Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேண்டுகோள்
#7
<span style='font-size:25pt;line-height:100%'>கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் குழுக்களுக்கு வரதர் அணியினர் ஆயுதங்கள் விற்பனை. </span>

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் பின்னணியில் உள்ள சில குழுக்கள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கெனப் பெருந் தொகையான ஆயுதங்களையும் கொள்வனவு செய்து வருகின்றனர்.

தமிழ்க் குழுவான ஈ.பி.ஆர்.எல்.எவ். வரதர் அணி இவர்களுக்குக் குறைந்த விலையில் ஆயுதங்களை விற்பனை செய்து வருவதுடன் இந்த ஆயுதக் கொள்வனவு பற்றிப் பேசுவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணி உறுப்பினர் ஒருவரிடம் சென்ற வேளையிலேயே திருகோணமலை உப்புவெளியில் இரு முஸ்லீம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் மூது}ர் பகுதியில் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தும் குழுக்களின் தலைவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த இரு இளைஞர்களும், முன்னிரவு நேரத்தில் தங்களோடு 80 ஆயிரம் ரூபாவையும் பணமாக எடுத்துக் கொண்டு, உப்புவெளி கடற்தளத்திற்குப் போனதற்கான காரணம் என்ன என்று விசாரித்து வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களோடு வேறு யார் யாரெல்லாம் சென்றார்கள், இவர்களை அனுப்பியவர்கள் யார், இவ்வளவு பெரிய தொகைப் பணம் இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது, இப்பணத்தை இவர்கள் எடுத்துச் சென்றதற்கான காரணம் என்ன, இவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இப்பணம் எப்படிக் காணாமற் போனது போன்ற விபரங்களைக் கண்டறிய ஒரு விசேட சி.ஐ.டி. குழு கிழக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ்மா அதிபர் ரி.ஈ. ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலைகளுக்கும், பின்னர் இடம்பெற்ற இரு முஸ்லிம்களின் கொலைகளுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா என்பதை விசேட சி.ஐ.டி. பிரிவினர் ஆராய்ந்து வருவதாகவும் தெரியவருகிறது. கொலை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள், முஸ்லிம் காங்கிரசுடனும், ரவுூப் ஹக்கீமுடனும் நெருங்கிய தொடர்புடையவர்களின் செயற்பாட்டாளர்கள் என்று கொழும்புப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் பெருந்தொகையான ஆயுதங்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திற்கு வழங்கப்பட்டது. இவை வடகிழக்கின் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. சிறிலங்கா அரசாங்கமும் இவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியிருந்தது. கிழக்கு மாகாணத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ஆயுதங்களை வரதர் அணியினர் இப்போது முஸ்லீம் குழுக்களுக்குக் குறைந்த விலையில் விற்று வருகின்றனர்.

தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே இந்த ஆயுதங்களை முஸ்லீம் குழுக்கள் கொள்வனவு செய்து வருகின்றன. இதற்கெனப் பெருந்தொகையான பணம் முஸ்லீம் குழுக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தை நடத்தப்போவதாக அம்பாறை மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் இஸ்மையில் அண்மையில் தெரிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் பேரியல் அஷ்ரப்பும் முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தித் தமிழர்களுக்கு எதிராக போராடப் போவதாகத் தெரிவித்திருந்தார்.
Reply


Messages In This Thread
வேண்டுகோள் - by sethu - 08-21-2003, 04:19 PM
[No subject] - by sethu - 08-21-2003, 04:30 PM
[No subject] - by sethu - 08-21-2003, 04:32 PM
[No subject] - by sethu - 08-21-2003, 06:49 PM
[No subject] - by sethu - 08-22-2003, 04:46 PM
[No subject] - by sOliyAn - 08-23-2003, 12:50 AM
[No subject] - by sethu - 08-23-2003, 08:33 AM
[No subject] - by sethu - 08-26-2003, 07:48 PM
[No subject] - by sethu - 09-03-2003, 09:03 AM
[No subject] - by Mathivathanan - 09-03-2003, 10:54 PM
[No subject] - by sethu - 09-09-2003, 06:57 PM
[No subject] - by sethu - 09-09-2003, 06:57 PM
[No subject] - by yarlmohan - 09-09-2003, 07:10 PM
[No subject] - by sethu - 09-09-2003, 07:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)