02-05-2005, 01:40 PM
tamilini Wrote:நீண்ட பயணத்தில களைச்சுப்போய் அந்த பொண்ணு ஆறியிருக்கு போல இடக்கு.. அது உங்கள் மனசில சஞ்சலத்தை ஏற்படுத்திருக்கோ.. அதைவிட குந்தி சமாதானத்தோட தானே வந்தவா தாயாய்...??? :wink:
களைத்தவள் வந்திருந்தால்
வசதியாய் அனுமதிகேட்டு
வாசலில் தங்கியிருக்க வேண்டும்
ஊடுருவல் சட்ட விரோதம்...!
சஞ்சலமா...
வஞ்சி இவள் வஞ்சகம் பண்ண
வசதி அளித்தால்
பசுமைதான் பாலை வனமாகுமே
அந்த நிலை தவிர்க்க
முன்னெச்சரிக்கை...!
குந்தியவள் தாயாய் வந்தாலும்
பாசத்தைக் காட்டி பாவத்தைச்
செய்த வேடதாரி
கண்ணனின் வேவுக்காரி
கர்ணனின் பலம் தின்று
அவன் பசுமை அளித்த பாதகி...!
பாண்டவர் பலம் கூட்ட
பதறமால் தன் மகவை
பாதாளத்தில் தள்ளியவள்...!
கர்ணனின் புகழ் அவன் தர்மத்துக்கு
குந்தி மகன் என்பதற்காய் அல்ல...!
காளை என் புகழ்
என்னவள் மலரதே
கண்டவளும் தந்ததல்ல...
தரவல்லதல்ல...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

