02-16-2005, 02:15 AM
அக்காவா அண்ணாவா நீங்கள் என்று எனக்கு தெரியாது.. பெண்களுக்கு எதிராக நான் எழுதி இருக்கிறேன் இந்த கவிதையை என்று சொல்கிறீர்கள்.. ஆனால் இது கற்பனை அல்ல கற்பனை கலந்த உண்மை... இது நியத்தில் நடக்கும் ஒரு பக்கம் இன்னும் பல பக்கங்கள் உண்டு அந்த பக்கங்களில் நான் என் கவிதையை திருப்பவில்லை அந்த பக்கங்களையும் இனி வரும் காலங்களில் சொல்வேன். ஆணாதிக்கம் என்று சொல்கிறீர்களே .. நான் எத்தனையோ கவிதை பெண்களை பற்றி தான் சொல்லி இருகிக்றேன் அவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் தான் எழுதி இருக்கிறேன்... ஆனால் அங்கும் தவறோ பிழையோ நடக்கிறது அதையும் சொல்ல வேண்டும் அதற்காக தான் இக் கவிதை.... இந்த கவிதை எழுதிய சந்தர்ப்பம் கேட்டால் அது எப்படி என்று உங்களுக்கே புரியும் ஆனால், அதை சொல்ல விரும்பவில்லை. கொஞ்சம் கற்பனை மிகுதி நியம்.... ஒரு பெண்ணின் நிலையை சித்தரிக்கும் போது தான் மேலும் பல நல்ல பெண்களின் கருத்தை நாங்கள் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது. ஏன் தமிழினி அக்கா.. நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம் ... நான் எப்போதாவது பெண்களுக்கு எதிராய் கருத்து சொன்னேனா... கவிதை எழுதினேனா.... இதுவும் அவர்களுக்கு எதிராய் இல்லையே... இப்படி இருப்பவர்களீடம் ஆண்களே விழிப்பாய் இருங்கள் என்ற எச்சரிக்கை... ஏன் பெண்கள் கூட அவர்களிடம் விழிப்பாய் இருக்க வேண்டும். இப்படி பெண்களை விழிப்பாய் இருங்கள் என்றும் கவிதை தோட்டத்தில் எழுதிய கவிதைகள் இருக்க வேண்டும் தற்போது நேரம் இன்மையால் அதனை இங்கே தேடி கொண்டு வந்து இட முடியவில்லை. நான் பெண்களுக்கு எதிரானவனா இருந்தால் அப்படி கவிதையை எழுத வேண்டிய அவசியமோ பிரசுரிக்க வேண்டிய அவசியமோ தேவை இல்லை. கவிதை எழுதுபவர்கள் எப்போதும் ஒரே கருத்தை சொல்வதை விட பல சம்பவங்களை வைத்தும் சொல்ல வேண்டும் அப்போது தான் அவர்கள் உங்களை போன்றோரிடம் இருந்து நல்ல கருத்துக்களை பெற்று கொள்ளமுடியும்.
எல்லோரும் என்னையே குறை சொல்கிறீர்களே...... இப்படி நியத்தில் எதுவும் நடக்கவே இல்லையா? உண்மையைக் கூறுங்கள்.
பெண்களாகவோ ஆண்களாகவோ பார்க்காமல் நீங்கள் அறிந்தவற்றில் அனுபவித்தவற்றில் இருந்து கூறுங்கள்
எல்லோரும் என்னையே குறை சொல்கிறீர்களே...... இப்படி நியத்தில் எதுவும் நடக்கவே இல்லையா? உண்மையைக் கூறுங்கள்.
பெண்களாகவோ ஆண்களாகவோ பார்க்காமல் நீங்கள் அறிந்தவற்றில் அனுபவித்தவற்றில் இருந்து கூறுங்கள்
[b][size=18]

