செல்கின்றார்கள். சட்டி சுடுவதாக துள்ளிக்குதித்த மீன் அடுப்புக்குள் விழுந்த கதையாகி விடக்கூடாது பெண்கள் விடுதலையென்பது.
.
.!!
.!!

