02-20-2005, 04:28 PM
Quote:என்ன நக்கல் வேண்டிக்கிடக்கு ஆ... அம்மா அப்பவையும் தூக்கி எறியவேண்டாம்.. உங்கள் காதலைனையும் தூக்கி எறியவேண்டாம் என்று தானே சொல்லுறம்.. தூங்கிறவங்களை எழுப்பலாம்... தூங்கிறது போல நடிக்கிறவங்களை எழுப்பேலாது என்பாங்கள். அண்டு ஏதோ வெட்டுறன் வீழ்த்துறன் என்று கதை பேந்து பாத்தா அதுக்கு மற்றபக்கத்தாலை கதைவிடுறியள்.. யாரை ஏமாத்த திரியிறியள்...ஆ.. ஏதோ நல்லா இருந்தால் சரி.
என்ன தம்பி நாங்க நம்ம நிலைப்பாட்டைச்சொன்னம். நீங்க கோவிக்கிறீங்களோ..?? உங்கள மாதிரி சின்னப்பிள்ளையள்.. இளமையின் வேகம் காதல் மயக்கத்தில பெற்றோரைப்பிரியவும் றெடியா இருப்பீங்க.. பிறகு.. பிரிஞ்சாப்பிறகு தான் உறவுகளின் அருமை உங்களுக்கு புரியும். இருவரையும் கூடிய பாகம் பிரியாமல் இருக்கிறதுக்கு றை பண்ணுங்க என்று தான் சொல்லுறம். நான் தெரியாமல் தான் கேக்கிறன். பெற்றோரை பிரிஞ்சு ஓடிப்போறது தான் (அவர்கள் எதிர்த்தால்) உண்மைக்காதல் என்றால். அப்ப அம்மா அப்பா மேல வைத்த அன்பு போலியா.. உதறித்தள்ளிவிட்டு போறதுக்கு. நீங்கள் ஓடிப்போன பிறகு உங்க குடும்பம் உங்களின் பிரிவால துன்பப்படுறதை விட பிள்ளை ஓடிப்போய்விட்டாள் விட்டான் என்ற அவமானத்தால பாதி செத்திடுங்கள். ஏன்க இந்த நிலைமை நாங்கள் சொல்ல வாறது என்னவென்றா காதலியுங்க வேண்டாம் என்றல. நம்ம காதலுக்கு பெற்றோர் என்த விதத்தில எதிர்ப்பு தெரிவிப்பாங்க என்று தெரிந்து கொள்ளுங்க அதை நிவர்த்தி செய்ய இரண்டு பேரும் சேர்ந்து முயற்சி செய்யுங்கள். இல்லை அதித புரிந்துணர்வு உள்ள நீங்கள் என்றால் பெற்றோரை அவங்க ஆசைகளை பூர்த்தி செய்ய முயுலுங்கள். அதை விட்டுவிட்டு ஓடிப்போனால் தான் காதல் என்றால். என்ன என்கிறது இதை ஆ ஆ ஆஅ......
நாங்க பாத்திருக்கம். நாங்க கடந்து வந்த பாதையில காதலிச்சு கலியாணம் பண்ணீட்டு. பெற்றோர் போற வாற இடம் எல்லாம் காறித்துப்புறதும் திட்டிறதும். இதைக்கண்டிட்டு வந்து கண்ணீர் தான். இளமையின் துடிப்பு பெற்றோர் தேவையிரது. பிறகு ஒரு காச்சல் வந்தால் கூட பச்சத்தண்ணி எடுத்து தர ஆள் இல்லாமல் இருந்து அருந்தும் போது. கேக்க நாதியில்லாமல் அயலவர்களிடம் உதவி கேக்கும் போது தான் உறவுகள் என்றதன் அர்த்தம் புரியும் உங்களுக்கு எல்லாம். வார்த்தையால வாழ்ந்திடலாம் உறவுகளைபபிரிஞ்சு. செய்கிறது கஸ்டம் தற்காலிகமாய் அம்மா அப்பாவை பிரிஞ்சிருக்கிறவங்களுக்கு தான் தெரியும் பிரிவு என்றால் எத்தனை கொடுமையானது என்று. உறவுகளை வருத்தி அவங்களின் உணர்வுகளுடன் விளையாடி ஒரு புது உறவு தேவையா..??
காதல் என்பது ஒரு உணர்வு ஆரம்பிக்கும் போது அதன் சாத்தியங்களை ஆராய்ந்து நீங்களாக அதை விளக்கி கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு காதலிக்கும் போது யோசிக்க மாட்டினம் பிறகு சொல்லுவியள் ஓடினாள் தான் காதல் என்று. இது நம்ம நிலை நாங்க நினைக்கிறதை சொல்லுறம். :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

