02-24-2005, 02:30 AM
சரி .. சரி.. நீங்கள் ஏன் களப்பொறுப்பாளர்கள் பற்றியும் மட்டுறுத்தினர்கள் பற்றியும் கதைச்சிட்டு இருக்கிறியள்.... அவை எத்தினை வேலையில் இருகினமோ.. யாருக்கு தெரியும்... நானே 3 மணித்தியாலம் இன்று இதிலை இருந்தேன்.. ஆனால் எல்லாம் படித்து முடியலை.. அவர்களுக்கும குடும்பம் பிள்ளை என்று இருந்தால் அவர்கள் வந்து இருக்கலாமோ... நேரம் உள்ளவர்கள் கிடைக்கும் போது இதனை பயன் படுத்துகிறோம்... அதனை நன்றாகப் பயன் படுத்துவோம்... அவர்கள் இதனை அமைத்து எழுதவும் வசதி செய்து கொடுத்து பூரண சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்கள்.... அதுக்கை அவையையும் வந்து எழுதுங்கள் என்று கூறலாமோ... இல்லை தானே.. நாங்கள் கருத்து எழுதேக்கை கொஞ்சம் அமத்தி வாசித்து பாக்கிறது தான்... ஆகலும் கருத்தை மாற்றாமல் கொஞ்சம் ஜொள்ளு.. கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் அந்த தலைப்புக்கான கருத்து .. என எல்லாத்தையும் உங்கள் கருத்துக்களில் நாகரீகமாக கொடுத்தால் சரி என நான் நினைக்கிறேன்.... அப்படி தான் நான் இவ்வளவு நாளும் எழுதுகிறேன்... எதுக்கும் சும்மா அவர்களை கூப்பிடாமல்.... வீட்டிலை அக்கா தங்கை தம்பிக்கை பிரச்சனை என்றால் அம்மா..! என்று கூப்பிடுறது போலை செய்யாமல் .... அவர்களை தொல்லை பண்ணாமல் எங்கள் கருத்தை வைப்போம்.... அம்மா..! என்று கூப்பிட்ட உடனை அம்மா சொல்வா.. "இரு வாறன் .....! இண்டைக்கு இருக்கு" என்று.... அவ ஏதன் வேலையில் இருக்கேகை தொல்லை பணினால் கோவிக்கிறா தானே... அப்ப இவர்களும் வேலைப்பழுவில் வந்து பார்த்தால் 10 பக்கம் ஓடி இருக்கும் ஆனால் முதல் பக்கத்திலையே தலைப்பு கருத்து மாறி இருக்கும்.. அங்காலை அவ்வளவத்தையும் வாசித்து எதாவது தவறாக எழுதி, தப்பான இணைப்புக்கள் கொடுத்திருக்கிறார்களோ என்று பார்க்கவே .. ஒரு நாள் வேணும்... எனவே அவர்கள் அப்படி தான் இருக்க வேணும் இருப்பார்கள்.. எங்கள் கருத்துக்கள் அவர்களை கவரணும் . ... அவர்களை எரிச்சலடைய செய்யக் கூடாது...
பொல்லைக்கொடுத்து அடி வாங்க கூடாது அவர்கள். எனவே அவர்களை விட்டு விட்டு நாங்கள்... அங்காலை கருத்தெழுதலாமே... எங்காலை என்று என்னை கேட்காதைங்கோ.... நான் போகப்போறன்... நன்றி மீண்டும் சந்திப்போம்
பொல்லைக்கொடுத்து அடி வாங்க கூடாது அவர்கள். எனவே அவர்களை விட்டு விட்டு நாங்கள்... அங்காலை கருத்தெழுதலாமே... எங்காலை என்று என்னை கேட்காதைங்கோ.... நான் போகப்போறன்... நன்றி மீண்டும் சந்திப்போம்
[b][size=18]

