Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆண்குழந்தைக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த பெண்கள்
#14
<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->(ஆ)சாமிகள் பரிசோதனைக்குழாயிலா கருக்கட்டவைப்பார்கள்? நீண்ட கருத்தெழுத வேண்டாமென்றுதான் சுருக்கமாக கூறினேன் இந்த (ஆ)சாமிகளால் நிச்சயமாக ஆண்குழந்தையை கொடுக்கமுடியுமா என்று யோசனை செய்ய வேண்டாமா? ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு தங்களை இழக்கிறது பெண்கள்தானே அவையளுக்கே பெண் குழந்தைகளில் விருப்பமில்லையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கை, கொரியா, சீனா, போன்ற நாடுகளிலும் கூட, கணவரது குடும்பத்தினர் பெண்களை ஆண்குழந்தை பெறுமாறு நெருக்குதல் கொடுத்து வருகிறார்கள். இந்தியாவில் இவ்வாறு கொடுக்கும் நெருக்குதல், இறுதியாக வீட்டை விட்டு துரத்துதல், சமையலறையில் விபத்து போல கொலை செய்தல், போன்றவற்றில் போய் முடிந்ததாகவும் பல சம்பவங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து தப்ப, பெண்கள் தாம் ஆண்குழந்தை பெற தம்மாலான அனைத்தையும் செய்ய முயற்சிக்கிறார்கள். இவற்றுள் ஒன்று கடவுளிடம் கேட்பதும், கடவுளின் மனிதர்களாக தம்மை காட்டிக்கொள்ளும் சாமியார்களிடம் போவதும் ஆகும். இவ்வாறாக எந்த திசையிலும் தமக்கு ஆதரவு கிடைக்காத அவலநிலையில் இந்த பெண்கள் வஞ்சிக்கப்படும் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.

நாம் மற்றவர்களது பரிதாபநிலையை விளங்கிக்கொள்ளாமல் எள்ளிநகையாடுவது தவறு. அப்படி நாம் செய்யும் போது, மற்றவர்கள் எமக்கு இதே விதமாக செய்யும் சந்தர்ப்பங்களை நினைத்துப்பார்க்க வேண்டும். உதாரணமாக, பாடகர் குழு ஒன்று நியுயோர்க் வானொலியில், சுனாமியால் கடலில் இழுத்து செல்லப்பட்ட பெண்களுக்கு நீந்த தெரியாததை எள்ளி நகையாடி பாடல் இயற்றி பாடினர். இதுவும் இவ்வாறே பாதிக்கப்பட்டவரை பற்றி கொஞ்சமும் சிந்தித்து பார்க்காமல் செய்த மனித நேசமற்ற செயலாகும்.

"சிறுவர்களை விடுதலைப்புலிகள் படையில் சேர்க்கிறார்கள்" என்றும் "சிறுவர்கள் பாடசாலைக்கு போய்வரவும் வீட்டில் விளையாடவும் சுதந்திரம் வேண்டும்" என்றும் சொல்பவர்களை நினைத்துப்பாருங்கள். அவர்கள் போர்க்கள அனுபவம் இல்லாதவர்கள். போர்க்களத்திலுள்ள வீடுகளையும் பாடசாலைகளையும், அவர்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பாதுகாப்பான வீடுகளோடும் பாடசாலைகளோடும் சமமாக நினைத்துப் பார்க்கிறார்கள். அவர்கள் செய்யும் அதே தவறை நாமும் மற்றவர்களுக்கு செய்யக்கூடாது. இவர்கள் எமது மக்களது பாதிப்புகளையும் சூழ்நிலைகளையும் சிந்தித்து பார்க்காமல் கருத்து வெளியிடுவது போல, நாமும் மற்றவர்களது சூழ்நிலைகளையும் பாதிப்புகளையும் சிந்தித்து பார்க்காமல் கருத்து வெளியிடுவது தவறு. நாம் பாதிக்கப்பட்டவர்கள். நாமாவது சரியான முறையில் செயற்படக்கூடாதா?
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 02-21-2005, 12:44 AM
[No subject] - by sinnappu - 02-21-2005, 01:22 AM
[No subject] - by வியாசன் - 02-21-2005, 11:30 AM
[No subject] - by tamilini - 02-21-2005, 12:43 PM
[No subject] - by seelan - 02-21-2005, 01:48 PM
[No subject] - by tamilini - 02-21-2005, 02:15 PM
[No subject] - by nallavan - 02-21-2005, 04:28 PM
[No subject] - by வியாசன் - 02-22-2005, 02:52 PM
[No subject] - by shiyam - 02-22-2005, 03:28 PM
[No subject] - by Malalai - 02-22-2005, 05:24 PM
[No subject] - by Jude - 02-22-2005, 06:46 PM
[No subject] - by வியாசன் - 02-22-2005, 07:11 PM
[No subject] - by Jude - 02-22-2005, 11:13 PM
[No subject] - by shiyam - 02-23-2005, 03:04 AM
[No subject] - by tamilini - 02-23-2005, 01:46 PM
[No subject] - by shiyam - 02-23-2005, 02:27 PM
[No subject] - by tamilini - 02-23-2005, 03:18 PM
[No subject] - by shiyam - 02-23-2005, 03:40 PM
[No subject] - by tamilini - 02-23-2005, 03:49 PM
[No subject] - by Malalai - 02-23-2005, 04:43 PM
[No subject] - by வியாசன் - 02-23-2005, 06:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)