02-24-2005, 07:32 PM
இன்றைய தமிழோசை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா கடிதம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவரும் தமது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாய் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.
சிறுபான்மை அரசை அமைத்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கி அதனை பெரும்பான்மை அரசாக்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைச்சர்களான அமைச்சர் முத்து சிவலிங்கமும், பிரதியமைச்சர் செல்லச்சாமியும் தற்போது ராஜினாமா கடிதங்களை கொடுத்திருக்கிறார்கள்.
இவர்களின் கடிதங்களுடன் பிரதமர் ராஜபக்ஷ ஜனாதிபதி குமாரதுங்கவை சந்திக்கச் சென்றிருப்பதாக அறியக்கிடைக்கிறது.
அரசில் தமது கட்சி ஓரங்கப்படப்படுவதாலும், அரசின் முடிவுககளை எடுக்கும்போது தாங்கள் கலந்து ஆலோசிக்கப்படுவதில்லை என்பதாலும் தமது கட்சி அமைச்சர்கள் பதவிவிலகல் முடிவினை எடுத்துள்ளதாக தொழிலாளர் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.
மேல்கொத்தளை நீர்-மின் திட்டம், அதிகரித்துவரும் போலீஸ் கெடுபிடிகள் ஆகியவையும் அமைச்சர்களின் முடிவுக்கு காரணம் என அவர் கூறினார்.
அமைச்சர்கள் ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளபோதிலும், தமது கட்சி அரசுக்கு வழங்கும் ஆதரவை இன்னும் விலக்கிக்கொள்ளவில்லை என்றும், அது தொடர்பில் விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் யோகராஜன் கூறினார்.