02-05-2005, 02:35 PM
kuruvikal Wrote:[quote=tamilini]
குந்தியவள் தாயாய் வந்தாலும்
பாசத்தைக் காட்டி பாவத்தைச்
செய்த வேடதாரி
கண்ணனின் வேவுக்காரி
கர்ணனின் பலம் தின்று
அவன் பசுமை அளித்த பாதகி...!
பாண்டவர் பலம் கூட்ட
பதறமால் தன் மகவை
பாதாளத்தில் தள்ளியவள்...!
கர்ணனின் புகழ் அவன் தர்மத்துக்கு
குந்தி மகன் என்பதற்காய் அல்ல...!
காளை என் புகழ்
என்னவள் மலரதே
கண்டவளும் தந்ததல்ல...
தரவல்லதல்ல...!
சரி குந்தி பாசத்தை காட்டி பாவத்தை
செய்திட்ட வேடதாரியாக இருக்கட்டும்.
அதற்கேன் வந்தவளை குந்திஎன சுட்டுகுன்றீர்?
வளி தவறி வந்தவளை அன்பாக
போ என்று சொன்னால் போய்விடுவாள்.
வளிதவறி வந்தவளை குந்தி என அழத்ததுதான்
தவறு என சுட்டுகின்றேன். அன்புதான் அனைத்தையும்
துடைத்திடும் மருந்தென்பார். அவளிற்கு
அன்பாக சொல்லிவிட்டால், அவளாக போய்விடுவாள்.
குரிவிகளும் மலரோடு கூடி இருக்க வளிபிறக்கும்.
குருவிகளே குற்றம் என்று கண்டதனால் சுட்டி நின்றேன்
குறையேதும் நினைக்காதீர். குறைவில்லா நிறை மனதோடு
விடை பெறுகின்றேன் மதுன் நான்

