Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி.....................
#1
இளவரசர் சார்ள்சைச் சந்தித்து உரையாட விடுதலைப்புலிகள் விருப்பம்

இங்கிலாந்தின் முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் அவர்களின் குறுகியகால இலங்கைப் பயணத்தில் சுணாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான மட்டக்களப்பும் அடங்குவதாகவும் இவருடன்; கலந்துரையாட புலிகள் விருப்பமாக இருப்பதாகவும் அறிய வருகின்றது.

இதுகுறித்து புலிகளின் சமாதானச் செயலகத்தின் செயலாளர் எஸ். புலித்தேவன் அவர்கள்; றாய்ற்றருக்கு வெள்ளியன்று கருத்துத் தெரிவிக்கையில்:

சாள்ஸ் அவர்களை முழுமனதுடன் வரவேற்பதுடன் அவருடன் கலந்துரையாடுதையும் விடுதலைப் புலிகள் அமைப்பும் தமிழ் சமூகமும் விரும்புகின்றது. அரசாங்கத்தினாலும் வெளிநாட்டு பிரமுகர்களாலும் புறக்கணிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களின் நிலைமைகளை தெரியப்படுத்துவது முக்கியமானதொன்றாகவும் கருதுகின்றது.

பிரித்தானிய பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர் நிவாரணப்பங்கீட்டில் சிறீலங்கா அரசின் பாரபட்சம் குறித்தும் மேலும் தெளிவுபடுத்தவுள்ளனர்.

இலங்கையிலுள்ள இங்கிலாந்து தூதரகத்தின் கூற்றின்படி சாள்ஸ் அவர்கள் தனியாகவே மேற்படி பயணத்தை குறிப்பட்ட இடங்களுக்கு மேற்கொள்ள இருப்பதாகவும் இதனை அடுத்து அவுஸ்திரேலிவுக்கான சுற்றுப்பயணம் தொடருவதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் செயலாளர் கொபி அனான் அவர்களின் வடக்கு கிழக்குக்கான பயணத்தையடுத்து விடுதலைப் புலிகளும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் மிகவும் கவலையடைந்திருப்பதாகவும்ää சார்ள்ஸ் அவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளின் கோர அழிவைப் பார்வையிட வருகை தந்தால் அது தமிழ் மக்களுக்கு மிகவும் ஆறதல் தரும் விடயமாக அமையுமென்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்துக் கருத்துக்கூறிய பெயர் குறிப்பிட விரும்பாத அரச பிரதிநிதியொருவர் விடுதலைப் புலிகளைச் சந்திப்பதற்கு இளவரசர் சாள்ஸ் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.






புதினம் இணையத்திலிருந்து சடப்பட்டது நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி..................... - by வியாசன் - 02-25-2005, 08:31 PM
[No subject] - by Malalai - 02-25-2005, 10:59 PM
[No subject] - by Mathan - 02-25-2005, 11:02 PM
[No subject] - by Malalai - 02-25-2005, 11:09 PM
[No subject] - by Mathan - 02-25-2005, 11:13 PM
[No subject] - by Malalai - 02-25-2005, 11:21 PM
[No subject] - by Mathan - 02-25-2005, 11:31 PM
[No subject] - by Malalai - 02-25-2005, 11:40 PM
[No subject] - by Mathan - 02-25-2005, 11:45 PM
[No subject] - by Malalai - 02-25-2005, 11:47 PM
[No subject] - by anpagam - 02-25-2005, 11:55 PM
[No subject] - by sinnappu - 02-25-2005, 11:56 PM
[No subject] - by Malalai - 02-26-2005, 12:03 AM
[No subject] - by Mathan - 02-26-2005, 12:28 AM
[No subject] - by UZI - 02-26-2005, 12:55 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 04:48 AM
[No subject] - by வியாசன் - 02-27-2005, 10:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)