Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மௌனங்கள்...
#1
[b]<span style='font-size:25pt;line-height:100%'>மௌனங்கள்... </span>

விலகிப்போக நினைக்கின்ற போதும்
விலகிப்போக முடியாமல் ஒன்றிப் போன
நினைவுகளை நெஞ்சினில் சுமந்து சுமந்து
நினைவுகளோடு வாழ்வதும் ஒரு காதல்தான்

நெருஞ்சி முள் படுக்கையின் மீதே
நினைவுகள் வருட நினைத்திடும் வேளையிலும்
நெஞ்சின் நிஜத்தினை நிழலாய் சுமக்கையில்
நிறைந்திடும் வெப்பமான பெருமூச்சுக்கள்

வீண்மீன்கள் இல்லாத வானம் போல
மணக்கும் ரோஜாக்கள் இல்லாத செடிகளுக்குள்
இணைந்திருக்கும் மௌனமான சோகத்துக்குள்ளும்
கண்ணீராய் துளிர்த்திடும் கோலங்கள்

ரோஜாக்கள் காதலை வாழ்த்திக் கொண்டிருக்க
ரோஜா மொட்டுக்களோ அடுத்த மலர்விற்கான காத்திருப்பில்
ரோஜாச்செடிகளோ சோபையிழந்த சோகத்தின் பிடியில்
முகாரி ராகமாய் இசைத்திடும் மௌனங்கள்
Reply


Messages In This Thread
மௌனங்கள்... - by shanmuhi - 02-15-2005, 11:39 PM
[No subject] - by tamilini - 02-15-2005, 11:41 PM
[No subject] - by kavithan - 02-15-2005, 11:43 PM
[No subject] - by kavithan - 02-15-2005, 11:44 PM
[No subject] - by tamilini - 02-15-2005, 11:45 PM
[No subject] - by kavithan - 02-15-2005, 11:46 PM
[No subject] - by KULAKADDAN - 02-15-2005, 11:49 PM
[No subject] - by Kurumpan - 02-15-2005, 11:55 PM
[No subject] - by வியாசன் - 02-16-2005, 12:10 AM
[No subject] - by shanmuhi - 02-16-2005, 12:21 AM
[No subject] - by Malalai - 02-16-2005, 07:28 AM
[No subject] - by sinnappu - 02-16-2005, 08:24 AM
[No subject] - by shanmuhi - 02-16-2005, 09:49 AM
[No subject] - by shanmuhi - 02-16-2005, 09:51 AM
[No subject] - by kavithan - 02-17-2005, 12:34 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)