02-05-2005, 03:16 AM
<img src='http://img216.exs.cx/img216/4677/kagayaambiente1qp.jpg' border='0' alt='user posted image'>
<b>காரிகை நீ தேவதையோ
வானத்துத் தாரகையோ
வதனத்தில் வனப்போடு
வழிமாறி வந்தோயோ
வனம் காண வந்தோயோ
மனம் வந்து இருந்தாயோ
வந்த இடம் என் மனம் அறிவாயோ...?!
என் மனப் பசுமைக்குள்
இளைப்பாறக் கூட அனுமதியில்லை
ஆனால் நீ
குடியிருக்கத் திட்டம் தீட்டுறாய்...??!
மலையதுவைக் கதவாக்கி
தென்றலைக் காவல் வைத்து
உதயத்து ஆதவனை விளக்காக்கி
அலையதுவை ஒற்றனாக்கி
கடுங்காவல் போட்டு வைத்தும்
எப்படி நுழைந்தாய் என் மனவாசல்...!
குந்தி விட்டாய்
குந்தியாய் இருந்து
குதர்க்கம் பண்ணாமல் புறப்படு....!
நான் ஒன்றும் கர்ணன் அல்ல
தர்மம் காக்க சத்தியம் தர
தர்ம பத்தினியாய் மலரவள்
குடியிருக்கிறாள் இங்கே...!
தலை தப்ப காலம் விதிக்கிறேன்
காளைதன் பசுமை கலைக்காது
வெளியேறு....
இன்றேல் என்னவள் படை
உன் கதை முடிக்கும்...!</b>
நன்றி - http://kuruvikal.yarl.net/
<b>காரிகை நீ தேவதையோ
வானத்துத் தாரகையோ
வதனத்தில் வனப்போடு
வழிமாறி வந்தோயோ
வனம் காண வந்தோயோ
மனம் வந்து இருந்தாயோ
வந்த இடம் என் மனம் அறிவாயோ...?!
என் மனப் பசுமைக்குள்
இளைப்பாறக் கூட அனுமதியில்லை
ஆனால் நீ
குடியிருக்கத் திட்டம் தீட்டுறாய்...??!
மலையதுவைக் கதவாக்கி
தென்றலைக் காவல் வைத்து
உதயத்து ஆதவனை விளக்காக்கி
அலையதுவை ஒற்றனாக்கி
கடுங்காவல் போட்டு வைத்தும்
எப்படி நுழைந்தாய் என் மனவாசல்...!
குந்தி விட்டாய்
குந்தியாய் இருந்து
குதர்க்கம் பண்ணாமல் புறப்படு....!
நான் ஒன்றும் கர்ணன் அல்ல
தர்மம் காக்க சத்தியம் தர
தர்ம பத்தினியாய் மலரவள்
குடியிருக்கிறாள் இங்கே...!
தலை தப்ப காலம் விதிக்கிறேன்
காளைதன் பசுமை கலைக்காது
வெளியேறு....
இன்றேல் என்னவள் படை
உன் கதை முடிக்கும்...!</b>
நன்றி - http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

