![]() |
|
சினிமா பட தலைப்பு கமலுக்கு மீண்டும் பிரச்சினை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சினிமா பட தலைப்பு கமலுக்கு மீண்டும் பிரச்சினை (/showthread.php?tid=5377) |
சினிமா பட தலைப்பு கமலுக்கு மீண்டும் பிரச்சினை - Vaanampaadi - 02-07-2005 சினிமா பட தலைப்பு கமலுக்கு மீண்டும் பிரச்சினை சென்னை, பிப். 7- சினிமா பட தலைப்பில் கமலுக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசன் நடித்து தயாரிக்கும் -மும்பை எக்ஸ்பிரஸ், எஸ்.ஜே.சூர்யா தயாரித்து இயக்கும் -பெஸ்ட் பிரண்ட் ஆகிய 2 படங்களின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால் அதனை தமிழில் மாற்றி வைக்க வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ் பாதுகாப்பு இயக்க தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாசும் அறிவித்து உள்ளார். ஏற்கனவே கமல்ஹாசன் தயாரித்து இயக்கிய -விருமாண்டி படத்திற்கு முதலில் -சண்டியர்† என்று பெயர் வைத்தார். அதற்கு டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். முதலில் பெயர் மாற்ற மாட்டேன் என்று கமல் அறிவித்தாலும் பின்னர் -சண்டியர் என்ற பெயரை மாற்றி -விருமாண்டி என்று வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், -படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்பது சரி அல்ல. எதிர்த்து போராட்டம் நடத்தினால் அதை பார்த்துக்கொண்டு அரசு சும்மா இருக்காது என்று எச்சரித்திருந்தார். இதற்கிடையில் டைரக்டர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, டைரக்டர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் கருத்து தெரிவித்தபோது,-படங்களின் பெயர்களை எதிர்த்து போராட்டம் நடத்த திரையுலகம் அனுமதிக்காது என்று குறிப்பிட்டு உள்ளனர். எஸ்.ஜே.சூர்யாவிடம் கருத்து கேட்டபோது கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். கவிஞர் வைரமுத்து கூறும்போது,- தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பது உணர்வோடு ஊறியதாக இருக்க வேண்டும். அதேசமயம் படத்துக்கு தமிழில்தான்; பெயர் வைக்க வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை. நியூயார்க், பின்லேடன் என்று படங்களுக்கு பெயர் வைக்கும்போது அதை யாரும் எதிர்க்க முடியாது. ஏனென்றால் அதற்கு மாற்று பெயர் கிடையாது. ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் மட்டுமே அப்படம் வெற்றி அடையும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை என்றார். - Mathan - 02-07-2005 கமலுக்கு ஜெயலலிதா பணம் - எதிரிகளின் புதிய அஸ்திரம் திடீர் தமிழ் காவலர்கள் தங்களை மதிக்காதவர்களுக்கு எதிராக சாம, பேத, தண்ட முறைகளை பயன்படுத்த தீர்மானித்து விட்டனர். அதன் முதல்கட்ட வதந்தி, கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்திற்கு ஜெயலலிதா பைனான்ஸ் செய்திருக்கிறார் என்பது. அரசியல்வாதிகளாவது பரவாயில்லை, தமிழ்த் தாய்க்கு சோறு போட்டே தீருவேன் என்று ஒற்றைக் காலில் நிற்கும் தங்கர்பச்சான், சீமான், புகழேந்தி தங்கராஜ் வகையறாக்களின் வயிற்றெரிச்சல்தான் தாங்கமுடியவில்லை. தயாரிப்பாளர்கள் விரும்பும் பெயர்களை தங்கள் படங்களுக்கு வைக்கலாம் என்ற முதல்வரின் உத்தரவு குறித்து, மகனுக்கு இத்தாலி பீட்ஸா வாங்கிக்கொடுக்கும் தங்கர்பச்சான் சொல்வதைக் கேளுங்கள்: "தமிழ் குறித்து விவாதம் ஏற்பட இந்த அறிக்கை வழி வகுத்திருக்கிறது. இதுவே தமிழுணர்வாளர்களுக்கு கிடைத்த வெற்றிதான். முதல்வரின் அறிக்கை எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தவில்லை. 'வலி'யில்தான் மகிழ்ச்சி பிறக்கும். இப்போது 'வலி' வந்துவிட்டது. சீக்கிரமே மகிழ்ச்சி வரும்" என்று குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கதை பேசியிருக்கிறார். சீமான் தனது ட்ரேட் மார்க் 'மைக் முழுங்கிய' குரலில் 'நியூ' படத்தையும், '7ஜி ரெயின்போ காலனி' படத்தையும் திட்டி தீர்க்கிறார். இந்த இரு படங்களிலும் தமிழ்க் கலாச்சாரம் காணவில்லை என்பது இவர் குற்றச்சாட்டு. யதார்த்த தமிழ்நாட்டில, நாளைக்கு மூன்று கள்ளக்காதலர்கள், கற்பழிப்புகள் நடந்து கொண்டிருக்கும்போது, சமூகத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களில் கண்ணகிகளையும், ராமன்களையும் இவர்கள் எதிர்பார்ப்பது... இவர்கள் எத்தனை தூரம் போலிகள் என்பதற்கு சின்ன உதாரணம். இவர்கள் அணியிலிருந்து இப்போது கிளம்பியிருக்கும் வதந்திதான் நாம் முதல் பாராவில் சொன்னது. 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்திற்கு முதல்வர் எட்டுகோடி ரூபாய் பைனான்ஸ் செய்திருக்கிறார். ஆகவே தான் இந்த கரிசனம் என புதுக்காமெடி கதையொன்றை பரப்பி வருகிறார்கள். பத்த வைத்த வதந்தி வெடிக்குமா இல்லை பத்த வைத்த கையை கடிக்குமா? விரைவில் தெரியவரும்! சினி சவுத் - Nitharsan - 02-07-2005 உங்களுக்கு சினிவுத்தை விட நல்ல தமிழ் எதிர்ப்பு இணையம் கிடைக்கேல்லையே! நேசமுடன் நிதர்சன் - Mathan - 02-07-2005 உங்களுக்கு ஏதும் தெரியுமா? சொல்லுங்களேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|