Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் பெண்ணுடன் திருமணம்: அம்மி மிதித்த ஆங்கில வாலிபர்
#1
பிப்ரவரி 20, 2005

ஆஸ்திரேலியா தமிழ் பெண்ணுடன் திருமணம்: 'அம்மி மிதித்த' ஆங்கில வாலிபர்
<img src='http://thatstamil.indiainfo.com/images26/marriage350.jpg' border='0' alt='user posted image'>

தஞ்சாவூர்:


ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ்ப் பெண், இங்கிலாந்து வாலிபரை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மணமகள் கழுத்தில் தாலி கட்டிய மாப்பிள்ளை அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அசத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்குடியைச் சேர்ந்த ஜானகிராமன்சாந்தா தம்பதி ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் சுசீலா. ஆஸ்திரேலியப் பிரஜையான இவர் கர்நாடக இசையில் தீராத ஆர்வம் கொண்டவர்.

வெஸ்டர்ன்கர்நாடக இசை கலப்பு கொண்ட ஒரு ஆல்பம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். இந்த ஆல்பம் தயாரிப்புக்காக லண்டன் சென்றபோது கிடார் இசைக் கலைஞரான சாம் மில்ஸ், சுசீலாவுக்கு அறிமுகமானார்.

இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால், இந்திய கலாச்சாரப்படியே திருமணம் செய்து கொள்ள சுசீலா விரும்பினார். அதை சாம் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து லண்டனில் இருந்து சாமின் குடும்பமும், ஆஸ்திரேலியாவில் இருந்து சுசீலாவின் குடும்பத்தினரும் தஞ்சாவூர் வந்தனர். தஞ்சை வெண்ணாற்றங்கரையில் ஒரு ஹோட்டலில் இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

மாப்பிள்ளையும் அவரது தந்தை, சகோதரர் உள்ளிட்டோரும் பட்டு வேட்டி சட்டையில் தகதகக்க, மணப்பெண் மற்றும் மாப்பிள்ளையின் சகோதரிகள், தாயார் ஆகியோர் பட்டுச் சேலைகளை அணிந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
<img src='http://thatstamil.indiainfo.com/images26/marriage500.jpg' border='0' alt='user posted image'>
முழுக்க முழுக்க இந்து முறைப்படி நடந்த இத் திருமணத்தில் புரோகிதர் மந்திரங்கள் ஓத, மணப்பெண் கழுத்தில் தாலி கட்டினார் சாம். பிறகு மணமகளுக்கு மெட்டி அணிவித்தார், இதைத் தொடர்ந்து மணமக்கள் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்தனர்.

சாமின் பெற்றோர் அட்சதையை கொஞ்சம் டேஸ்ட் செய்து பார்த்தவாரே மணமக்கள் மீது தூவினர்.

இதையடுத்து தமிழ் சைவப் சாப்பாடும் பரிமாறப்பட்டது. வித்தியாசமான மாப்பிள்ளையைப் பார்க்க ஹோட்டலுக்குள் ஏராளமான பொது மக்கள் கூடினர்.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
தமிழ் பெண்ணுடன் திருமணம்: அம்மி மிதித்த ஆங்கில வாலிபர் - by Vaanampaadi - 02-20-2005, 12:45 PM
[No subject] - by sinnappu - 02-20-2005, 02:48 PM
[No subject] - by vasanthan - 02-20-2005, 05:44 PM
[No subject] - by tamilini - 02-20-2005, 07:22 PM
[No subject] - by shanmuhi - 02-20-2005, 09:23 PM
[No subject] - by shiyam - 02-21-2005, 03:41 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)