Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேண்டுகோள்
#5
தங்களுக்கு முஸ்லிம் மக்கள் எதிரிகள் அல்ல. மட்டு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர்.

முஸ்லிம் மக்களை எதிரிகளாகவோ, விரோதிகளாகவோ நாம் ஒருபோதும் கருதவில்லை. நண்பர்களாகவும், உறவினர்களாகவுமே நாம் பார்க்கின்றோம். சில தீயசக்திகள் தமிழ் முஸ்லிம் மக்களைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கின்றனர். இவற்றிக்குத் தமிழ் மக்கள் ஒருபோதும் துணையாகக் கூடாது என மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் இ.கௌசல்யன் குறிப்பிட்டார்.

கடந்த 20ம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் உள்ள திகிலிவட்டைக் கிராம மீனவர்கள் பத்துப் பேருக்கு மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் தோணி, வலைகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே இவ்வாறு கூறினார்.

அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன் தொடர்ந்து கூறுகையில்:- எமது உரிமைப்போர் இன்று சர்வதேச அரங்கில் அரசியல் வெற்றிக்கான இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. சிங்களதேசம் இதனை உணர்ந்து எமது சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வைத் தர வேண்டும். தொடர்ந்தும் எமது உரிமை மறுக்கப்படுமானால் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து எமது உரிமையை வென்றெடுக்கும் தருமப் போரில் இணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Reply


Messages In This Thread
வேண்டுகோள் - by sethu - 08-21-2003, 04:19 PM
[No subject] - by sethu - 08-21-2003, 04:30 PM
[No subject] - by sethu - 08-21-2003, 04:32 PM
[No subject] - by sethu - 08-21-2003, 06:49 PM
[No subject] - by sethu - 08-22-2003, 04:46 PM
[No subject] - by sOliyAn - 08-23-2003, 12:50 AM
[No subject] - by sethu - 08-23-2003, 08:33 AM
[No subject] - by sethu - 08-26-2003, 07:48 PM
[No subject] - by sethu - 09-03-2003, 09:03 AM
[No subject] - by Mathivathanan - 09-03-2003, 10:54 PM
[No subject] - by sethu - 09-09-2003, 06:57 PM
[No subject] - by sethu - 09-09-2003, 06:57 PM
[No subject] - by yarlmohan - 09-09-2003, 07:10 PM
[No subject] - by sethu - 09-09-2003, 07:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)