02-23-2005, 01:34 AM
உண்மையில் எங்களுக்கு நேரம் கிடைக்கும் போதுதான் நாம் களத்திற்கு வருகின்றோம். நாம் ஒவ்வொருவரும் வரும்போதும் களப்பொறுப்பாளர்கள் வந்து எம்முடன் கலந்துரையாடுவது என்பதும் நடைமுறைச் சாத்தியமற்றது. வேண்டுமென்றால் களப்பொறுப்பாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை களத்தில் ஏற்படும் பிரைச்சினைகள் சம்பந்தமாக தமது கருத்துக்களை களத்தில் வைத்தால் அது சம்பந்தமாக கள உறவுகளும் தத்தமது கருத்துக்களை தொடர்ந்து முன் வைக்கலாம். பின்பு களப்பொறுப்பாளர்கள் களத்தில் என்ன மாற்றம் செய்யலாம் என்ற தமது இறுதி முடிவினை எடுக்கலாம்.

