Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆண்குழந்தைக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த பெண்கள்
#1
குஜராத் கோவிலில் சாமியார்கள் லீலை: ஆண்குழந்தைக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த பெண்கள்

தபோய், பிப். 20-

குஜராத் மாநிலம் தபோய் என்ற இடத்தில் வட்தால் சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சந்த், தேவ்வல்லப் ஆகிய 2 பேர் சாமியார்களாக இருந்த னர்.

இவர்கள் கோவிலுக்கு வரும் பெண்களை மயக்கி செக்ஸ் லீலைகளில் ஈடுபடுவ தாக புகார்கள் எழுந்தது. ஆனால் இந்த புகாரை கோவில் நிர்வாகம் மறுத்தது.

இதை ஆதாரத்துடன் நிரூபிக்க புகார் கூறியவர்கள் முடிவு செய்தனர். அதற்கான தருணம் பார்த்து காத்து இருந்தனர்.

இந்த நிலையில் ஒரு நாள் கோவிலை ஒட்டியுள்ள தனி அறையில் சாமியார்கள் சந்த், தேவ்வல்லப் ஆகிய 2 பேரும் ரூபல் என்ற பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துக் கொண்டு இருந்தனர். இதை மறைந்து இருந்து எதிர்தரப்பு வீடியோ எடுத்தது.

அந்த பெண்ணுடன் சாமியார்கள் உல்லாசம் அனுபவித்த காட்சிகள் உடனடியாக குஜராத்தில் உள்ள பத்திரிகையில் வெளியானது.

தங்களது லீலைகள் வெளியுலகுக்கு தெரிய வந்ததும் சாமியார்கள் சந்த், தேவ் வல்லப் ஆகிய 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அகமதாபாத் மாநகர குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷ னர் வன்ஜாரா தலைமையிலான தனிப்படை போலீ சார் சாமியார்களை தேடி வருகிறார்கள்.போலீசார் நடத்திய விசா ரணையில் தலைமறைவான 2 சாமியார்களுடன் பக்தி ஸ்வரூப் என்ற சாமியார் தொடர்பு கொண்டு இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெண் புரோக்கர்களான மன்சுக்பகத், தக்கர்ஷி படேல், கர்சன்படேல் ஆகி யோரும் கைது செய்யப்பட் டுள்ளனர்.

பிடிபட்ட சாமியார் பக்திஸ்வரூப்பின் அறையில் இருந்து ஆபாச புத்தகங்கள், ஊக்க மருந்துகள், காண்டம்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சாமியார் பக்தி ஸ்வரூப்பிடம் நடத்தப்படட விசா ரணையில் போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

எங்களிடம் உறவு கொண்டால் உங்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறக்கும் என்று கோவிலுக்கு வரும் பெண்களிடம் சாமியார்கள் ஆசை வார்த்தை கூறுவார்கள்.

சாமியார்களின் பேச்சை நம்பும் பெண்கள் அவர்களின் வலையில் வீழ்ந்துள்ளனர். அந்த பெண்களை சாமியார்கள் கற்பழித்து சின்னா பின்னப்படுத்தி உள்ளனர்.

பின்னர் தாங்கள் சாமியார்களால் கற்பழிக்கப்பட்ட விவரம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி இந்த உண்மைகளை பெண்கள் தங்களுக்குள்ளேயே பூட்டி வைத்துள்ளனர். ஒரு சாமியார் கைதாகி இருக்கும் போதே இவ்வளவு உண்மைகள் வெளியாகி இருக்கிறது. இன்னும் தலைமறைவாகி இருக்கும் சாமியார்கள் பிடிபட்டால் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வரும் என அகமதாபாத் போலீசார் கூறு கிறார்கள்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஆண்குழந்தைக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த பெண்கள் - by Vaanampaadi - 02-21-2005, 12:38 AM
[No subject] - by kavithan - 02-21-2005, 12:44 AM
[No subject] - by sinnappu - 02-21-2005, 01:22 AM
[No subject] - by வியாசன் - 02-21-2005, 11:30 AM
[No subject] - by tamilini - 02-21-2005, 12:43 PM
[No subject] - by seelan - 02-21-2005, 01:48 PM
[No subject] - by tamilini - 02-21-2005, 02:15 PM
[No subject] - by nallavan - 02-21-2005, 04:28 PM
[No subject] - by வியாசன் - 02-22-2005, 02:52 PM
[No subject] - by shiyam - 02-22-2005, 03:28 PM
[No subject] - by Malalai - 02-22-2005, 05:24 PM
[No subject] - by Jude - 02-22-2005, 06:46 PM
[No subject] - by வியாசன் - 02-22-2005, 07:11 PM
[No subject] - by Jude - 02-22-2005, 11:13 PM
[No subject] - by shiyam - 02-23-2005, 03:04 AM
[No subject] - by tamilini - 02-23-2005, 01:46 PM
[No subject] - by shiyam - 02-23-2005, 02:27 PM
[No subject] - by tamilini - 02-23-2005, 03:18 PM
[No subject] - by shiyam - 02-23-2005, 03:40 PM
[No subject] - by tamilini - 02-23-2005, 03:49 PM
[No subject] - by Malalai - 02-23-2005, 04:43 PM
[No subject] - by வியாசன் - 02-23-2005, 06:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)