02-22-2005, 03:20 PM
யாழ்இணையத்தில் நேற்று பொறுப்பாளர் ஒருவரால் ஒரு கருத்து வைக்கப்பட்டது அதில் அவர் குறிப்பிட்ட விடயம் உண்மையானது. ஆனால் முதலில் அதை தனிமடல் மூலம் சொல்லியிருக்கலாம்.
யாழ்களத்தின் குறைபாடுகளை களைந்து அதை மிகவும் தரமான ஒரு களமாக உருவாக்கவேண்டிய நாங்கள் ஒரு தண்டவாளம் போல இணையாது இருக்கிறோம். பொறுப்பாளர்கள் ஒரு பக்கமும் உறுப்பினர்கள் ஒருபக்கமுமாக இருக்கின்றார்கள். இருபகுதியையும் இணைப்பதற்கு கருத்து என்ற இரயில் வண்டியை இடையிடையே விட்டு இணைக்கவேண்டும்.
நேற்று பொறுப்பாளர் வைத்த கருத்துக்களுக்க உறுப்பினர்கள் வைத்த கருத்தை பொறுப்பாளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இது வருந்தத்தக்கது.
உறுப்பினர்கள் நேரத்தை வீணடிப்பதற்காக ஒருவரும் களத்திற்கு வருவதில்லை பல வேலைப்பழுவிற்கு இடையில் வந்து கருத்துக்களை எழுதுகிறார்கள். ஆனால் பொறுப்பாளர்கள் அவற்றில் கலந்து கொள்ளாதது பெரிய குறைபாடுபாடாகிறது. பல சந்தர்ப்பங்களில் கருத்தாடல் தடமாறுகின்றபோதாவது சுட்டிக்காட்டலாம். பொறுப்பாளர்கள் மௌனமாக இருப்பதால் உறுப்பினர்களும் ஒரு குறிக்கோளின்றி கருத்துக்களை எழுதுகிறர்கள்.
அதனால் இடையிடையே பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் ( மாதமொருமுறையாவது) கருத்தாடல் செய்வது களத்தின் வளர்ச்சிக்கு உதவும்.
மற்றையது பொறுப்பாளர்கள் இல்லாதபோது ஒரு சந்தர்ப்பவாதி(பலபெயர்களில் இணையத்தில் விசமம் செய்கிறார்) தன்னுடைய இணையத்தில் (மஞ்சள்நிற இணையம்) கேவலமான செய்திகளை எழுதிவிட்டு யாழ்களத்தில் இணைப்பு கொடுத்துவிடுகிறார். அப்படியான செய்திகள் வருவது களத்துக்கு அவமானம் . பொறுப்பாளர்கள் இல்லாதபடியால் அந்த செய்திகள் நீண்டநேரத்துக்கு அகற்றப்படாமல் இருக்கிறது.
அதனால் நீண்டகால உறுப்பினர்களுக்ககு அப்படியான செய்திகளை [u]<b>மறைப்பதற்கு மட்டும்</b>[/u] சந்தர்பத்தை வழங்கலாம். பொறுப்பாளர்கள் பின் அதைப்பார்த்து அந்த செய்தியின்தரத்தை பார்த்து அதை நீக்கலாம் மறைத்தது தவறாயின் சம்மந்தப்பட்ட உறுப்பினரை எச்சரிக்கை செய்யலாம்
பொறுப்பாளர்கள் தயவுசெய்து மௌனமாக இருக்காமல் உங்களுடைய கருத்துக்களை பரிமாறுங்கள்.
தயவுசெய்து அனைத்து உறுப்பினர்களும் உங்கள் கருத்தை பொறுப்பாளர்களுக்கு தெரிவியுங்கள் நேற்றைய சம்பவம் போன்று இன்னொரு சம்பவத்தை தவிர்ப்போம்
நன்றிகளுடன் உங்கள் வியாசன்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]