08-19-2003, 08:58 AM
உதயனில் ஒரு வாசகர் கடிதம்..சீரியல் தொல்லைகள் அங்கும்..
21.07.2003 திங்கட்கிழமை உதயனில் வெளியான ஷஅருகிவரும் வாசிப்புப் பழக்கம் யாழ். கல்வி வளர்ச்சிக்கு சவால்| என்ற கட்டுரை வாசித் தேன். திரு.சு.சிவநேசராசன் என்பவரால் எழுதப்பட்ட அக்கட்டுரை தொடர்பாக பின்வரும் விடயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி வளர்ச்சிக்கு சவாலாக உள்ள விடயங்கள் களையப்பட வேண்டியதென்பது உண்மையே. மாணவர்கள்இ ஆசிரியர்கள் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் ஈடுபட ஆர்வம் காட்டாததும் யாழ்ப்பாணத்தின் கல்வி வீழ்ச்சிக்கு காரணமெனலாம். ஏனெனில்இ இணைப்பாட விதானச் செயற்பாடுகளின் ஊடாக மாண வர் பலதரப்பட்ட அனுபவங்களை பெறவாய்ப்புக்கள் உள்ளன. இவை அவர்களின் கற்றலில் பெருந்துணை புரியக்கூடியன. மேலும் கட்டுரை ஆசிரியர் அன்றைய பகிடிவதைகள் எவ்வாறு நகைச் சுவை உணர்வுடன் செய்யப்பட்டன என செங்கை ஆழியானின் ~கங்கைக் கரையோரம்| உணர்த்துகின்றது என புளகாங்கிதம் அடைகின்றார். ஆனால்இ அன்று 1960களில் நகைச்சுவை உணர்வுடன் காணப்பட்ட பகிடிவதைகளே இன்று 2000இல் படுகொடுமைகளாக மாறியுள்ளன. அதன் பரிணாம வளர்ச்சியே இன்றையநிலை. பகிடியில் எப்படி வதை இருக்கமுடியும்? பகிடிவதை என்பதே சட்டவிரோதம்.மற்றும் கட்டுரை ஆசிரியர்இ ~~செங்கை ஆழியானின் ஷகிடுகுவேலி| நாவல் ஈழத்தமிழரின் பண்பாடு கிடுகுவேலிக் கலாசாரத்தில் எவ்வாறு பேணப்பட்டதென்பதை படம் பிடித்துக் காட்டுகின்றது|| என்கிறார். ஆனால்இ ~கிடுகுவேலி|யில் யாழ்ப்பாண இளைஞர் தமது சகோதரிக்காக உழைக்க வெளிநாடு செல்வதையும் இதனால்இ தனது மனைவியருடன் முரண்படாது சமாளிப்பதையும் வெளிநாட்டுப் பணத்தால் யாழ்ப்பாணப் பழக்கவழக்கங் கள் மாற்றமடையத் தொடங்குவதையுமே காட்டுகின்றது. அன்றைய யாழ்ப்பாணப் பண்பாட்டை அறிய செங்கை ஆழியானின் வேறு நாவல்களையும் செ.யோகநாதனின் ~நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே|| செம்பியன் செல்வன்இ கே.டானியல் போன்றோரின் நாவல்களை வாசிப்பது பயன்தரும்.வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த நு}லகங்கள் அமைக்கப்படுவதையும்இ பல நு}ல்களையும் வாசிக்க வேண்டுமென கட்டுரை ஆசிரியர் குறிப் பிடுகிறார். பொதிகையிலும்இ சன் ரீவியிலும் தொடர்நாடகங்களையும் திரைப் படங்களையும் பார்க்கும் எங்கள் யாழ்ப்பாணப் பெற்றோரின் பிள்ளைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை எதிர்பார்ப்பதெவ்வாறு?
~நாயகி வாசா||
15இ 3ஆம் குறுக்குத்தெருஇ
கொழும்புத்துறை.தேவ. முகுந்தன்.