02-08-2005, 11:57 PM
பிராந்திய ரீதியான பூகோள அரசியல் நகர்வுகளை மாற்றிக்கொண்ட இந்தியா
-மார்வன் மக்கான் மார்கர்-
தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் கிழக்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த 12 நாடுகளையும் கடல்கோள் தாக்கி அவலத்துக்குள்ளாக்கிய ஒரு மாதகால எல்லைக்குள் இந்தியா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு புதிய அரசியல் நிலைப்பாட்டைப் பெற்றுள்ளது.
உருவாகிவரும் இந்தியாவினது இந்த நிலைப்பாட்டிற்கு அதிக வரவேற்பை ஷ்ரீலங்கா அரசாங்கம் அளித்துள்ளது. இந்த அனர்த்தத்தினால் இந்தியாவும் பாதிக்கப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாரம் தனது மருத்துவ உதவிப் பணிகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இந்திய மருத்துவக் குழுவொன்றிற்கு வட இலங்கையிலுள்ள திருகோணமலையில் கோலாகலமான பிரியாவிடை அளிக்கப்பட்டது.
இத்தீவின் வேறு பகுதிகளிலும் பெருமளவிலான இந்திய இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் இத்தகைய நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விழாக்கள் நடத்தப்பட்டன. இந்தியாவின் வானவில் நடவடிக்கையின் கீழ் நத்தார் தினத்திற்கு அடுத்த நாள் ஷ்ரீலங்கா கடல்கோளினால் தாக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்துள் இந்திய இராணுவத்தினரும் கடற்படையினரும் மீட்பு நடவடிக்கைக்காக வரத் தொடங்கினர்.
இந்தியாவின் உதவி ஷ்ரீலங்காவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என இராணுவ ஆலோசகர் இக்பால் அத்தாஸ் ஐ.பி.எஸ்.ஸுக்குக் கூறியுள்ளார். "இந்தியாவும் கடல்கோளினால் பாதிக்கப்பட்டாலும் அது இந்நாட்டுக்களித்த உதவிகளுக்காக மக்கள் அதனைப் பெரிதும் பாராட்டியுள்ளனர்"
ஆனால் இந்தியாவினால் அதனது அயல் நாடுகளுக்கு வழங்கப்பட்ட உதவி மனிதாபிமான நோக்கங்களுக்கும் அப்பாற்பட்டதாகவும் கருதப்படுகிறது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் வரலாற்றுப் பேராசிரியர் பெற்றாம் பஸ்தியாம் பிள்ளை ஒரு நேர்காணலில் கூறியதாவது லங்காவிற்கும் மாலை தீவுகளுக்கும் உதவ வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பம் தான் இப்பிராந்தியத்தில் அதிகளவு ஈடுபாடு காட்ட வேண்டும் என்ற அதனது மனநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது"
பூகோள அரசியல் அரங்கில் நியூடெல்லியினது ஆதரவுக்கரம் இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய வல்லரசுகளான சீனா ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றிடமிருந்து இத்தருணத்தில் வரக்கூடிய சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் ஒன்றாகும்.
பஸ்தியாம்பிள்ளை மேலும் கூறுவதாவது தனது ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் வேறு நாடுகள் காலூன்றுவதைத் தடுப்பதும் இந்தியாவின் செயற்பாடுகளுக்குக் காரணமாகும்.
கடல்கோள் அனர்த்தத்தினால் இரண்டாவது பெரிய தொகையான 38இ000 மக்களை இழந்த லங்காவிற்கு இந்தியாவின் உதவிக் கப்பல்கள்இ விமானங்கள்இ உலங்கு வானூர்திகளைக் கொண்ட இராணுவ கடற்படை உதவிகளுடன் மாத்திரம் நின்று விடவில்லை. இத்தீவின் கடற்கரைப் பிரதேசங்களைப் புனரமைக்க 23 மில்லியன் அமெரிக்க டொலர்களை அளிக்க இந்தியா முன் வந்துள்ளது.
கடந்த இரண்டு தசாப்த காலங்களிலும் இந்தியாவின் இரண்டு தலையீடுகளினாலும் உருவாகிய கசப்புணர்வு இரு நாடுகளுக்கிடையேயும் நீங்கியுள்ளது.
முதலாவதாக 1987 இல் இந்திய இராணுவ விமானங்கள் யாழ். நகரில் 25 தொன் நிறையுள்ள நிவாரணப் பொருட்களை வீசியுள்ளன. இது லங்கா படைகளினால் விடுதலைப் புலிகளுடன் தொடுக்கப்பட்ட தாக்குதலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட உதவியாகும். அப்போது புலிகள் யாழ்நகரைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
அதன் பின்னர் கொழும்புக்கும் டெல்லிக்கும் இடையிலான உறவு இலங்கையின் அரசுத் தலைவர்கள் இந்திய அரசை வெகுவாகச் சாடியதனால் மிகக் கீழ் நிலையை அடைந்திருந்தது. இலங்கையின் அரசுத் தலைவர்கள் இந்தியாவைப் பிராந்தியத்தின் சண்டியன் எனவும் நிந்தித்தனர்.
அதன் பின்னர் நியூடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்ட காலப்பகுதியில் உருவானது. இந்த இந்திய- லங்கா உடன்படிக்கை தீவின் வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. இவ்விரு மாகாணங்களிலும் ஒரு சுதந்திர தாயகத்தை உருவாக்கப் புலிப் போராளிகள் அத்தருணம் போராடிக் கொண்டிருந்தனர்.
ஆனால் இந்திய அமைதி காக்கும் படையுடன் விடுதலைப் புலிகள் மோதலில் ஈடுபட்டதனால் 1500 இந்தியப் படையினர் இறந்துள்ளதுடன்இ 3000 பேர் வரை காயமடைந்தனர். இலங்கை அரசாங்கம் இந்தியப் படையினருக்கு நன்றி கூறுவதற்குப் பதிலாக அவர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணித்தது.
அத்தாஸ் கூறுவதாவது "பழைய கசப்புணர்வுகள் கடல்கோளைத் தொடர்ந்து வந்த செயற்பாடுகளினால் நீங்கியுள்ளன. இரண்டு நாடுகளும் நெருங்கி வந்துள்ளன. இது இந்தியாவின் நன்மதிப்பை உயர்த்தும்"
இப்பிராந்தியத்தில் இந்தியாவின் நிலை கடல்கோளோடு சம்பந்தப்பட்ட இன்னொரு கொள்கையில் இன்னும் அதிகளவான சிறப்பைப் பெற்றுள்ளது. அதாவது இந்தக் கொல்லும் அலைகளினால் இந்தியாவின் தென் கிழக்குக் கரைகள் 9000 மக்களை இழந்துள்ள போதிலும் இந்தியா அந்நிய உதவிகளை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது.
இந்திய அரசாங்கம் கடல்கோள் பாதிப்பினால் ஏற்பட்ட 575 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டத்தையும் தானே ஏற்று ஈடுசெய்ய முன் வந்துள்ளது.
கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 12 நாடுகளில் 5300 மக்களை இழந்த தாய்லாந்து மாத்திரம் இந்தியாவைப் போன்று வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுத்துள்ளது. இந்தியாவைப் போன்று பாங்கொங்கினுடைய தீர்மானமும் தனது சொந்த அலுவல்களைத் தானே செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையையும் செருக்கையும் அடிப்படையாகக் கொண்டது எனலாம்.
அமெரிக்கப் படைகளுக்கும் அவர்களது நிவாரணப் பணிகளுக்கும் இலங்கையிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு 200000 பேருக்கு மேற்பலியான இந்தோனேஷியாவிலும் பாராட்டுகள் தெரிவிக்கப்படும் வேளையில் மாலை தீவுகளிலும் இலங்கையிலும் இந்தியா மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கைகளினால் அமெரிக்காவின் நிலையை விஞ்சியுள்ளது.
ஒரு இந்தியச் சஞ்சிகை கூறுவதாவது லங்காவினது அனர்த்தம் களைய நியூடெல்லி தாமதமன்றி செயற்பட்டமை தனது பிராந்தியத்தில் அமெரிக்கா முந்திக் கொள்ளக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகும்.
சைக்கற் டாற்றா "அவுற்லுக்கில்" எழுதுவதாவது பெரிய அளவிலான யூ.எஸ். உதவி இப்பிராந்தியத்திற்குச் செல்ல உள்ளது என்ற அறிக்கையை அறிந்தே நிவாரணக் கப்பல்களைத் துரிதப்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
டாற்றா மேலும் கூறுவதாவது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது நலன்களை நிலைநாட்ட வேண்டும் என்ற கொள்கையின் பிரகாரம் இந்தியா செயற்பட்டுள்ளது. இப்படிச் செயற்பட்டதனால் இந்த தென் இந்திய நாடு ஒரு மைல் கல்லை எட்டியுள்ளது. விமர்சகர்களின் கூற்றுப்படி இந்தியா தனது சுதந்திரத்தை 1947 இல் பெற்ற பின்னர் மிக அதிகளவிலான வெளிநாட்டு உதவித் தொகைகளை வழங்கியது இதுவே முதல் தடவையாகும்.
- ஐ.பி.எஸ்
நன்றி: தினக்குரல்