Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா பட தலைப்பு கமலுக்கு மீண்டும் பிரச்சினை
#1
சினிமா பட தலைப்பு கமலுக்கு மீண்டும் பிரச்சினை



சென்னை, பிப். 7- சினிமா பட தலைப்பில் கமலுக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடித்து தயாரிக்கும் -மும்பை எக்ஸ்பிரஸ், எஸ்.ஜே.சூர்யா தயாரித்து இயக்கும் -பெஸ்ட் பிரண்ட் ஆகிய 2 படங்களின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால் அதனை தமிழில் மாற்றி வைக்க வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ் பாதுகாப்பு இயக்க தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாசும் அறிவித்து உள்ளார். ஏற்கனவே கமல்ஹாசன் தயாரித்து இயக்கிய -விருமாண்டி படத்திற்கு முதலில் -சண்டியர்† என்று பெயர் வைத்தார். அதற்கு டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். முதலில் பெயர் மாற்ற மாட்டேன் என்று கமல் அறிவித்தாலும் பின்னர் -சண்டியர் என்ற பெயரை மாற்றி -விருமாண்டி என்று வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், -படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்பது சரி அல்ல. எதிர்த்து போராட்டம் நடத்தினால் அதை பார்த்துக்கொண்டு அரசு சும்மா இருக்காது என்று எச்சரித்திருந்தார்.

இதற்கிடையில் டைரக்டர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, டைரக்டர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் கருத்து தெரிவித்தபோது,-படங்களின் பெயர்களை எதிர்த்து போராட்டம் நடத்த திரையுலகம் அனுமதிக்காது என்று குறிப்பிட்டு உள்ளனர். எஸ்.ஜே.சூர்யாவிடம் கருத்து கேட்டபோது கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

கவிஞர் வைரமுத்து கூறும்போது,- தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பது உணர்வோடு ஊறியதாக இருக்க வேண்டும். அதேசமயம் படத்துக்கு தமிழில்தான்; பெயர் வைக்க வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை. நியூயார்க், பின்லேடன் என்று படங்களுக்கு பெயர் வைக்கும்போது அதை யாரும் எதிர்க்க முடியாது. ஏனென்றால் அதற்கு மாற்று பெயர் கிடையாது. ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் மட்டுமே அப்படம் வெற்றி அடையும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை என்றார்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
சினிமா பட தலைப்பு கமலுக்கு மீண்டும் பிரச்சினை - by Vaanampaadi - 02-07-2005, 01:20 PM
[No subject] - by Mathan - 02-07-2005, 04:53 PM
[No subject] - by Nitharsan - 02-07-2005, 06:13 PM
[No subject] - by Mathan - 02-07-2005, 06:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)