Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுனாமி குழந்தை பேபி 81
#3
டி.என்.ஏ சோதனை முடிவு கிடைத்தது
சர்ச்சைக்குரிய குழந்தை விவகாரம் தீர்ந்தது
கொழும்பு நிருபர் திங்கட்கிழமை 14 பெப்ரவரி 2005 15:52 ஈழம்
இரண்டு பெற்றோர்கள்; உரிமை கோரிவந்த சர்ச்சைக்குரிய குழந்தை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ. சோதனை மூலம் பிரஸ்தாப குழந்தை உரிமை கோரிய பெற்றோர்களில் ஜெயராஜா தம்பதிகளுடையது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலையை அடுத்த கடற்கரையிலிருந்து மீட்கப்பட்ட நான்கு மாதக்குழந்தை தம்முடையதே என்று இரண்டு பெற்றோர்கள் உரிமை கோரியதை அடுத்து விடயம் நீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்றிலும் இவ்விவகாரம் சிக்கலானதை அடுத்து உரிமை கோரும் பெற்றோரையும் பிரஸ்தாப குழந்தையையும் டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார். கொழும்பில் கடந்த வாரம் டி.என்.ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனை முடிவு இன்று கல்முனை நீதிமன்றுக்கு அனுப்பப்பட்டது. முடிவு பற்றி கல்முனை நீதிமன்றப் பதிவாளர் எம்.எஸ்நஸீர் தெரிவிக்கையில்ää

குழந்தையின் பெற்றோருக்கு முடிவு குறித்து விரைவில் தெரியப்படுத்தப்படும் என்றும் எதிர்வரும் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நீதிமன்றால் உத்தியோபூர்வமாக குழந்தை பெற்றோரிடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முடிவு பற்றி அறிந்த கல்முனை ஆதார வைத்தியசாலை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் கோபால் முகுந்தன் கூறுகையில் - டி.என்.ஏ சோதனை முடிவை தாம் நீதிமன்றப் பதிவாளரூடாக அறிந்து கொண்டதாகவும் முடிவு குறித்து மகிழ்ச்சி என்றும் கூறினார்.

குழந்தையின் பெயர் குறித்து இதுவரை சரியான தகவல் கிடைக்காதபோதும் அபிலாஷ் என்பதே தமது குழந்தையின் பெயர் என்றும் 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி குழந்தை பிறந்தது என்றும் பெற்றோர் கூறியிருந்தனர்.

Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 01-15-2005, 12:48 PM
சர்ச்சைக்குரிய குழந்தை விவகாரம் தீர்ந்தது - by Vaanampaadi - 02-14-2005, 01:27 PM
[No subject] - by KULAKADDAN - 02-14-2005, 06:42 PM
[No subject] - by vasisutha - 02-14-2005, 07:50 PM
[No subject] - by tamilini - 02-14-2005, 09:17 PM
[No subject] - by Malalai - 02-24-2005, 05:57 AM
[No subject] - by Mathan - 03-04-2005, 03:41 AM
[No subject] - by vasisutha - 10-23-2005, 05:55 PM
[No subject] - by Mathan - 10-23-2005, 07:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)