02-16-2005, 11:53 PM
Kurumpan Wrote:கவிதன்!
வாழ்வில் பல சம்பவங்கள் நடப்பதுண்டு. ஒருவருடைய நடப்பினை வைத்து அந்த வம்சத்தினை வஞ்சிப்பது முறையன்று. ஒரு பெண் குற்றமிளைத்தால் பெண்களே குற்றமிளைத்ததாக பொருள் படாது.
கொலைகாரனின் மகன்/மகள் அண்ணல் காந்தி போன்றொ, அன்னை தெரேசா போன்று கூட இருக்கலாம். அதற்காக கொலைகார/ரி யாக இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. அதுபோல காதலை ஒருத்தி அவமதித்தற்காக பெண்களே அப்படித்தான் என கூறமுடியாது.
தண்டிக்கத் தெரிந்தவன் இறைவன் மன்னிக்கத்தெரிந்தவன் மனிதன்.
இறைவனாக இல்லா விடினும் மனிதனாக இருக்க முயற்சிப்போம்.
நீங்கள் சொல்வது போல் எல்லோரையும் குற்றம் சொல்ல முடியாது கூடாது தான்... ஆனால் அதனை அனுபவித்த ஒருவர் சொல்லும் போது அவராக நீங்கள் இருந்தால் எப்படி சொல்வீர்கள்.... ? அந்த நபரின் கருத்தை அப்படியே சொல்ல வேண்டுமாயின் எப்படி சொல்வீர்கள். ..? தற்போது சில வம்சங்களுக்கு எதிராகவே நாங்கள் என்ன பலர் கவிதை எழுதுகிறார்கள்... அப்போது நாம் தமிழர்களாக இருந்து எழுதுகிறோம்.. ஆனால் நாங்கள் சிங்களவா என்று விழிக்கும் போது அங்கேயும் சில நல்லவர்களோ பல நல்லவர்களோ இருப்பார்கள்... அதற்காக நாங்கள் அவர்கள் எல்லோரையும் சாடவில்லையே... எமக்கு எதிரியான அரசையும், கட்சிகளையும் , எதிரானவர்களையும் தானே அப்படி சாடுகிறோம்... இங்கேயும் அப்படி தான் பெண்களின் மனது என்று நான் சொல்லும் போது அப்படி இருக்கிறவர்களை தான் மையமாக வைத்து பெண்கள் என்று விழிக்க படுகிறதே ஒழிய அனைத்து பெண்களையும் அல்ல... ஏன் எனக்கும் அக்கா, தங்கை, நண்பிகள் என இருக்கிறார்கள் அவர்களையும் எதிராய் நினைத்தா எழுதினேன்..? இல்லையே... இப்படி சிலர் என்ன பலர் இருக்கிறார்கள்.... நீங்களும் யாருடைய அனுபவத்தில் ஆவது கண்டிருப்பீர்கள்...
நேற்று ஒரு தலைப்பு இருந்தது இலங்கையில் ஒரு பாடசாலையில் ஆசிரியர்கள் கைத்தொலைபேசியுடன் பாடசாலை நேரத்தில் அரட்டையில்ல் இருப்பதாக... அந்த பாடசாலையையும் குறிப்பிடவில்லை எந்த ஆசிரியர் என்றும் குறிப்பிடவில்லை.... அந்தகருத்தை பார்த்தால் பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் கைத்தொலைபேசி அரட்டையில் ஈடுபடுவது போல் இருந்தது... ஆனால் அதன் உண்மைக்கரு என்ன சொல்லுங்கள் பார்ப்போம்... சில ஆசிரியர்கள் பாடசாலை நேரத்தில் மாணவர்களையோ கற்பித்தலையோ கவனிக்காமல் தம் பொழுதை கைத்தொலைபேசி அரட்டையில் கழித்து மாணவர்களின் கல்வியை சீரழிக்கிறார்கள் என்பதாகும். இங்கே நாங்கள் பார்த்தால் மக்களிடம் ஒன்றை சொல்லும் போது ஒரு ஆசிரியர் அவ்வாறு நடக்கிறார் என்று கூறும் போது அவரையோ அதனை பற்றியோ யாரும் அலட்டி கொள்ள மாட்டார்கள். ஆனால் பொதுவா நீங்கள் சொல்லும் போது எல்லோரும் அதன் தன்மைகளையும் விளைவுகளையும் பிரித்து பார்ப்பார்கள். இன்று ஒருவர் செய்வார் நாளை பலர் அவரை பார்த்து தொடர்வார்கள்.
இன்று நான் ஒரு சிலரை மையமா வைத்து பொதுவ கவிதை எழுதும் போது அதனை செய்தவர்களுக்கும் அனுபவித்தவர்களுக்கும் சரியாகவும்... அது பற்றி அறியாதவர்களுக்கு பிழையாகவும் தெரியும். இதையே வாசிக்கும் சாதரண ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இது எவ்வளவு பாரதூரமான விளைவை சமூகத்தில் ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள உதவும்.
[b][size=18]

