Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சரிநிகர்சமானம் செய்த பாரதீ -தயா ஜிப்ரான் -
#1
சரிநிகர்சமானம் செய்த
பாரதீ !
வெறும் விவாகரத்து
பெற்றிடத் தானா
உந்தன் பாடல்கள் ???

நீ
மீண்டொருக்கால்
வர வேண்டும்.
உந்தன் பாடல்களை
அறம்பாட!

இது
கலி கடந்த காலம்

பழையன கழிக்கும் வெறியில்
நிர்வாணமே
நாகரீகம் ஆகலாம்.

புதியன புகுக்கும் பணியில்
தங்க விலங்கணிய
கைகள்
தண்டியாத்திரை நடாத்தலாம்.

இன்னும்
எண்ணாத எதுவுமிங்கே
இன்றைக்கே
நிகழ்ந்தும் விடலாம்.

ஆனாலும்
நீ நினைத்தது நிகழ
நிகழ் காலமொன்று
வாராமல் போகலாம்.

கோயில்கள் திருடிய
பல்லவப் பாடல்கள் போன்றே
உந்தன்
நூற்றாண்டுத் தத்துவமும்
மேடைப்பேச்சுக்கே
உரிய தென்றாகலாம்.

உன்
கண்ணம்மாவும் செல்லம்மாவும்
எங்கள்
கவிதையில் மட்டுமே
அடிக்கடி
வந்து போகின்றார்கள்.

பார்வையில் எப்போதும்
பாஞ்சாலிகள்
துச்சாதனர்களை
கை கோர்த்தபடி.

பெண்ணியம் பேசுதற்கு
பெற்றோல் செலவு கேட்கிறர்கள்.

பார்த்தாயா?
உன் பேசு பொருளெல்லாம்
காசு பொருளாகி
கடைவீதி வருவதை?

என்னையும்
ஆதிக்கவாதி என்பதாய்
தீர்;மானம் போட்டிருப்பார்கள்.
ஆனால்
நீ மட்டுமாகிலும்
என்னை மன்னிப்பாய்.

ஏனெனில்ää
நான்
எண்ணுவதெல்லாம்ää
ஒன்றின் முதுகில்
இன்னொன்று சாவாரிப்பதையல்ல!
ஒன்றின் சுமையை
மற்றொன்று பகிரும் உலகத்தையே!!

-தயா ஜிப்ரான் -
.
.!!
Reply


Messages In This Thread
சரிநிகர்சமானம் செய்த பாரதீ -தயா ஜிப்ரான் - - by Thaya Jibbrahn - 02-22-2005, 01:00 AM
[No subject] - by kavithan - 02-22-2005, 01:08 AM
[No subject] - by Thaya Jibbrahn - 02-22-2005, 01:19 AM
[No subject] - by kavithan - 02-22-2005, 01:36 AM
[No subject] - by shiyam - 02-22-2005, 01:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)