08-20-2003, 07:42 PM
எச்சரிக்கை 7 வந்துள்ள நிலையில் என்நேரமும் வெளியேற்றப்படலாம்.. என்ற நிலையில் முன்கூட்டியே என்னுடன் கருத்தாடிய அத்தனைபேருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.. தரப்படுத்தல் என்பதன் பதம் விளங்காமல் அவத்திப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு திரு மோகன் அவர்கள் இதுதான் தரப்படுத்தல் என சுட்டிக்காட்டியமைக்கு அவருக்கும் நன்னியுடையவனாகிறேன். மேலும் எனது கருத்தை எனது கருத்தாக எடுத்து நேர்மையுடன் ஒருபெயரில் கருத்தாடிய அனைவருக்கும் நன்றி. "என்ன தலையைச் சொறியுறியள்" எனது கருத்துக்கள் அனைத்தும் அடி மனதிலிருந்து வந்தவையேயன்றி நுணிநாக்கிலிருந்து வரவில்லையென்பதையும் வலியுறுத்திக்கூறுகிறேன்.. போராட்ட மோகன் இன்னும் 10 வருடங்களில் நான் இக்களத்தில் எழுதியவற்றை இரைமீட்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.. செய்த தணிக்கைகளுக்கும் மனம்வருந்துவார்.. சிந்திப்பார் என இப்போது கூறி தொடர்ந்து வெளியேற்றப்படும்வரை எனது சொந்தக் கருத்துக்களை பயப்படாமல் எழுதுவேன் என்று கூறி விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்.
நன்றி வணக்கம்.
Truth 'll prevail

