08-24-2003, 09:20 AM
Karavai Paranee Wrote:<b>இந்த நிகழ்வு எதற்காக ஆரம்பிக்கப்பட்டது யாருக்குமே தெரியாதா ?</b>
.
பரணி
எதைக் கேட்கிறீர்கள்? சாமத்தியச் சடங்கைத்தானே!
உண்மையில் சாமத்தியச்சடங்கை பெண்களைக் காட்சிப் பொருளாக்கும் கோலாகலமான விழாவாகக் கொண்டாடும் பெரும்பான்மையான பெற்றோர்களில் யாருக்குமே இதன் காரணம் தெரியாது.
நானும் பலருடன் இது பற்றிப் பேசிப் பார்த்து விட்டேன். திடமான சரியான பதில் என்பது இதுவரை கிடைக்கவில்லை.
சில தேடல்கள் செய்ததில் வேறுபட்ட பல கருத்துக்கள் அவ்வப்போது கிடைத்தன
அவைகளைச் சமயம் வரும் போது தர முயற்சிக்கிறேன்.
தற்போதைக்கு தமிழீழத்தில் இருந்து அர்த்தநாரி தந்த ஒரு கருத்தைத் தருகிறேன்.
[b]சாமத்தியச் சடங்கு
[b]வளரிளம் பருவத்தில் இருக்கும் ஒரு சிறுமியின் ஆளுமையை மிக மோசமாகச் சிதறடிக்கும் ஆற்றல் மிக்க சடங்கு இது. பருவமடைதல், வயதுக்கு வருதல், பெரிசாதல், பக்குவப்படுதல், சாமத்தியப்படுதல் எனப் பேச்சுவழக்கிலும் பூப்புனித நீராட்டு விழா என எழுத்து வடிவிலும் அழைக்கப்படும் இச்சடங்கு, குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு மாறும் ஒரு இடைக்கட்டத் தொழிற்பாடுகள் குழந்தையின் உடற் தொழிற்பாட்டில் ஏற்படும் இயல்பான ஒரு மாற்றத்தை ஊரறியச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு சடங்காகும். 'பெண் கரு உற்பத்திக்கு தயாராகிவிட்டாள்' என்பதை ஊரறிய தம்பட்டம் அடிப்பதே இச்சடங்கு கொண்டாடூடப்படுவதன் அடிப்படை நோக்கமாகும். குடும்பத்தின் பொருளாதார வசதிக்கேற்ப சடங்கின் பரிமாணமும் கூடிக்குறையும்.
- தமிழீழத்தில் இருந்து அர்த்தநாரி -
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

