Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தப்பான கணிப்புகள்
#1
தப்பான கணிப்புகள்

ஒருவரை முதன் முதலாகப் பார்க்கும் போது அவரது தோற்றம் எப்படியிருக்கிறதோ (அதாவது உடை நடை எல்லாமே.. எப்படியிருக்கிறதோ) அதை வைத்துத்தான் அவர் உடனடியாகக் கணிக்கப் படுகிறார் என்பதை எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரியவர் அழகிய கவிதை போல நான்கே வரிகளில் சொல்லியிருந்தார். யார் அவர்? எப்படிச் சொன்னார் என்பதெல்லாம் எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. ஒருவர் தேர்ந்தெடுக்கும் உடை முக்கியமானதுமானதுதான். அதை நான் மறுக்கவும் இல்லை. புறத்தோற்றம் என்பதும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்றுதான். அதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை.

அதற்காக காதில் வளையம் வளையமாகத் தோடுகள் கழுத்திலே தூங்கும் நாய்ச்சங்கிலிகளுடன் உலாவரும் எம்மவர்கள், மைக் பிடித்து ரப் பாடும் இளஞர் இளஞிகள் போன்றோரை நண்பர்களூடும் செய்திகளுடூம் பார்த்தும் கேட்டும் வந்ததால் இதுவும் ஆயிரத்தில் ஒன்று என்றே எண்ணத் தோன்றியது. இப்படியான கணிப்பை சரியென்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தொள தொளா ரவுசரும், மொத்தச் சங்கிலியும், காதில் வளையமும் போடுகின்ற இளைஞனையோ இளைஞியையோ நாட்டுப் பற்று இல்லாதவரென்றும், மேலைத்தேயக் கலாச்சாரத்துள் தன்னைத் தொலைத்து விட்டார் என்றும் எடை போட்டு விட முடியாது. இத்தனையும் போட்டுக் கொண்டு நாட்டுப் பற்றோடு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இவை எதுவுமே போடாமல் தாய்நாட்டைப் பற்றிய அக்கறை துளி கூட இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபம் தொலைக்காட்சியில் "அன்பே சிவம்" படம் ஒளி பரப்பானது. அதிலே கூட ஒரு கருத்து வருகிறது. மாதவன், பார்ப்பதற்கு அநாகரீகமாகத் தெரியும் கமலகாசனை தலையிடி பிடிச்ச ஆள் என்ற மாதிரி எண்ணுகிறார். அதே நேரத்தில் ரெயினுக்குள் நல்ல desent ஆக உடை அணிந்து decent ஆகப் பேசத் தெரிந்த ஒருவரிடம் ஏமாந்து போகிறார்.

இதே போலத்தான் புலம்பெயர் இளைஞர்கள் மேலிருக்கும் தப்பான பிரமையும். இந்தப் பிரமை இன்னும் எம்மவரை விட்டுப் போகவில்லை. நாகரீகமும்.. அதனோடான உடை மாற்றங்களும் எமது நாட்டில் எமது முன்னோர்கள் மத்தியில் நடை பெறவில்லையா? எழுபதுகளில் எம்மவர்கள் பெல்பொட்டம் போடவில்லையா. அதற்கும் முன்னர் எம் மூதாதையர் கடுக்கன் போடவில்லையா? வேட்டி, சாரம், குறுக்குக்கட்டு...... என்று வாழ்ந்த சமூகம் இன்று ரவுசர் காற்சட்டை என்று போட்டுக் கொண்டு திரியவில்லையா? எங்களது பாட்டாக்கள் போல எங்களது அப்பாக்கள் உடுத்தவில்லைத்தானே. தலை இழுப்பதும் அப்படித்தானே. அப்படியிருக்க இன்றைய இளைய சமூகத்தை குற்ற முலாம் பூசிய பூதக்கண்ணாடி வைத்து ஏன் பார்க்க வேண்டும்.

காலஓட்டத்தில் சில மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையே. அதே போல வாழும் இடங்களினாலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த மாற்றங்களை வைத்து புலம்பெயர் இளைஞர் சமூகத்தைக் கணிப்பது மிகுந்த கவலைக்குரிய விடயமே.

நன்றி - சந்திரவதனா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
தப்பான கணிப்புகள் - by Mathan - 02-23-2005, 11:37 PM
[No subject] - by Mathan - 02-24-2005, 12:19 AM
[No subject] - by shiyam - 02-24-2005, 01:35 AM
[No subject] - by vasisutha - 02-24-2005, 01:43 AM
[No subject] - by Mathuran - 02-24-2005, 02:47 AM
[No subject] - by Mathan - 02-24-2005, 03:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)