02-09-2005, 05:55 AM
ganesh Wrote:பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் தொகையைக்கட்டுப்படுத்துவதற்காக ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்துபுதிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளன இதற்காக நேற்று நடைபெற்ற பாராளுமன்றகூட்டத்தில் இணக்கம்காணப்பட்டுள்ளது இதன்படி படித்த ந்ல்லதொழில்
புரிபவர்களக்கு உதாரணமாக வைத்தியர் சட்டத்தரணி பொறியியலாளர் போன்றவர்களக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது அத்துடன் ஆங்கிலமொழியை
கற்றுநல்ல வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது
ஆனால் உண்மையான அகதிகளுக்கு முன்னுரிமை இனிவரும் காலங்களில் வழங்கப்படுமா என்பது சந்தேகமே? உங்கள் கரத்தை எழுதுங்கள்
வைத்தியர், சட்டத்தரணி, பொறியியலாளர் போன்றவர்களக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதன் காரணம் அந்த தொழில் செய்பவர்களுக்கு பிரித்தானியாவில் தட்டுப்பாடு இருப்பதே.
அகதிகளை இந்த நாடுகள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தது 2ம் உலக யுத்தத்தின் போது இந்த நாடுகளில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதால் ஆட்பற்றாக்குறை ஏற்பட்ட அதே வேளை கம்யூனிச நாடான ரஷ்யா பல ஐரேப்பிய நாடுகளை கைப்பற்றியதால் அங்கிருந்து அகதிகள் வெளியேறியது தான். அந்த அகதிகளின் பிரச்சினை தற்போது முடிந்து விட்டதுதானே?
ஆசியா கண்டத்திலும், ஆபிரக்கா கண்டத்திலும் உள்ள நாடுகள் தமது அயல்நாடுகளின் அகதிகளை அதிக அளவில் ஏற்று மற்ற நாடுகளின் பொருளாதார சுமையை குறைக்க வேண்டும்.

