08-22-2003, 11:21 AM
கருத்துக்கு நன்றி மணிதாசன்.. உங்களுக்கு உண்மையென்று படுபவை எனக்கு பொய்யாகத் தெரியலாம்.. அதற்கு என்னிடம் சில அடிப்படைக் காரணங்களும் இருக்கலாம்.. அதனால் காரசாரவிவாதம்கூடப் பிறக்கலாம்.. அதை விடுவோம்.. விடயத்துக்கு வருவோம்.. ஒரு உண்மையான கருத்து வைக்கப்படும்போது ஏதொ ஒரு காரணத்துக்காக அது தணிக்கை செய்யப்படுகின்றதென்று வைத்துக்கொள்வோம்.. அதேநேரம் அதற்கு எதிராக எழுதப்பட்ட பொய்யான கருத்து அதைச்சுற்றிய பரப்புரைகள் அத்தனையும் விட்டுவைக்கப்படுகின்றதென்றும் வைத்துக்கொள்வோம்.. உண்மைக்கருத்து எழுதிய உங்கள் நிலை எப்படியிருக்கும்.. எனக்குப் பலமுறை இக்களத்தில் நடந்திருக்கின்றது.. மேலும் போராட்டம் கொச்சை என்ற பதத்தினுள் எத்தனை முறை உண்மைக்குப்புறம்பான செய்திகள் பரப்பப்பட்டன.. சிலருக்கு காரணத்துடன் பொய் சொல்லுவதும் அதற்கு அரசியல் காய் நகர்த்தல் பழம் நகர்த்தல் பெயர் கொடுத்தலும் நியாயப்படலாம்.. ஆனால் அதே பொய் திரும்ப வந்து அவரை கேள்வி கேட்கும்போது தணிக்கை ஒடுக்கல் மிரட்டல் வரலாமோ..?
முன்னம் நான் காரசாரமாக வாதாடிய சில விடயங்கள்.. சமீபகாலங்களில் எனக்குச் சார்பாக செய்திகளாக வெளிவந்தன.. வொளிவந்துகொண்டிருக்கின்றன.. வெளிவரும்.. எந்த அடக்குமுறையாலும் பரப்புரையாலும் தடுக்கமுடியாது. நன்றி வணக்கம்.

Truth 'll prevail