08-24-2003, 12:32 PM
இங்கு இச்சடங்குகள் மிகக் குறைவு.. எனக்குத்தெரிய நடந்தது ஒன்றுதான். எட்டு அல்லது 9 வருடத்துக்கு முதல் அவர்களது வீட்டிலேயே நடந்தது. எனக்கும் அழைப்பு வந்தது. நான் போகவில்லை. பெற்ரோரை கண்டிப்போமா என்று தோன்றியது. இருந்தும் பேசாமல் இருந்துவிட்டேன்.. அது நல்லதாகவே படுகின்றது. அவர்களது சுதந்திரத்தைப் பறிக்க நான் யார்..? அவர்கள் கொடுத்தாலென்ன வாங்கினாலென்ன காஞ்சிபுரம் பட்டணிந்து நகையணிந்து எனது பெண் வயதுக்கு வந்துவிட்டாள் கருத்தரிக்கும் வயதுக்கு வந்துவிட்டாளென பறையடித்தாலென்ன அவர்கள் சந்தோஷத்தில் குறுக்கிட எனக்கு உரிமையில்லை. கூனினாள் குறுகினாள் என்ற பேச்சுக்கே இடம்வைக்காது.. பிள்ளை பாதிக்கப்பட்டது என்ற பேச்சுக்கே இடமில்லாது யுூனியில் கடைசியாண்டு படித்துக்கொண்டிருக்கிறாள்.
மேலும் சம்பந்தப்பட்ட தாய் தகப்பன் சகோதரங்கள் நெருங்கிய நண்பர்களை மட்டும் வரவழைத்து நடக்கும் கொண்டாட்டங்கள் பலவும் நடக்கின்றன. இதனால்கூட எந்தவித பாதிப்பும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.
கருத்தரிப்பது இயற்கையானது. அந்தந்த வயதில் அவையும் நடைபெறவேண்டும். ஐவிஎ.ப் ரெஸ்ரியுூப் கோவில்களென திரிவதை விட அது மிகவும் ஆரோக்கியமானதும்.. முக்கிமானதுமாகும். ஒவ்வொரு குடும்பத்திலும் 6-8 பிள்ளைகளென்பதால்தான் நமது சமூகம் சமூகமாயிருந்தது.
படங்களில் செய்யடும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள்போல தனிமைப்படுத்தி கிடுகுக்கொட்டிலமைத்து சிறைவைத்து கத்தி பொல்லு உரல் உலக்கையுடன் சடங்குகள் நடப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படி நடந்தாலும் அவர்களது நம்பிக்கையில் குறுக்கிட எனக்கு எந்தவித உரிமையுமில்லை.
சடங்கு நாடாத்தினாலென்ன.. காஞ்சிபுரம் உடுத்தாலென்ன.. பணம் பொருள் குடுத்தாலென்ன வாங்கினாலென்ன.. அவர்களது. சந்தோஷத்தில் குறுக்கிட எனக்கு உரிமையில்லை.
மேற்குலக நாடுகள் எதுவும் இதற்கெதிராக சட்டம் கொண்டுவரவுமில்லை.. இதனால் அடிமையாக்கப்படுகிறாள் என்று கூக்குரலிடவுமில்லை.
அன்பும் ஆதரவும் இருந்தமையால்தான் எமது பெற்றோர் தாங்கள் அங்கிருந்துகொண்டு எம்மை இங்கனுப்பி நம்மையும் பெற்ரோராக்கியுள்ளார்கள நாமும் எமது கணிப்பில் சுயசிந்தனையுடன் செயற்பட்டு ஒருபிள்ளையோ இரண்டு பிள்ளையோ.. பிள்ளைகள் எந்த மொழி போசுகின்றார்களோ பெற்ரோராகியிருக்கிறோம்.
மேலும் சடங்கு நடந்த பிள்ளைகள் எதுவும் சோடைபோனதாக இங்கு சரித்திரமில்லை. லண்டனில் கிறமர் ஸ்கூல்சரி யுூனிகள்சரி அத்தனையிலும் தமிழ்ப்பிள்ளைகள் நிரம்பி வழிகின்றனர். இத்தனைக்கும் பலருக்கும் குடும்பத்தினரை சகோதரங்களை மாத்திரம் வரவழைத்து சிறியமுறையில் சடங்குகள் நடைபெற்றுத்தானிருக்கிறது..
நன்றி வணக்கம்.

Truth 'll prevail